நல்லாத்தானே இருந்தாங்க ரம்பா.. அப்போ பிரபல நடிகையும் டைவர்ஸா? ஓஹோ, இதுதான் விஷயமா.. பரபரத்த இணையம்
சென்னை: பிரபல நடிகை ரம்பா, தன்னுடைய கணவரை விவாகரத்து செய்ய போவதாக வெளியான தகவல் மிகப்பெரிய பரபரப்பையும், அதிர்ச்சியையும், ரம்பாவின் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்த துவங்கிவிட்டது. இதுகுறித்து ரம்பா சொல்வது என்ன?
நடிகை திவ்யபாரதியின் மரணத்திற்கு பிறகு அவர் நடித்த படங்கள் பாதியில் நின்றுபோனதால், அவரைப்போல சாயல் இருப்பதாக கூறி விஜயலட்சுமியை திரை உலகிற்கு கொண்டு, நின்று போன படங்களை எல்லாம் முடித்து வெளியிட்டிருந்தனர் டைரக்டர்கள். திவ்யபாரதிக்கு டூப் போட வந்த விஜயலட்சுமிக்கு, ரம்பா என பெயர் மாற்றப்பட்டதையடுத்து, படங்கள் மளமளவென புக் ஆகின..

சிறிது காலத்திலேயே தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்தார் ரம்பா... பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார்..
அழகான குடும்பம்: புகழின் உச்சத்தில் இருந்தபோதே, 2010 -ம் ஆண்டு இந்திரகுமார் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்... இலங்கை தமிழரான இந்திரன் பத்மநாதன், மிகப்பெரிய தொழிலதிபராவார்.. திருமணத்துக்குபிறகு தம்பதி இருவரும் துபாயில் செட்டில் ஆனார்கள்.. இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் 3 குழந்தைகள் இருக்கிறார்கள்.
குடும்பத்தை கவனித்துக்கொள்ள வேண்டும் என்ற காரணத்தினால் சினிமாவில் இருந்து முழுமையாக விலகிய நிலையில், சில வருடங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு வெடித்தது.. ரம்பாவை அவரது கணவர் விவாகரத்து பெற உள்ளதாகவும் செய்திகள் வந்தன...
ஹைகோர்ட்: ஆனால், கணவரை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி, சென்னை ஹைகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார் ரம்பா... அதில், 2 பெண் குழந்தைகளுடன் தனியாக வாழ முடியவில்லை. குடும்ப வாழ்க்கையைத் தற்போது புரிந்துகொண்டுவிட்டேன். கருணை அடிப்படையில் தன் கணவருடன் தன்னைச் சேர்த்துவைக்க வேண்டும் என்று தன்னுடைய மனுவில் ரம்பா குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், ரம்பாவிடம் உள்ள குழந்தைகளை மீட்டுத்தரக் கோரி இந்திரன் மனு தாக்கல் செய்திருந்தார்... இறுதியில், நீதிமன்றம் இதில் தலையிட்டு அறிவுறுத்தியதையடுத்து, தம்பதியிடையே உள்ள பிரச்னையை சமரச மையத்தில் பேசி தீர்த்து வைக்கப்பட்டது... மனைவி ரம்பாவுடன் சேர்ந்து வாழ இருப்பதாக கணவர் இந்திரன் பத்மநாதன் சார்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, இந்த வழக்கும் முடித்து வைக்கப்பட்டது.
போட்டோக்கள்: அதற்கு பிறகு தம்பதி இருவரும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.. இவர்களது குடும்ப போட்டோக்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியையும் தந்து வருகிறது. இந்நிலையில், இந்த தம்பதி விவாகரத்து பெறப்போவதாக மறுபடியும் செய்திகள் கசிய துவங்கின.
ரம்பா மற்றும் அவருடைய கணவருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் இதனால் விவாகரத்து பெற்று பிரிய முடிவு செய்துள்ளதாகவும் பரபரப்பான தகவல்கள் வலம்வந்தன. ஏற்கனவே தமிழ் சினிமாவில் தம்பதிகள் விவாகரத்து பெருகிவரும் நிலையில், ரம்பாவின் விவாகரத்து செய்தியும் தீயாய் பரவியது.
முற்றுப்புள்ளி: ஆனால், உடனடியாக இதுகுறித்து ரம்பா பதிலளித்துள்ளார்.. அதில், "நானும் என் கணவரும் விவாகரத்து பெற இருப்பதாக வெளிவந்த தகவல்கள் அனைத்தும் பொய்யானது. கணவன் மனைவி என்றால் சண்டை இருப்பது சாதாரண ஒரு விஷயம் தான் அதை பெரிது படுத்தாமல் இருப்பது நல்லது. நாங்கள் எங்கள் குழந்தை வளர்ச்சியில் கவனம் செலுத்தி வருகிறோம்" என்று கூறி, பரவிவந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் ரம்பா
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications