திருமணத்தை பற்றி திடீர் அறிவிப்பு வெளியிட்ட பிரியா பவானி சங்கர்.. இப்பவாவது இந்த முடிவு எடுத்தாங்களே
சென்னை: நடிகை பிரியா பவானி சங்கர் தன்னுடைய திருமணம் எப்போது என்பது பற்றி சமீபத்தில் அறிவித்திருக்கிறார். இது இணையத்தில் அதிகமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. அதோடு தான் எதற்காக திருமணம் செய்வதை தவிர்த்து வந்தேன் என்பது பற்றியும் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக இருந்த பிரியா பவானி சங்கர் அதற்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்தார். அந்த நேரத்தில் தான் இவருக்கு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதிலும் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்த மேயாத மான் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

இந்த திரைப்படம் அவருக்கு பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்தது. அதைத் தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், ஹாஸ்டல், யானை, ஓமனப் பெண்ணே, திருசிற்றம்பலம் என அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டே இருக்கிறார். சமீபத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகியுள்ள டிமாண்டி காலனி 2 திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்திருக்கிறார். அதோடு இவருடைய கைவசம் நிறைய படங்கள் இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் இவர் நடிக்கும் திரைப்படங்கள் தோல்வி அடைந்து விடுகிறது, இவர் ராசி இல்லாத நடிகை என்று சிலர் மீம்ஸ் வெளியிட்டு வந்தனர். அது குறித்து தன்னுடைய வருத்தத்தையும் தெரிவித்து இருக்கிறார்.
அதோடு தன்னுடைய திருமணம் எப்போது என்பது பற்றியும் வெளிப்படையாக பேசியிருக்கிறார். அதாவது தான் கல்லூரி படிக்கும்போது இருந்தே ஒரு நபரை காதலித்து வருகிறேன். அவர்தான் நான் இந்த அளவிற்கு முன்னேறுவதற்கு உறுதுணையாக இருந்து வருகிறார். அவரை அடுத்த வருடத்தில் திருமணம் செய்ய இருக்கிறேன். இத்தனை நாட்களாக திருமணம் செய்யாமல் இருப்பதற்கு காரணம் சோம்பேறித்தனம் தான்.
திருமணம் நிச்சயம் ஆகிவிட்டால் வெட்டிங் பிளான் பண்ணனும், பர்சேஸ் பண்ணனும் என்று பல வேளை இருக்கிறது. அதனால் தான் அதற்கெல்லாம் பயந்து திருமணத்தை தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தேன். ஒருவேளை காலேஜ் முடிச்ச உடனே திருமணம் செய்து வைங்கன்னு சொல்லி இருந்தால் இந்த நேரத்தில் திருமணம் முடிந்திருக்கும் என்று நினைக்கிறேன் என்று சிரித்தபடி பிரியா பவானி சங்கர் பேசியிருக்கிறார்.
அதுபோல பிரியா பவானி சங்கர் சில வருடங்களுக்கு முன்பு பிரமாண்டமாக ஒரு வீடு கட்டி இருந்தார். அந்த வீட்டில் தன்னுடைய காதலரோடு அடிக்கடி போட்டோ சூட் புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருகிறார். அதோடு தன்னுடைய காதலனோடு வெளியே சுற்றுலா செல்லும் புகைப்படங்களையும் ப்ரியா பவானி சங்கர் ஏற்கனவே வெளியிட்டு இருக்கிறார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications