பப்லு சூட்டிங் ஸ்பாட்டில் இப்படித்தான்! வெளியே தெரியாது! ஓபனாக பேசிய கண்ணான கண்ணே சீரியல் நிமிஷிகா
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான கண்ணான கண்ணே சீரியலில் கதாநாயகியாக நடித்து பிரபலமடைந்த நடிகை நிமிஷிகா அந்த சீரியலில் தனக்கு அப்பாவாக நடித்த நடிகர் பப்லு பற்றிய சில விஷயங்களை பேசி இருக்கிறார். இது இணையத்தில் பலருடைய கருத்துக்களை பெற்று வருகிறது.
நடிகர் பப்லு பல வருடங்களாகவே சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் சின்னத்திரைகளையும் விட்டு வைக்காமல் நடித்துக் கொண்டிருக்கிறார். அதேபோல அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கி கொள்கிறார். மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடிகர் சிம்புவோடு இவர் போட்ட சண்டை அந்த நேரத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது.

அதுபோல கடத்த வாரத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பான தமிழா தமிழா நிகழ்ச்சியில் ஜாதகத்தை நம்பும் பிரபலங்கள் மற்றும் நம்பாத பிரபலங்கள் என்ற தலைப்பில் விவாதம் நடந்தபோது கூட அதில் கலந்து கொண்டு பேசிய பப்லு நான் ஜாதகத்தை நம்ப மாட்டேன். என்னுடைய மகனுக்கு ஜோதிடர்கள் சொன்ன ஜாதகம் பழிக்கவில்லை என்று பேசி இருந்தார். அப்போது எதிரணியில் இருந்த நடிகை காதல் சந்தியா, நடிகை ரேகா நாயருடன் கருத்து மோதலிலும் ஈடுபட்டிருந்தார்.
அது மட்டும் அல்லாமல் கடந்த வருடத்தில் தன்னுடைய மகன் வயதில் உள்ள பெண்ணை தான் காதலிப்பதாக அந்த பெண்ணோடு பல youtube சேனல்களில் பேட்டி கொடுத்திருந்தார். அப்போது தன்னுடைய மனைவியை தான் விவாகரத்து செய்து விட்டதாகவும் தன்னுடைய மனைவி எனக்கு நல்ல தோழியாக இருந்தார் ஆனால் அவரால் நல்ல மனைவியாக இருக்க முடியவில்லை. எனக்கு இந்த வயதிலும் பெண் சுகம் கேட்கிறதா? என்று பலர் கேட்கிறார்கள்.. ஆனால் கேட்கிறதே என்ன செய்ய? என்று பேசியது பல விமர்சனங்களையும் சந்தித்தது.

அதற்குப் பிறகு தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களிலும் அந்த பெண்ணோடு எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு 90'ஸ் கிட்ஸ்களை வயிறு எரிய வைத்துக் கொண்டிருந்தார். ஆனால் சில மாதங்களுக்கு முன்பு இருவரும் ஜோடியாக எடுத்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் இருந்து டெலிட் செய்திருந்தனர். இது பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதை தொடர்ந்து பப்லுவிடம் அவருடைய காதல் பற்றி கேட்டதுக்கு நான் இதுவரைக்கும் என்னுடைய பர்சனல் விஷயங்களை பற்றி வெளிப்படையாக பேசியதுதான் என்னைப் பற்றி பலர் விமர்சிக்க காரணமாக அமைந்தது. அதனால் இனி என்னுடைய பர்சனல் பற்றி நான் வெளியே சொல்ல மாட்டேன் என்று கூறியிருந்தார். ஆனால் சில வாரங்களுக்கு முன்பு பப்லு காதலித்த பெண் தாங்கள் இருவரும் பிரிந்து விட்டோம். அவரோடு எனக்கு எந்த தொடர்பும் இப்போது இல்லை அவர் வாங்கி கொடுத்த கிப்ட் எல்லாம் நான் கொடுத்துவிட்டேன் என்று பேசி இருந்தார்.
இது ஒரு பக்கம் இருக்க பப்லு சன் டிவியில் ஒளிபரப்பான கண்ணான கண்ணே சீரியலில் அப்பா கேரக்டரில் நடித்திருந்தார். அவருக்கு பிடிக்காத மகளாக அந்த சீரியலில் நிமிஷிகா நடித்திருந்தார். நடிகை நிமிஷிகா சின்னத்திரையில் பல இளைஞர்களும் கொண்டாடும் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சமூக வலைத்தளத்திலும் இவருக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் கண்ணான கண்ணே சீரியல் முடிவடைந்த பிறகு சில மாதங்களாக இவர் தமிழ் சீரியல்களில் நடிக்காமல் இருந்த நிலையில் இப்போது மீண்டும் சன் டிவி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அந்த சீரியல் விரைவில் வெளியாக இருக்கிறது இந்த நிலையில் நிமிஷிகா youtube சேனல் ஒன்றில் தன்னுடைய சீரியல் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வுகள் குறித்து பேசி இருக்கிறார். அப்போது தன்னோடு சீரியலில் ஒன்றாக நடித்த பப்லு குறித்து பேசி இருக்கிறார். அதில் நிமிஷிகா பேசுவையில் பப்லு பற்றி பலர் பலவிதமாக சொல்லுவாங்க. ஆனால் அவர் உண்மையில் என்னிடம் ரொம்ப நல்லபடியாக பழகினார். ஷூட்டிங் ஸ்பாட்டில் எப்போதும் ஜாலியாக இருப்பார்.
அவர் பக்கத்தில் இருப்பவர்கள் எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கலாம். அந்த அளவிற்கு காமெடி செய்து கொண்டிருப்பார். அவர் யாரிடம் எப்படி என்று எனக்கு தெரியாது. ஆனால் என்னிடம் ரொம்பவும் நேர்மையாகவும் நம்பிக்கைக்குரிய வகையில் தான் இருந்தார். அவர் தன்னுடைய வாழ்க்கையை ஜாலியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஆனால் அவருக்கு லைப் பார்ட்னர் தான் அவர் எதிர்பார்த்தபடி கிடைக்கவில்லை.

அதனால் தான் அவர் மாறிக்கொண்டே இருக்கிறார் என்று நினைக்கிறேன். அவருக்கு சரியான வாழ்க்கை துணை இல்லாததால் பல பிரச்சனைகளையும் அவர் சந்தித்துக் கொண்டிருக்கிறார். நான் நடித்த சீரியலில் எனக்கு அவர் அப்பாவாக நடித்தார். ஆனால் சூட்டிங் ஸ்பாட்டில் ரொம்பவும் துரு துருவென இருப்பார். அவருக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் அவர் படுற கஷ்டத்தை பார்க்கும் போது எனக்கு கல்யாணமே பண்ண வேண்டாம் என்று எனக்கு தோணுகிறது என்று அந்த பேட்டியில் சிரித்தபடியே நிமிஷிகா பேசியிருக்கிறார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications