ஒருவனுக்கு ஒருத்தி தான் பெஸ்ட்.. குழந்தைகள் என்ன பாவம் செஞ்சாங்க? நீலிமா கேட்ட நெத்தியடி கேள்வி
சென்னை: நடிகை நீலிமா பேட்டி ஒன்றில் தன்னுடைய கணவர் குறித்து பல தகவல்களை பேசி இருக்கிறார். அதோடு சமீபத்தில் பலருடைய மனநிலையில் ஒருவருக்கு ஒருத்தி என்று வாழ்வதெல்லாம் இப்போது கிரிஞ்ச் போல பார்க்கப்படுகிறது. இது உண்மையில் தவறான விஷயம் என்று நீலிமா தன்னுடைய ஆதங்கத்தை தெரிவித்து இருக்கிறார் அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என்று பல முன்னணி சேனல்களில் சீரியல்களில் நடித்து பிரபலமடைந்த நீலிமா ராணி ஒரு சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். குழந்தை நட்சத்திரமாக தேவர் மகன் திரைப்படத்திலிருந்து தன்னுடைய நடிப்பை தொடங்கி இப்ப வரைக்கும் தொடர்ந்து நடித்து வரும் நீலிமா ராணி பல வருடங்களுக்கு பிறகு சன் டிவியில் வானத்தைப்போல சீரியலில் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஒரு பேட்டியில் தன்னுடைய திருமண வாழ்க்கை மற்றும் சமுதாய நிலை குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் பலருடைய கருத்துக்களை பெற்று வருகிறது. அதில் அவர் பேசுகையில், என்னுடைய வாழ்க்கையின் எல்லா கட்டத்திலும் எனக்கு என்னுடைய கணவர் தான் உறுதுணையாக இருந்திருக்கிறார். அவருடைய ஆதரவு எனக்கு எப்போதும் அபரிமிதமாக இருந்திருக்கிறது.
இந்த காலகட்டத்தில் ஒருவரோடு நம்ம பழகுகிறோம் என்றால் நாளடைவில் அவருக்கும் நமக்கும் ஏதாவது கருத்து முரண்பாடுகள் ஏற்படும் போது அவரை விட்டு பிரிந்து செல்ல முடிவெடுக்கிறார்கள். இது தவறில்லை என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது. இந்த மாதிரி சிந்தனைகள் தான் இப்போது அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால் ஒருவருக்கு ஒருவர் என்று வாழ்வதல்ல இப்போது கிரிஞ்ச் போல பார்க்கப்படுகிறது.

இது உண்மையிலேயே மிகவும் தவறான விஷயம். நீங்கள் ஒருவருடன் பழகுகிறீர்கள் என்றால் நாளடைவில் அவருக்கும் உங்களுக்கும் காதல் உருவாகிவிடும் போது ஒரு கட்டத்தில் அவர்தான் உங்களுடைய பார்ட்னர் என்று முடிவெடுக்கிறீர்கள். இப்படி நீங்கள் முடிவெடுத்து விட்டால் அதற்குப் பிறகு என்ன நடந்தாலும் நீங்கள் அவரோடு தான் இருக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து.
இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் திருமணத்திற்கு பிறகு குழந்தைகள் வந்த பிறகு உங்கள் பிரிவை நீங்கள் மேற்கொள்ளும் போது அந்த குழந்தைகளின் வாழ்க்கையானது வேறு விதமான சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறது. அம்மாவும் அப்பாவும் பிரிந்து போன பிறகு அந்த குழந்தைகள் மகிழ்ச்சி இல்லாத சூழ்நிலைக்கு தள்ள உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. நீங்கள் ஒரு உயிரை மகிழ்ச்சியில்லாத சூழ்நிலைக்கு தள்ளலாமா?
நான் இவ்வளவு விஷயங்களை எதற்காக கேட்கிறேன் என்றால் என்னுடைய அப்பாவும் அம்மாவிற்கும் இடையே பயங்கரமான பிரச்சனைகள் நடக்கும், ஆனாலும் என்னுடைய அம்மா கடைசி வரை என் அப்பாவோடு தான் இருந்து வந்தார். அவர்கள் இருவரையும் பார்க்கும்போது இவர்கள் இருவரும் பிரிந்து இருந்தால் இன்னும் சந்தோஷமாக இருந்திருப்பார்களோ என்று கூட நாங்கள் நினைத்தது உண்டு. ஆனால் அது சரியான விஷயம் இல்லை என்பது எனக்கு வயதாக ஆகத்தான் புரிந்தது.
நானே என்னுடைய அம்மாவிடம் இப்படிப்பட்ட ஒரு அப்பா நமக்கு தேவையே இல்லையே என்று சொல்லி இருக்கிறேன். ஆனால் என்னுடைய அம்மா அப்பாவின் கடைசி வரை அவருடன் தான் இருந்தார். அவரை கடைசி வரைக்கும் விட்டுக் கொடுத்ததே கிடையாது. அதுபோல என்னுடைய கணவரை பற்றி நான் சொல்ல வேண்டும் என்றார். என்னுடைய கணவர் தான் என்னை வளர்த்தார் என்று சொல்லலாம். அவரை நான் கல்யாணம் செய்யும் போது எனக்கு 21 வயது தான்.
நான் அந்த நேரத்தில் எனக்கு எப்படி பேச வேண்டும்? யாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? எந்த மாதிரி உடை அணிய வேண்டும் என்று எதுவும் தெரியாது. எல்லாவற்றையும் என்னுடைய கணவர் தான் எனக்கு சொல்லிக் கொடுத்தார். இன்று நான் பலருக்கு மோட்டிவேஷன் கொடுக்கும் வகையில் இருக்கிறேன் என்றால் அதற்கு எனக்கு பல மடங்கு பாசிட்டிவிட்டியை என்னுடைய கணவர் தான் புகுத்தி இருக்கிறார்.
ஆனாலும் என்னுடைய கணவருக்கு என்னை விட 10 வயது வித்தியாசம் இருக்கிறது, அவர் எனக்கு அப்பா மாதிரி இருக்கிறார் என்று பலரும் பேசிக் கொள்கிறார்கள். ஆனால் நாம் திருமணம் செய்யும் போது ஒருவர் அதிக புரிதலோடும், இன்னொருவர் குறைவான புரிதலோடு இருப்பார்கள் இதுதான் நல்ல விஷயம் என்று நான் நினைக்கிறேன். அதனால் தான் எங்களுடைய வாழ்க்கை அழகாக பேலன்ஸ் ஆகிவிட்டது என்று அந்த பேட்டியில் நடிகை நீலிமா பேசியிருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பலர் நீலிமாவின் கருத்தை பாராட்டியும் சிலர் விமர்சித்தும் வருகிறார்கள்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications