நான் ஆரம்பத்தில் சினிமாவில் இதனால் தான் நடிக்கல.. தெய்வமகள் சீரியல் அண்ணியார் வெளிப்படையான பேச்சு
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் மூலம் பெரிய அளவில் பிரபலமடைந்த நடிகை ரேகா கிருஷ்ணப்பா தனக்கு ஆரம்பத்தில் சினிமா வாய்ப்பு வந்தபோது தான் எதற்காக சினிமாவில் நடிக்கவில்லை என்பது பற்றி பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். இது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
சீரியல்கள் ஆக இருந்தாலும் சரி சினிமாவாக இருந்தாலும் சரி சிலருக்கு தான் அந்த கேரக்டரின் பெயரை அடைமொழியாக வைத்தே ரசிகர்கள் கூப்பிடும் அளவுக்கு பாப்புலர் ஆகிறார்கள். அதுபோல தெய்வமகள் சீரியலில் காயத்திரி ஆக நடித்து அண்ணியார் என்று பிரகாஷால் செல்லமாக மற்றும் மிரட்டலாக கூப்பிட்டு தற்போது ரசிகர்களும் அவரை அப்படியே கூப்பிட்டு வருகின்றனர். தெய்வமகள் சீரியலுக்கு பிறகு அவர் பல சீரியலில் நடித்திருந்தாலும் அவர் இன்னமும் அண்ணியார் என்றே குறிப்பிடப்படுகிறார்.

இவர் பெங்களூரில் இரண்டு சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரர்களுடனும் பிறந்து பெங்களூருவில் பள்ளி கல்லூரியை முடித்து இருக்கிறார். கல்லூரியில் பிஏ மார்க்கெட்டிங்கில் படித்துக்கொண்டிருக்கும்போது இவருடைய தோழி தான் நடிப்பதற்கு ஊக்குவித்து இருக்கிறார். இவரும் அதற்காக அவர் பிரண்டோட ஒரு இயக்குனரை சென்று பார்த்திருக்கிறார்கள். ஆனால் அவர் அப்போது இவர் குள்ளமாக இருக்கிறார் என்று வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.
இவர் காலேஜ் முடித்ததும் அதே இயக்குனர் இவருக்கு நடிப்பதற்கு ஒரு வாய்ப்பு வழங்கி இருக்கிறார். அது மலையாள சீரியல் ஆன 'சேச்சி அம்மா 'அந்த சீரியலில் முதல் முதலில் இவர் வில்லியாக அறிமுகமாகியிருக்கிறார். அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 4 மொழிகளிலும் இவர் நடித்திருக்கிறார் .தமிழில் முதல் முதலில் அறிமுகமானது பாரிஜாதம். ஆனால் அந்த சீரியலில் அவரது கேரக்டரை விடவும் தெய்வமகள் சீரியல் மூலமாகத்தான் அவர் தமிழ் ரசிகர்களுக்கு நன்றாக தெரிய ஆரம்பித்தார்.
இவர் வசந்த் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவருடைய கணவர் ஒரு நடன இயக்குனர் காலேஜ் படிக்கும் போது இவருடைய பிரண்டு ஒரு பங்ஷனில் டான்ஸ் ஆடுவதற்காக வசந்தகுமாரிடம் டான்ஸ் கற்று இருக்கிறார், ஆனால் கடைசி நேரத்தில் இவருடைய பிரண்டால் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை. அதனால் வசந்தகுமார் ரேகாவிடம் நீ இதில் கலந்து கொள்கிறாயா என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவர் எனக்கு டான்ஸ் ஆட தெரியாது என்று கூறியிருக்கிறார். நான் சொல்லி தருகிறேன் என்று இவரும் டான்ஸ் சொல்லிக் கொடுத்து அந்த நிகழ்ச்சியில் வைக்க அவர்கள் டான்ஸ் ஆடியிருக்கிறார்.
முதலில் நட்பாக பழகிய இவர்களது பழக்கம் பின்பு காதலாக மாறி இரண்டு வீட்டாரின் சம்மதத்தோடு திருமணமும் முடிந்தது. தற்போது இவர்களின் காதலுக்கு அடையாளமாக ஒரு பெண் குழந்தை இருக்கிறது.அவருடைய மகள் அவர் தோளைத் தாண்டி வளர்ந்து பெரிய பெண்ணாக இருக்கிறார். இவருடைய குடும்ப போட்டோஸ்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வந்தது. இந்த போட்டோக்களை பார்த்த இவரின் ரசிகர்கள் இவ்வளவு பெரிய பொண்ணு இருக்கிறதா என்று ஆச்சரியப்படுகிறார்கள்.

தெய்வமகள் சீரியல் தொடர்ந்து நந்தினி சீரியலிலும் இவர் வில்லியாக வந்து அனைவரையும் கதிகலங்க வைத்திருந்தார். இவர் பல சீரியல்களிலும் படங்களிலும் நடித்து இருந்தாலும் எந்த சீரியலிலும் கிடைக்காத பெயரும் புகழும் தெய்வமகள் சீரியல் மூலமாக இவருக்கு கிடைத்தது. பலர் இந்த சீரியலில் இவர் நடித்துக் கொண்டிருக்கும்போது மீம்ஸ்களை போட்டு இவரை கலாய்த்துக் கொண்டு இருந்தார்கள். அதனாலேயே இவர் பிரபலம் ஆக மாறிவிட்டார். ஆனால் இவருக்கு ரம்யா கிருஷ்ணன் மாதிரி பெரிய வில்லி கேரக்டர் பண்ண வேண்டும் என்றுதான் ஆசையாம்.
படையப்பா படத்தை இவர் பலமுறை பார்த்து இருக்கிறாராம். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன் கேரக்டர் ரொம்பவும் பிடித்ததாம். தெய்வமகள் சீரியலில் இவர் பிரகாஷிடம் அடிக்கடி சண்டை போட்டுக்கொண்டிருக்கும்போது அவர் இவரை முறைத்துக்கொண்டு அண்ணியாரே என்று போடும் சபதங்களில் ரசிகர்கள் இவரை கழுவி கழுவி ஊற்றினாலும் இவருக்கென்று பல ரசிகர்கள் பட்டாளம் உருவாகிவிட்டது .சீரியலில் வில்லியாக நடித்திருந்தாலும் நிஜ வாழ்க்கையில் இவர் ரொம்பவும் அமைதியான டைப்பாம்.
இந்த நிலையில் ரேகா கிருஷ்ணப்பா பேசுகையில் நான் ஆரம்பத்தில் சீரியல் மூலமாகத்தான் நடிக்க தொடங்கினேன். ஆனால் அந்த நேரத்தில் எனக்கு அதிகமான சினிமா வாய்ப்பு வந்தது. ஆனால் அதில் நான் நடிக்கவில்லை. காரணம் அந்த நேரத்தில் நாம சினிமா போக வேண்டாம் சீரியல் மட்டும் நடித்து விட்டால் போதும் என்ற மனநிலை இருந்தது. அதற்கு பிறகு தொடர்ச்சியாக சீரியல் நடித்துக் கொண்டிருந்தேன்.
ஒரு கட்டத்தில் சீரியலில் வரும் கேரக்டர் எல்லாமே ஒரே போலவே எனக்கு இருக்க சீரியலில் இருந்து பிரேக் எடுக்க வேண்டும் என்று தோன்றியது. அதனால் ஒரு மூன்று வருடம் சீரியலை விட்டு விலகி சினிமாவில் நடிக்க தொடங்கினேன். அந்த நேரத்தில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தேன். அதற்குப் பிறகு இப்போது மீண்டும் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.
அதே நேரத்தில் ஒரு சில சினிமாக்களிலும் இப்போது நடித்துக் கொண்டிருக்கிறேன். நல்ல கேரக்டர் கிடைத்தால் கண்டிப்பாக தொடர்ந்து நான் சினிமாவில் நடிப்பேன் என்று அந்த பேட்டியில் ரேகா கிருஷ்ணப்பா பேசியிருக்கிறார். ஆனால் இவருக்கு தெய்வமகள் சீரியலுக்கு பிறகு அதுபோன்ற கெத்தான கேரக்டர் கிடைக்கவில்லையே என்பது இவருடைய ரசிகர்களின் வருத்தமாகவும் இருக்கிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications