கண் மூடி தலை சாய்த்து.. மனதில் விழுந்த பவித்ராலட்சுமி... செம க்யூட்!
சென்னை: அழகு ராணியே என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் பவித்ராலட்சுமி, தற்போது புன்னகை போதும் பொன்நகை வேண்டாமென புன்னகை சிந்தியபடி கண்மூடி சிரிக்கும் குழந்தையை போல ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார்.
சினிமாக்களையும் சீரியலையும் பொறுத்தவரையில் நாளுக்கு நாள் புதுமுகங்களின் வரத்து அதிகமாகி இருந்துகொண்டிருக்கிறது.
அதிலும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் இல்லை என போட்டி போட்டுக் கொண்டு தங்களுடைய திறமையை நிரூபித்துக் கொண்டிருக்கும் போது சிலருடைய முகம் மட்டும் ரசிகர்கள் மனதில் ஆழமாகப் பதிந்துவிடும்.

அழகு சிரிப்பு
அந்த மாதிரி பெயரைச் சொன்னதுமே க்யூட்டான சிரிப்பு ஞாபகத்திற்கு வரும் பவித்ரா லட்சுமியை பலரும் க்யூட்லட்சுமி என்றுதான் அழைத்து வருகின்றனர். இவர் குறும் படங்களில் நடித்து வெள்ளித்திரையில் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகைகளுக்கு டப் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இவருடைய ஆல்பம் சாங் கூட இளைஞர்களின் மத்தியில் பெரும் வைரலாக வளம் வந்து கொண்டிருக்கிறது .

க்யூட் லட்சுமி
அதுவும் இவரும் குக் வித் கோமாளி மூலமாக பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் அஸ்வினும் இணைந்து நடித்த குறும்படம் இவருக்கு பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தி விட்டது .அதிலயும் "சீனியர் என்னை நல்லா பாத்தீங்களா ?அம்மா அப்பா இல்லாத பொண்ணு "என்று கியூட்டான சிரிப்போடு இவர் பேசிய வசனங்கள் தான் பலருடைய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ஆக இருந்து வருகிறது.

பெயர் வாங்கித் தந்த கோமாளி
குறும் படங்களைத் தொடர்ந்து இவருக்கு அதிகமான ரசிகர்களை பெற்றுத் தந்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் ரசித்து வருகின்றனர் .இதில் கலந்து கொள்ளும் கண்டஸ்டாண்டுகள் ஒருவ்வருக்கும் தனித்தனியாக பெரும் ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது .அதிலும் பவித்ராவிருக்கு அதிகமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.

சேட்டைகளும்
இவரும் புகழும் சேர்ந்து செய்யும் லூட்டிகளும் ,சேட்டைகளும் மனக் கவலையில் இருப்பவர்களையும் சிரிக்க வைத்துவிடும். இதனாலேயே இந்த நிகழ்ச்சி முடிவடைந்ததும் இதன் ரசிகர்கள் பலரும் இந்த நிகழ்ச்சிக்காக பீல் பண்ணி கொண்டிருக்கின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு ரசிகர்கள் இவர்களை காணாமல் தவித்து வந்த நிலையில் டிவியில் வராவிட்டால் என்ன நாங்கள் உங்களுக்கு இணையதளத்திலேயே தரிசனத்தை கொடுக்கிறோம் என தற்போது பவித்ரா வீட்டிலேயே மாடலிங் போட்டோ சூட்டை எடுக்க ஆரம்பித்துவிட்டார்.

கண்களால் சிரித்து
அவருடைய ஒவ்வொரு போட்டோஸ்களும் அவருடைய ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வரும் நிலையில் தற்போது பூட்டிய வீட்டு முன்பு நின்று கொண்டு கண்முடி சிரித்தபடி இருப்பதைப் பார்த்து ரசிகர்கள் ரசித்து ரசித்து கவிதைகளை கொட்டுகின்றனர். நெட்டிசன்கள் தங்கள் பங்குக்கு கலாய்த்து வருகின்றனர். அதிலேயும் சில ரசிகர்களுக்கு இவர் காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சிக்கு வரவில்லையே என்று வருத்தமாக இருக்கிறது.

பவித்ராவைக் காணலியே
குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிந்து விட்டது என்று சோகத்தில் இருக்கும் இவர்களுக்கு விஜய் டிவியில் மீண்டும் ஒரு காமெடி நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருவதால் இதில் விஜய் டிவி பிரபலங்கள் பலரும் கலந்து கொள்கின்றனர் .ஆனால் அதில் பவித்ரா கலந்துகொள்ளவில்லை என அவருடைய ரசிகர்கள் ரொம்பவே பீல் பண்ணி ஒற்றைக் கண்ணில் இருந்து நீர் வரும் சிம்பிளை சென்ட் பண்ணி இருக்கின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications