நிரோஷாவை அப்படி பார்த்ததுமே.. திணறிய ராதிகா.. "அம்மாவைவிட ஒருபடி மேல என் அக்கா".. கலங்கி சொன்ன தங்கை
சென்னை: நடிகை ராதிகா குறித்து நிரோஷாவும், நிரோஷா குறித்து ராதிகாவும் பகிர்ந்து கொண்டிருக்கும் கருத்துக்கள் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. "எந்த பிரச்சனையையும் துணிச்சலுடன் எதிர்கொள்பவர் என் அக்கா ராதிகா" என்று நிரோஷா தன்னுடைய பேட்டியில் பெருமைபட தெரிவித்துள்ளார்.
எப்போதுமே தன்னுடைய அக்கா ராதிகாவை உயர்த்தி பேசுவார் நடிகை நிரோஷா.. எங்கேயும் ராதிகாவை விட்டுக் கொடுத்ததே இல்லை.. அந்த அளவுக்கு ராதிகாவை தனக்கு பிடிக்கும் என்று, ஒவ்வொரு பேட்டிகளிலும் சொல்லி கொண்டே வருகிறார்.

நிரோஷா: சமீபத்தில்கூட ஒரு பேட்டியில் நிரோஷா சொன்னபோது, "என் அக்கா என்னை ரொம்பவே திட்டுவாங்க.. ஆனால் அவங்கதான் எனக்கு கைடன்ஸ்.. அக்காவின் தீவிரமான ரசிகை நான்.. என்னிடம் எப்போதுமே நிறைய அக்கறையோடு நடந்து கொள்வார்... அக்காவை பார்த்து தான் நான் வளர்ந்தேன்...
நான் அறிமுகமான அக்னி நட்சத்திரம் படம்கூட அக்கா நடிக்க வேண்டியதுதான்... ஆனால் அவங்க தான் என்னை நடிக்க சொன்னாங்க.. அந்த படத்துக்கு எனக்காக எங்க அக்கா தான் டப்பிங் பேசி இருந்தாங்க" என்றெல்லாம் நிரோஷா கூறியிருந்தார்.
நேர்காணல்: இந்நிலையில், ஜெயா டிவியில் நடிகை சுகாசினி நடத்திய நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் ராதிகா பங்கேற்றுள்ளார்.. அப்போது, ராதிகாவிடம் நிரோஷா பற்றி கேள்வி எழுப்பினார் சுகாசினி..
"30 வருஷம் முன்னாடி உங்களையும், நிரோஷாவையும் நான் பார்த்தேன்.. அதுபோலவே இப்பவும் இருக்கீங்க.. உங்களை அக்கான்னு கூப்பிடற மாதிரியே என்னையும் அக்கான்னுதான் நிரோஷா கூப்பிடுவாங்க.. அவங்களுடைய திரையுலக வளர்ச்சியை எப்படி பார்க்கறீங்க? என்று கேட்டார் சுகாசினி. அத்துடன், நிரோஷாவையும் இந்த நிகழ்ச்சிக்கு வரவழைத்து, ராதிகாவுக்கு என்ன வாழ்த்து சொல்ல விரும்புறீங்க" என்றும் கேட்டார். இதற்கு ராதிகா, நிரோஷா இருவரும் சொன்னது இதுதான்:
கமல் சார்: ராதிகா பேசும்போது, "நிரோஷாவை நான்தான் முதலில் போட்டோ எடுத்தேன்.. அந்த போட்டோவை நான் பார்த்து கொண்டிருந்தபோது, கமல் சார் இது யாருன்னு கேட்டாரு. என் சிஸ்டர்னு சொன்னேன். பிறகு, மணிரத்னம் கிட்ட, நிரோஷா போட்டோ தந்து, ராதிகா சிஸ்டர்னு சொல்லியிருக்கார். இதுக்கப்புறம்தான், மணிரத்னம் தன்னுடைய படத்தில் ஹீரோயினாக அறிமுகப்படுத்தினார்.
ஆனால், அந்த படத்தில் ஒரு பாட்டில், நிரோஷா நீச்சல் டிரஸ் போட்டது, எல்லாருக்குமே சங்கடமாக இருந்தது. ஏனென்றால், அந்த காலகட்டத்தில் நீச்சல் டிரஸ் என்றாலே, கொஞ்சம் கஷ்டப்படுவாங்க..
அக்னி நட்சத்திரம்: அப்போது மணிரத்னம் சார் என்கிட்ட வந்து, "நான் இந்த பாட்டை எடுத்து உங்களுக்கு போட்டு காட்டுகிறேன்.. ஒருவேளை உங்களுக்கு இது பிடிக்கலைன்னா, உடனே பாட்டை நான் மாத்திவிடுகிறேன் என்றார்.. ஆனால், அந்த பாடலை மிகச்சரியாகவே அவர் எடுத்திருந்தார். எனக்கு மிகவும் பிடித்த பாடலாக இன்றுவரை அது உள்ளது" என்றார்.
இதையடுத்து நிரோஷா பேசும்போது, "என் அக்கா, எனக்கு அம்மா மாதிரி.. என் அம்மாவைவிட ஒரு படி மேலேன்னு சொல்லுவேன்.. குடும்பத்தையே தோளில் சுமந்தவர்.. எங்களுக்கு அக்காதான் ரோல் மாடல்.. எப்பேர்பட்ட கஷ்டமான விஷயமாக இருந்தாலும்சரி, அதிலிருந்து பிரச்சனையை உதிர்த்துவிட்டு, மீண்டு எழுந்துவிடுவார்..
கண்ணீர்: எப்பவுமே இதே மாதிரி என் அக்கா சந்தோஷமா இருக்கணும் என்பதுதான் என்னுடைய ஒரே ஆசை" என்று வழியும் கண்ணீரை துடைத்து கொண்டே சொன்னார் நிரோஷா... இது பழைய பேட்டி என்றாலும், இப்போது மீண்டும் மறுஒளிபரப்பாகி , இணையத்திலும் வைரலாகி கொண்டிருக்கிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications