போட்டுடைத்த ராதிகா.. ரப்பர் செருப்போடு வந்தாரா ரஜினி? அடடே சில்க் ஸ்மிதா இப்படிப்பட்டவங்களா? சூப்பர்
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து நடிகை ராதிகா தெரிவித்திருக்கும் கருத்துக்கள் ரசிகர்களை ஈர்த்து வருகின்றன.. அதேபோல, மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் சுமிதா போலவே, ராதிகா இமிடேட் செய்து பேசியிருப்பதும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
ஜெயா டிவியில், நடிகை சுகாசினியின் நேர்காணல் நிகழ்ச்சிக்கு, ராதிகா பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில், தன்னுடன் நடித்த நடிகைகள், நடிகைகள் பற்றியெல்லாம் விரிவாகவும், நெகிழ்ந்தும் கூறியிருக்கிறார்..

ரஜினிகாந்த்: அப்போது, நடிகை சில்க் சுமிதா மற்றும், ரஜினியுடன் நடித்த அனுபவம் குறித்து சுகாசினி கேள்வி எழுப்பினார்.
ரஜினி எல்லோரிடமும் நடிக்கும்போது, கொஞ்சம் இடைவெளிவிட்டுதான் இருப்பாரு.. ஆனால் ராதிகா என்றாலே கலாட்டா செய்வாரே.. அந்த அந்நியோன்யம் பற்றியும், அவரை நீங்கள் இமிடேட் செய்வதை பற்றியும் சொல்ல முடியுமா? என்று சுஹாசினி கேட்டார். அதற்கு ராதிகா சொன்னதாவது:
"படத்துல காட்டுற மாதிரியெல்லாம் சில்க் ஸ்மிதா கிடையாது.. ரொம்ப டிக்னிபைடு கேரக்டர்.. அவரை பார்த்து எல்லாரும் ஜொல்லு விட்டுட்டு இருப்பாங்களே தவிர, சில்க் பக்கத்துல யாருமே போக முடியாது..
ஷூட்டிங்: எனக்கு இன்னும் ஒரு சம்பவம் ஞாபகம் இருக்கு.. ஒரு ஷூட்டிங்கில் சில்க் ஸமிதா கால் மேல கால் போட்டுட்டு உட்கார்ந்துட்டு இருக்காங்க.. அப்போது ஒரு கம்பெனியிலிருந்து ஷூட்டிங்குக்கு சில்க்கை கூப்பிட வந்திருந்தாங்க.. பேமென்ட் அப்பறம் தந்துடறோம், ஷூட்டிங் வாங்க மேடம் என்று சில்க்கை கூப்பிட்டார்கள்.
அதற்கு சில்க், "நான் எதுக்காக வரணும்? எனக்கு மார்க்கெட் இருக்கு.. நீங்க கேமராவை கீழே வெப்பீங்க, மேல வைப்பீங்க.. நாளைக்கு எனக்கு மார்க்கெட் இல்லேன்னா நீங்க என்ன பண்ணுவீங்க? நீங்க பணம் கொடுங்க, நான் வரேன்"ன்னு சொல்லிட்டாங்க..
மிமிக்ரி செய்த ராதிகா: ஷூட்டிங்கில் இப்படித்தான் யாரோ மிளகாய் பஜ்ஜி சாப்பிட்டுட்டு இருந்தாங்க.. அவங்ககிட்ட போய் "அது என்னாது? மிளகான்னா என்ன? மிளகாய் பழமா?ன்னு கேட்பாங்க" என்று சொல்லி, அச்சு அசல் சில்க் சுமிதா போலவே பேசி காண்பித்தார் ராதிகா.
தொடர்ந்து ரஜினி பற்றி ராதிகா சொன்னபோது, போக்கிரிராஜா படத்துலதான் முதல்முதலாக ரஜினி கூட நடிச்சேன்.. போக்கிர ராஜா படத்தில்கூட அவர் அமைதியா இருப்பார். ஒரு பாட்டில், அவர் முதுகில் ஏறி நான் டான்ஸ் ஆடனும். புலியூர் சரோஜாதான் டான்ஸ் சொல்லி கொடுத்தாங்க.. அன்னைக்கு முழுவதும் அந்த சீன் எடுத்தாங்க.. சாயங்காலம் ஷூட்டிங் முடிந்ததுமே, எதுவுமே சொல்லாமல், கவிழ்ந்து படுத்துட்டாரு.
ரஜினியின் செருப்பு: ஒரு விழாவுக்கு ரப்பர் செருப்போட வந்தார் ரஜினி.. உடனே நான் அவரிடம், "நீங்க பெரிய நடிகர்தானே? சூப்பர் ஸ்டார்னு எல்லாரும் சொல்றாங்களே? என்னதிது செருப்பு?"ன்னு கேட்டுட்டேன். அதுக்கப்பறம் என்னை எங்கே பார்த்தாலும், உடனே தன்னுடைய செருப்பை ஒருமுறை பார்த்துப்பாரு ரஜினி..
கோச்சடையான் ஷூட்டிங்குங்கு லண்டன் போனப்போ, ரஜினி ஷு போட்டுட்டு வந்திருந்தாரு. "என்ன ரஜினி? ஷூ போட்டுட்டு வந்திருக்கீங்க போல"ன்னு சொன்னேன்.. "ஆமாமா,.. அதெல்லாம் கரெக்டா போட்டுட்டு வந்துட்டேன்"னு பதறிப்போய் சொன்னார்..
டப்பிங் : எப்பவுமே ரஜினி டப்பிங் போகும்போது நானும் டப்பிங் போயிடுவேன்.. ஏன்னா, அவர் தமிழ் பேசறப்போ, நான் பேசறது தூய தமிழ் மாதிரி இருக்கும்.. ரொம்ப வேகமாக டயலாக் பேசிடுவாரு.. திடீர்னு ஒன்னுமே புரியாது.. அப்பறம் சில வார்த்தைகளை நிறுத்தி நிதானமாக பேச சொல்லுவாங்க.. இதுமாதிரி அன்றிலிருந்து இப்போது வரை நட்பு தொடர்வது ரொம்ப சந்தோஷமா இருக்கு" என்று நெகிழ்ந்து சொன்னார் ராதிகா.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications