உடம்பு பூசணிக்காய்.. ஏன் அந்த ஆளு என்னையே உத்து உத்து பாக்குறான்? ராதிகா நடிப்பால் மலைத்த பாரதிராஜா
சென்னை: முதன்முதலில் ராதிகாவை நடிக்க அழைத்து சென்றபோது, ஷூட்டிங்கில் பூசணிக்காய் என்று கிண்டல் செய்தார்கள்.. வேறு யாரும் ஹீரோயின் கிடைக்கலியா? என்றும் கேட்டார்கள். ஆனால், 4 நாளைக்கு பிறகுதான் ராதிகாவின் நடிப்பை பார்த்து எல்லாருமே பிரம்மித்து போய்விட்டார்கள் என்று பாரதிராஜா கூறியிருக்கிறார்.
Chai with Chitra என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ள பிரபல டைரக்டர் பாரதிராஜா, கமலுடன் தனக்கு ஏற்பட்ட நட்பு குறித்தும், கிழக்கே போகும் ரயில் படத்தில் ராதிகாவை ஹீரோயினாக நடிக்க வைத்தது குறித்தும் பேசியிருக்கிறார்.. அதன் சுருக்கம்தான் இது

கமலுடன் ஏற்பட்ட நட்பு
"நான் சங்கரய்யா, இதயகனி எடுத்த ஏ.ஜெகநாதன் ஆகியோரிடம் அசிஸ்டென்ட்டாக வேலை பார்த்தேன்.. அப்போதே ஷாட் ஏதாவது தவறாகிவிட்டால், அதை கண்டுபிடித்து சொல்லிவிடுவேன். இதனால் எனக்கு நிறைய கேமராமேன் உள்ளிட்டோருடன சண்டை வந்துவிட்டது. அதேபோல, ஒரு படத்தில் ஜெயசித்ராவுடனும் சண்டை வந்தது.. அதனால் ஜெயசித்ரா இருந்தாலே, அந்த செட்டுக்கு என்னை வரவேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்.
ஆனால், அப்போதிருந்தே கமல் எனக்கு பழக்கம்.. தி.நகர் பனகல் பார்க் பக்கத்தில் வெங்கடேசுவரா கல்யாண மண்டபத்தில் ஒருநாள் நான் உட்கார்ந்திருந்தபோது, டான்ஸ் அசிஸ்டெனட்டாக கமல் அங்கு சிலருக்கு டிரெயினிங் தந்துட்டு இருந்தார்.. என்னை பார்த்ததுமே நீங்க யாருன்னு கேட்டார்.. நான் அசிஸ்டென்ட் டைரக்டராக வேலை பார்த்து கொண்டிருக்கிறேன் என்று சொல்லி அறிமுகமானேன்.
கமலின் வைராக்கியம்
அப்போது கமல் என்னிடம், "நான் நடந்து போனால், அத்தனை மக்களும் என்னை திரும்பி பார்க்கணும். அது இல்லாமல் சென்னையை விட்டு போகமாட்டேன்" என்றார். இந்த வைராக்கியம்தான் என்னை அப்போதே ஈர்த்தது.
அந்த நேரத்தில் இரவு பகல் பாராமல் கமல் வேலை பார்த்ததால், ஒருநாள் ரத்த வாந்தியாய் எடுத்தார். நான்தான், ஆழ்வார்பேட்டை வீட்டில் கூட்டிட்டு போய் விட்டுட்டு வந்தேன்.
அப்போதிருந்துதான் நாங்கள் நெருக்கமானோம். அதன்பிறகுதான் 16 வயதினிலே கதையை அவரிடம் சொன்னேன். இன்றுவரை கமல் எனக்கு பெட்ஸட் ஃபிரண்ட்.
கிழக்கே போகும் ரயில்
அதேபோல, கிழக்கே போகும் ரயில் படமும் கமல்ஹாசன், ஸ்ரீதேவி இருவரை வைத்துதான் எடுக்க நினைத்தேன். ஆனால், இவர்கள் 2 பேரின் தேதியும் எனக்கு கிடைக்கவில்லை. அதனால் மாதவியை புக் செய்ய நினைத்து, பிறகு, ஒரு பெரிய நடிகையின் சகோதரியை, அந்த படத்தில் நடிக்க புக் செய்திருந்தேன். ஆனால், எம்ஜிஆரிடம் நடிக்க அந்த நடிகை ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்ததால், அந்த பெண் வரவில்லை.. அதற்கு பிறகுதான் ஆல்பம் ஒன்றில், ராதிகாவின் போட்டோவை பார்த்தேன்.
ராதிகாவின் நடிப்பு
பெசன்ட்நகரில் இருந்த ராதிகா வீட்டுக்கு சென்று, அவரது அம்மாவிடம் பேசினோம். அப்போது ராதிகா நடிக்க மறுத்தார்.. அவரது அம்மாவிடம் விஷயத்தை சொல்லி கன்வின்ஸ் செய்து கொண்டிருந்தோம்.. திடீர்னு தன்னுடைய அம்மாவிடம் ராதிகா, "அந்த ஆளு ஏன் என்னையே உத்து உத்து பார்க்கிறான்" என்று சிங்களத்திலேயே கேட்டார்.
ஒருவழியாக ஹீரோயினாக நடிக்க முடிவாகி, மேட்டுப்பாளையம் ஷூட்டிங்குக்கு ராதிகாவை அழைத்து சென்றேன்.. பாக்யராஜ் உள்ளிட்ட அசிஸ்டென்ட்கள் என்னிடம், ஹீரோயின் வரலியா? என்று கேட்டாங்க.. இதுதான் ஹீரோயின் என்று ராதிகாவை காட்டியதுமே, எல்லாருமே ஷாக் ஆயிட்டாங்க. 4 நாளைக்கு பிறகுதான் ராதிகாவின் நடிப்பை பார்த்து எல்லாருமே பிரம்மித்து போய்விட்டார்கள் என்றெல்லாம் கூறியிருக்கிறார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications