அந்த 3 யூடியூபர்களும் 3 வகை குரங்கு! இது தான் தெரியும்! என்னை வச்சு சம்பாதிக்கிறாங்க!- நயன்தாரா
சென்னை: நடிகை நயன்தாரா ஹிந்தி யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்து இருக்கிறார். அதில் தன்னை தொடர்ந்து விமர்சித்து வரும் மூன்று யூடியூபர்கள் மூன்று வகை குரங்கு, அவர்கள் என்னைப் பற்றி பேசி தான் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
நடிகை நயன்தாரா பற்றிய செய்திகள் இணையத்தில் அதிகமாக அடிபட்டு வருகிறது. சில வருடங்களுக்கு முன்பு அவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டது பெரிய அளவில் பேசப்பட்டது. அதை தொடர்ந்து சில மாதங்களிலேயே வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றது குறித்து பேசப்பட்டது.

சமீபத்தில் தனுஷ் பற்றி நயன்தாரா வெளியிட்ட மூன்று பக்க அறிக்கை பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தது. சினிமா பிரபலங்கள் பலர் நயன்தாராவுக்கு ஆதரவாக வெளிப்படையாகவே லைக் கொடுத்திருந்தனர். அது போல அதிகமான ரசிகர்கள் நயன்தாராவிற்கு ஆதரவு கொடுத்தனர். தனுஷின் ரசிகர்கள் நயன்தாராவை திட்டி ட்ரோல் செய்து வந்தனர்.
இந்த நிலையில்
நயன்தாராவின் ஆவணப்படமும் வெளியானது. நயன்தாரா தன்னுடைய ஆவணப்படம் வெளியாவதற்காக தான் தனுஷ் பற்றி பெரிய குற்றச்சாட்டு வைத்தார் என்று கூட சிலர் பேசி வந்தனர். தனுஷ் மற்றும் நயன்தாராவின் பிரச்சனைக்கு கோர்ட்டில் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் நயன்தாரா சமீபத்தில் ஹிந்தியில் ஒரு youtube சேனலுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார். அப்போது தன்னை பற்றி பரவி வரும் வதந்திகள் மற்றும் பிரச்சனைகள் குறித்து பேசி இருக்கிறார். அதில் நான் என்னுடைய திருமணத்தை பணமாக்க நினைத்ததாக பலர் கூறுகிறார்கள்.
ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. எங்கள் காதல் மலர்ந்த தருணத்தையும், வாழ்க்கையில் உன்னத தருணத்தையும் நினைவு கூறவே இந்த ஆவணப் படத்தை எடுக்க நினைத்தேன். அதையும் சிலர் விமர்சித்தார்கள். நான் தனுஷுடன் பேசுவதற்கு பல முயற்சிகள் எடுத்தேன். ஆனால் அது சரியாக அமையவில்லை.
நான் தப்பு செய்யாததால் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. எங்களின் விளம்பரத்திற்காக ஒரு தனிப்பட்ட மனிதனின் பெயரைக் கெடுக்கும் அளவிற்கு நாங்கள் செல்லவில்லை. அப்படி செய்திருந்தால் மக்கள் எங்களுக்கு ஆதரவு தெரிவித்திருக்க மாட்டார்கள்.
அதோடு தன்னை பற்றி வதந்தி பரப்பும் யூடியூபர்கள் குறித்தும் நயன்தாரா பேசி இருக்கிறார். அதில், ஒரு மூன்று பேர் குழு இருக்கிறார்கள். அவர்கள் மிகவும் வேடிக்கையானவர்கள். அவர்களின் 50 வீடியோக்களில் 45 வீடியோக்கள் என்னை பற்றி தான் பேசி இருப்பார்கள். நான் அவர்களை மூன்று வகையான குரங்காக தான் பார்க்கிறேன்.
அப்படி சொல்வதற்கு என்னை மன்னிக்கவும். ஆனால் அந்த குரங்குகளில் ஒன்று கெட்டதை மட்டும் தான் பார்க்கும். ஒன்று கெட்டதை மட்டும் தான் கேட்கும், ஒன்று கெட்டதை மட்டும் தான் சொல்லும். இவர்கள் பிரபலமானவர்கள் ஆனால் எதற்காக என்னைப் பற்றி எப்போதும் அவதூறு பரப்புகிறார்கள் என்ற கேள்வி ஆரம்பத்தில் எனக்குள் இருந்து கொண்டே இருந்தது.
பிறகு எனக்கு தெரிந்தவர்களிடம் இது பற்றி நான் விசாரித்த போது தான் இவர்கள் என்னைப் பற்றி பேசுவதால் அவர்களுக்கு ஒரு நல்ல வருமானம் கிடைப்பதாக சொன்னார்கள். என் பெயரை வைத்து அவர்கள் சம்பாதிப்பது எனக்கு பிரச்சனை கிடையாது. ஆனால் என்னைப் பற்றி மட்டுமல்ல யாரைப் பற்றியும் அவர்கள் அப்படித்தான் பேசி சம்பாதிப்பார்கள்.
அவர்களுடைய வீடியோவை பார்க்கும் போதெல்லாம் எனக்கு சிரிப்புதான் வரும். அவர்கள் ஏதோ என்னுடைய அப்பா போல, என்னுடைய வாழ்க்கையில் எல்லா விஷயங்களையும் என் பக்கத்தில் நாற்காலி போட்டு அமர்ந்து பார்த்தது போல தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய வீடியோவை பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது என்று நயன்தாரா கூறியிருக்கிறார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications