Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரபல நடிகைக்கு இரண்டாம் கல்யாணம்? இந்த அரசியல்வாதி கணவரா? கட்சிக்குள் புகையுதா? இவர் சொல்றது நிஜமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக எம்எல்ஏ பிரபாகர் ராஜாவும், அவரது தந்தை விக்ரம ராஜாவும் வெளியில் பேசிக் கொள்கிறார்கள், ஆனால் வீட்டில் பேசிக் கொள்வதில்லை.. நடிகை ரேகாநாயர் உறவால், மீண்டும் திமுகவில் எம்எல்ஏ சீட் பிரபாகருக்கு தரப்படவாய்ப்பில்லை" என பேசிக் கொள்கிறார்கள்.. இத்தனை நாள் உடனிருந்த பல நண்பர்கள், தற்போது பிரபாகரிடம் உறவை முறித்துள்ளனர்" என்றெல்லாம் பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.. இவர் சொல்வது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.. ஆனால், திமுக மற்றும் சினிமா வட்டாரத்தில் மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் தந்துள்ள பேட்டி, கவனம் பெற்றுள்ளது.

King Voice என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பயில்வான் ரங்கநாதன், "விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக உள்ளவர் ஏஎம்வி பிரபாகர் ராஜா.. இவரது அப்பா ஏ.விக்கிரமராஜா, தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் தலைவராக இருக்கிறார்..

Television Actress Rekha Nair Politician

கருத்து வேறுபாடு

த.வெள்ளையன்தான் அனைத்து வணிகர்களையும் ஒன்றிணைத்தவர்.. தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, வணிகர்களை ஒன்றாக சேர்த்து, தமிழ்நாடு வணிகர் சங்கம் அமைத்தவர்.. இவரது சிஷ்யன்தான் விக்கிரமராஜா.. சென்னை மாவட்ட வணிகர் சங்க தலைவராக இருந்தார்.. வெள்ளையனுக்கும், விக்கிரமராஜாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில், வெள்ளையனிடமிருந்து பிரிந்து, தனியாக வணிகர் சங்கத்தை தொடங்கினார்..

திமுக ஆட்சி நடந்து கொண்டிருந்தபோது, எல்லா வணிகர்களின் கட்டிடத்துக்கும், தமிழில் பெயர்ப்பலகைகளையும் வைக்க வேண்டும் என்றார்.. இதையடுத்து திமுகவுடன் நெருக்கமானார் விக்கிரமராஜா.. இந்த நேரத்தில் இளைஞரணி தலைவராக இருந்தார் விக்கிரமராஜா மகன், பிரபாகர் ராஜா..

இதன்பிறகு திமுகவுடன் மேலும் நெருக்கத்தை ஏற்படுத்தி கொண்டு, கடந்த சட்டமன்ற தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டார் பிரபாகர் ராஜா. இதில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக உள்ளார்..

திடீர் விரிசல்

விக்கிரமராஜா, பிரபாகர் என இவர்களது குடும்பம் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள்..
ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை.. பிரபாகர் ராஜா திடீரென முருகர் பக்தரானார்.. வடபழனி கோயிலுக்கு தொடர்ந்து போக ஆரம்பித்தார்.. இதனால் தன்னுடைய விருப்ப கடவுளை, முருகர் போட்டோவை வீட்டில் வாங்கி வைத்தார் பிரபாகர்...

ஆனால், அவரது தாலி கட்டிய மனைவியோ, முருகர் போட்டோவை உடைத்துவிட்டார்.. இதுதான் தம்பதிக்குள் தகராறாக வெடித்து, இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார்கள்.. இந்த நேரத்தில் உள்ளே நுழைந்தார் நடிகை ரேகா நாயர்..

ரேகா நாயர்

விக்கிரமராஜா சொந்தமாக வைத்திருக்கும் ஜிம்முக்கு சென்று வருவார் பிரபாகர் ராஜா.. இந்த ஜிம்முக்கு ரேகா நாயரும் வந்து சென்றார்.. அப்போதுதான் பிரபாகரும், ரேகா நாயரும் நண்பர்களானார்கள்.. பிறகு காதலர் ஆனார்கள்.. இருவரும் பாங்காக் சென்றார்கள்.. பின்னர், மனைவியிடமிருந்து விவாகரத்து கேட்டார்..

ரேகாவை உடன் வைத்து கொண்டார்.. தான் பங்கேற்றும் எல்லா நிகழ்வுகளிலும் ரேகா நாயரையும் அழைத்து சென்றார்.. இணையதள பக்கத்தில் ரேகா நாயகரை, தன்னுடைய மனைவி என்று அறிவித்தார்.. இதுகுறித்து பலரும் அறிவுறுத்தியும் பிரபாகர், அவைகளை ஏற்கவில்லை

கூடியது அதிர்ஷ்டம்

"ரேகா வந்தபிறகுதான் தனக்கு அதிர்ஷ்டம் கூடிவிட்டது, திமுகவில் 2 மனைவிகள் புதிததல்ல, பலரும் 2 மனைவிகளை வைத்திருக்கிறார்கள்.. சந்தோஷமாகத்தான் இருக்கிறார்கள்" என்று சொன்னார் பிரபாகர் ராஜா..

கடந்த வெள்ளிக்கிழமை தன்னுடைய புதிய வீட்டின் கிரகப்பிரவேசம் நடந்தது.. இதற்கான அழைப்பிதழில், "பிரபாகர் ராஜா - ரேகா" அழைப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்கள்.. ஆனால், இந்த கிரகப்பிரவேசத்துக்கு மாண்புமிகு முதல்வரும், துணை முதல்வரும் கலந்து கொள்ளவில்லை..

பிரிந்த உறவுகள்

இதுகுறித்து திமுக நண்பர்களிடம் நாங்கள் விசாரித்தபோது, "2ம் திருமணம் செய்வதாக பிரபாகர் சொன்னது, திமுக மேலிடத்துக்கு பிடிக்கவில்லை.. இது விக்கிரமராஜாவுக்கும் பிடிக்கவில்லை.. சமீபத்தில் விக்கிரமராஜா இணையதள பக்கத்தில், பிரபாகர ராஜா, தன்னுடைய முதல் மனைவியுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட போட்டோவைதான் பதிவிட்டிருந்தார்..

பிரபாகர் ராஜாவும், விக்ரம ராஜாவும் வெளியில் பேசிக் கொள்கிறார்கள், வீட்டில் பேசிக் கொள்வதில்லை.. ரேகாநாயர் உறவால், மீண்டும் திமுகவில் எம்எல்ஏ சீட் பிரபாகருக்கு தரப்படவாய்ப்பில்லை" என்று பேசிக் கொள்கிறார்கள்.. இத்தனை நாள் உடனிருந்த பல நண்பர்கள், தற்போது பிரபாகரிடம் உறவை முறித்துள்ளனர்" என்றெல்லாம் பேசியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+