வேலூரில் கால் வைத்த நடிகை நமீதா.. என் குழந்தைக்கு சூப்பர்மேன் தெரியாது! ஜெய் ஹனுமன் மட்டுமே தெரியும்
வேலூர்: நான் யோகா செய்தது கிடையாது, ஏனென்றால் என் பெற்றோருக்கு அது பற்றின புரிதல் இல்லாமல் இருந்தது. தெரிந்திருந்தால் நானும் உடலை கட்டுப்பாட்டோடு வைத்திருந்திருப்பேன். அனைவரும் யோகா செய்யுங்கள். அது மனதிற்கும் உடலுக்கும் மிகவும் நல்லது. என் குழந்தைகளுக்கு சிலம்பம் உள்ளிட்டவற்றை கற்றுக் கொடுக்கிறேன் என்று பிரபல நடிகை வேலூர் மாவட்டத்தில் நடந்த விழா ஒன்றில் பேசியிருக்கிறார்.
தற்போதைய மத்திய அமைச்சர் எல்.முருகன் அன்று மாநில தலைவராக இருந்தபோது, ஜே.பி. நட்டா முன்னிலையிலேயே கட்சியில் இணைந்தார் நடிகை நமீதா.. இதையடுத்து தமிழக பாஜக செயற்குழு உறுப்பினர் பொறுப்பும் நமீதாவை தேடி வந்தது.

நமீதாவுக்கு வந்த பொறுப்பு
இந்த பொறுப்பு வழங்கியது குறித்து செய்தியாளர்கள் அப்போது கேட்டதற்கு, "நாட்டு மக்களுக்காகவும், கட்சிக்காகவும் உழைத்தால் பதவிகள் தேடி வரும். எனவே பதவி வழங்குவதில் எந்த எதிர்பார்ப்பும் நான் வைக்கவில்லை, என்னை பொறுத்தவரை மக்கள் சக்தி தான் முக்கியம், ஒருவேளை அவர்கள் என்னை எம்.பி.யாக்கினால் நான் வேண்டாம் என்று சொல்லப்போவதில்லை என்று நமீதா கூறியிருந்தார்.
பிறகு "தாமரை மலர்ந்தே தீரும்" என்ற வார்த்தையை நமீதாவால் சரியாக உச்சரிக்க முடியாத வீடியோக்களும் இணையத்தில் அப்போது டிரெண்டாகியிருந்தன.
தேர்தல் பிரச்சாரங்கள்
இதற்கு பிறகு தேர்தல் சமயங்களில் மட்டுமே பிரச்சாரங்களில் தலையை காட்டி வந்தார் நமீதா.. அந்தவகையில், கடந்த தேர்தலின்போது, "தமிழகத்தில் இதுவரை ஆண்ட கட்சிகள் யாராவது, இந்த மக்களுக்கு வீடு கொடுத்துள்ளார்களா? ஆனால், மோடி அரச, ஒவ்வொரு தனி நபருக்கும் இந்தியா முழுவதும் வீடு தந்திருக்கிறது.. வீடு மட்டுமல்ல, குடிநீர் வசதி, கரண்ட் வசதி உட்பட எல்லா வசதிகளும் செய்து கொடுத்துள்ளது.
243 தொகுதிகளிலும், திமுக அரசு இதுவரை மக்களை சந்தித்து அவர்களின் தேவைகளை கேட்டுள்ளதா? ஆனால் அண்ணாமலையோ, அனைத்து தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் அடிப்படை தேவைகள் என்னென்னவென்று கேட்டிருக்கிறார்.. திமுக மக்களை பிரிக்கும் முயற்சியில் இறங்கிவிட்டது.. அவர்களின் தோல்வியும் உறுதி செய்யப்பட்டுவிட்டது.
காட்டுக்குள் யானையை எதிர்ப்பதற்காக, சிறு சிறு மிருகங்கள் எல்லாம் எப்படி ஒன்று சேருமோ, அதுமாதிரி இந்தியா கூட்டணியில் கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்துள்ளன.. இருந்தாலும், மோடி என்ற பெரும் மனிதரை அவர்களால் தோற்கடிக்க முடியாது" என்றெல்லாம் பேசியிருந்தார்.
யோகா நிகழ்ச்சி
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் நடந்த விழா ஒன்றில் நமீதா கலந்து கொண்டு பேசியது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. சர்வதேச யோகா தினத்தையொட்டி வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக பாஜக நிர்வாகி நமீதா கலந்துகொண்டார்.
பள்ளி மாணவ, மாணவியர் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோரும் இவ்விழாவில் கலந்துகொண்டு யோகா பயிற்சிகளை மேற்கொண்டனர்.. அப்போது நமீதா பேசியதாவது:
10 ஆண்டுகள் யோகா பிரபலம்
யோகா 5 ஆயிரம் வருட பாரம்பரியம் கொண்டது. 2007-ல் பாலிவுட் நடிகை கரீனா கபூர் யோகா மூலம் உடலை கட்டுப்பாடோடு வைத்த பின் தான் எங்கள் பல பேருக்கு யோகா பற்றி தெரிய வந்தது. கடந்த 10 ஆண்டாகத் தான் யோகா பிரபலமாகி வருகிறது.
நான் யோகா செய்தது கிடையாது, ஏனென்றால் என் பெற்றோருக்கு அது பற்றின புரிதல் இல்லாமல் இருந்தது. தெரிந்திருந்தால் நானும் உடலை கட்டுப்பாடோடு வைத்திருந்திருப்பேன். அனைவரும் யோகா செய்யுங்கள். அது மனதிற்கும் உடலுக்கும் மிகவும் நல்லது. என் குழந்தைகளுக்கு சிலம்பம் உள்ளிட்டவற்றை கற்றுக் கொடுக்கிறேன்.
என்னுடைய குழந்தைகளோடு நான் வீட்டில் ஆங்கிலத்தில் பேசுவது கிடையாது.. என்னுடைய தாய் மொழியில்தான் பேசுவேன். ஆங்கிலம் தெரிந்தால் நல்லதுதான். ஆனால் அதற்கு முன் கண்டிப்பாக தாய்மொழி முக்கியம். என் குழந்தைக்கு ஸ்பைடர் மேன், சூப்பர் மேன் எல்லாம் தெரியாது, ஜெய் அனுமன் மட்டுமே தெரியும். இதை நான் பெருமையாக தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications