ராதிகாவை பார்த்தா பொறாமையா இருக்கு! குஷ்பூ செய்கிற விஷயம் வெளியே தெரியாது! நடிகை பூர்ணிமா பளிச்
சென்னை: நடிகை பூர்ணிமா பாக்யராஜ் சமீபத்தில் கலந்து கொண்ட பேட்டி ஒன்றில் நடிகை குஷ்பு மற்றும் ராதிகா குறித்து சில விஷயங்களை பேசி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
80ஸ் காலகட்டத்தில் நடித்த நடிகைகள் இப்போது சினிமா, சீரியல் என்று பிசியாகவே நடித்துக் கொண்டிருக்கின்றனர். ஒரு சில நடிகைகள் மட்டும்தான் எங்கே போனார்கள் என்று தேடும் நிலைமையில் இருக்கிறார்கள். ஆனால் நடிகை ராதிகா, குஷ்பூ, சுஹாசினி, பூர்ணிமா பாக்யராஜ், ராதா, அம்பிகா, நதியா போன்ற ஒரு சில நடிகைகள் தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதே நேரத்தில் அடிக்கடி 80ஸ் நடிகைகள் மீட்டிங் போட்டு தங்களுடைய நட்பை புதுப்பித்துக் கொண்டிருப்பதையும் காண முடிகிறது. 80ஸ் நடிகைகள் பலர் அடிக்கடி சந்திக்கும்போது எடுக்கும் புகைப்படங்களையும் தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்கள். அதிலும் ஒரு சில நடிகைகள் அப்போது இருந்த மாதிரியே எப்போதும் இருக்கிறார்கள். அந்த வரிசையில் நடிகை பூர்ணிமா பாக்கியராஜ் ஒருவர்.
ஆரம்பத்தில் பூர்ணிமா பாக்கியராஜ் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார். பிறகு பாக்யராஜை காதலித்து திருமணம் செய்ததும் சில வருடங்களாக சினிமாவில் இருந்து விலகி இருந்து இப்போதும் மீண்டும் சீரியல், சினிமாக்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அப்போது தனக்கு சமையல் தெரியாது என்று
சொல்லிக் கொண்டிருந்த பூர்ணிமா நடிகை ராதிகா மற்றும் குஷ்பூ பற்றியும் பேசி இருக்கிறார்.
அதில் பூர்ணிமா பேசுகையில், நான் திருமணத்திற்கு முன்பு பெரியதாக சமைப்பது கிடையாது. அதுபோல திருமணத்திற்கு பிறகும் சமைத்தது கிடையாது. நான் இதை பெருமைக்காக சொல்லவில்லை. நான் நடிக்கிறேன் அதனால் சமைக்கவில்லை என்று யாரும் நினைத்துக் கொள்ள வேண்டாம். எனக்கு சமைக்க தெரியாது, சமைத்தாலும் பெரியதாக அது சுவையாக இருக்காது.
அதனால் சமைக்கிறவர்களை பார்த்தால் எனக்கு கொஞ்சம் பொறாமையாகத்தான் இருக்கும். என்னுடைய தோழிகளில் சிலர் என்னைவிட பிசியாக நடிக்கிறவங்க இருக்காங்க. ஆனால் அவங்க அருமையாக சமைப்பாங்க. அதிலும் ராதிகா, குஷ்பூ எல்லாம் விதவிதமா சமைப்பாங்க. அவங்கள பற்றி வெளியே யாருக்கும் தெரியாது. அவங்களை பார்க்கும்போது நான் பொறாமைப்படுவேன்.
வெளியே என்னதான் ஷூட்டிங்கில் பிஸியாக அவர்கள் ஓடிக்கொண்டே இருந்தாலும் வீட்டிற்குள் அவர்கள் தான் சமைப்பார்கள். ஆனால் என்னால் அதுபோல செய்ய முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கிறது. ஆனால் எனக்கு சமைக்கிற திறமை இல்லை என்று தான் நான் சொல்லுவேன்.

ஆனால் என்னால் ஆடை வடிவமைப்பு போன்ற விஷயங்களில் விதவிதமாக யோசிக்க முடியும். புதுசு புதுசா என்னால் அதில் புதுமை செய்ய முடியும். கொரோனா காலகட்டத்தில் வீட்டில் வேலைக்கு யாரும் இல்லாத போது நானும் என்னுடைய மருமகள் கீர்த்தியும் தான் சமைத்தோம். எப்படியோ அந்த நாட்களை எல்லாம் ஓட்டி விட்டோம் என்று அந்த பேட்டியில் நடிகை பூர்ணிமா பாக்கியராஜ் பேசியிருக்கிறார்.
-
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications