தனுஷ் நல்ல நண்பராகத்தான் இருந்தார்! அந்த செயல் மனதளவில் பாதித்தது! கோபப்பட்ட காரணம் சொன்ன நயன்தாரா
சென்னை: நடிகை நயன்தாரா தன்னுடைய ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் திரைப்பட காட்சிகளை பயன்படுத்தியதற்காக தனுஷ் தன்னிடம் இழப்பீடு கேட்பதாக மூன்று பக்கத்திற்கு ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அது பற்றி சமீபத்தில் ஒரு youtube சேனலில் தான் எதற்காக கோபப்பட்டேன் என்று பேசி இருக்கிறார்.
நடிகை நயன்தாரா நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதுதான் விக்னேஷ் சிவனுக்கும் இவருக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் கடந்து 2022 ஆம் ஆண்டு மகாபலிபுரத்தில் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் திருமணம் அந்த நேரத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது.

நயன்தாராவின் திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதுபோல திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே வாடகை தாய் மூலமாக இரட்டை குழந்தைகளை பெற்றுக் கொண்ட நயன்தாரா அடிக்கடி சமூக வலைத்தளங்களில் பேசப்படும் நபராக மாறி இருக்கிறார்.
திருமண வாழ்க்கையில் தன்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளோடு எடுக்கும் புகைப்படங்கள் வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு கொண்டிருக்கும் நயன்தாரா கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனுஷ் பற்றி மூன்று பக்கத்திற்கு ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். இது பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
நயன்தாராவின் டாக்குமென்டரி படத்தில் நானும் ரவுடிதான் திரைப்படத்திலிருந்து மூன்று வினாடி காட்சிகளை பயன்படுத்தியதற்காக நடிகர் தனுஷ் தன்னிடம் 10 கோடி நஷ்ட ஈடு கேட்பதாக அதில் விமர்சித்து அறிக்கையை வெளியிட்டு இருந்தார் இதனைத் தொடர்ந்து தனுஷ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் நயன்தாரா ஹிந்தி யூடியூப்பில் பேட்டி கொடுத்து இருக்கிறார். அந்த பேட்டியில் தனுஷ் பற்றி தான் அப்படி ஒரு அறிக்கை வெளியிட்டதற்கான காரணம் என்ன என்பது பற்றியும் பேசி இருக்கிறார். அதில் நான் செய்யும் செயல் எனக்கு சரி என்று தோன்றும்போது நான் ஏன் மற்றவர்களை பார்த்து பயப்பட வேண்டும்.
பலரும் என்னுடைய படத்தை பிரமோஷன் செய்வதற்காக நான் பிஆர் ஸ்டண்ட் செய்தேன் என்று கூறி வருகிறார்கள். ஆனால் அதெல்லாம் உண்மை கிடையாது. எங்கள் காதல் அறிமுகமான இடத்தையும், அந்த தருணத்தையும் நினைவில் கொள்ள வேண்டும் என்பதற்காக தான் அதில் பயன்படுத்துகிறோம்.
நான்கு வரிகளுக்காக இப்படி ஒரு வழக்கு நிச்சயம் தேவையா? நான் நடிகர் தனுஷை சந்தித்து பேசுவதற்கு எவ்வளவோ முயற்சி செய்தேன். ஆனால் முடியவில்லை. அவருடைய நண்பர்களின் மூலமாக முயற்சி செய்ததும் நடக்கவில்லை. ஒரே ஒரு போன் கால் பண்ணி இருந்தா என்ன பிரச்சனை? இது எப்படி சரி செய்யலாம் என பேசி தீர்த்து இருக்கலாம்.
அதற்கெல்லாம் வாய்ப்பு கொடுக்காமல் இப்படி மோசமாக நடந்து கொண்டது என்னை மனதளவில் பாதித்தது. இவ்வளவு பெரிய நடிகர் ஏகப்பட்ட ரசிகர்களை வைத்திருக்கக் கூடிய தனுஷ் இப்படி ஒரு செயலை நிச்சயம் செய்ய வேண்டுமா? நாங்கள் சிறந்த நண்பர்களாக தான் இருந்தோம்.
ஆனால் திடீரென்று என்ன ஆனது என்று தெரியவில்லை. போன் காலை கூட எடுத்து பேசுவதற்கு அவரால் முடியவில்லை. எனது ஆவணப்படத்தில் பயன்படுத்தப்பட்ட காட்சிக்கு 10 கோடி நஷ்ட ஈடு கேட்டது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அதனால் தான் நான் அப்படி ஒரு கடிதம் எழுதினேன் என்று அந்த பேட்டியில் நயன்தாரா விளக்கம் கொடுத்திருக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications