நானே ஒரு குத்து விளக்கு தான்.. நாகர்கோவிலில் ரேஷ்மா செய்த செயல்.. திகைத்துப் போன மக்கள்
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவாக நடித்து வரும் ரேஷ்மா நகைக்கடை ஒன்றில் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்திருக்கிறார்.
அப்போது அவருக்கு அங்கே வெள்ளிக் குத்து விளக்கு கொடுக்க, அதை வாங்க மறுத்து நானே ஒரு குத்துவிளக்கு எனக்கு எதுக்கு விளக்கு என்று கேட்டிருக்கிறார்.
பல பேர் கூடி இருக்கும் இடத்தில் ரேஷ்மா சொன்ன வார்த்தையை கேட்டு சிரிப்பு அலை ஒலித்து இருக்கிறது.

வெள்ளி திரையிலும், சின்னத்திரையிலும் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் ரேஷ்மா பசுபுலெட்டியை தெரியாதவர்கள் இருக்க முடியாது. திரைத்துறையில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்திலும் இளைஞர்களை பாடாய்படுத்தி தன் பக்கம் திருப்பிக் கொண்டிருக்கும் ரேஷ்மா, பிஸியோ பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அடிக்கடி நடிப்புக்காக மட்டுமல்லாமல் பல கடை திறப்பு விழாக்களுக்காகவும் பல ஊர்களுக்கு வலம் வந்து கொண்டிருக்கிறார்.
தற்போது ரேஷ்மா பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவை பாடாய்படுத்தி எடுக்க முயற்சி செய்து, ஒவ்வொரு முறையும் மொக்கை வாங்கிக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் ஜீ தமிழில் சீதாராமன் சீரியலில் மாஸான ஒரு பயங்கரமான வில்லியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் என்னதான் சீரியலில் வில்லியாக இருந்தாலும், வெள்ளி திரையில் புஷ்பா என்ற பெயரை சொன்னதும் பலருக்கும் மனமோ புஷ்பவனம் ஆக மாறிவிடும்.

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் புஷ்பா கேரக்டரில் பலருடைய மனதில் பதிந்த ரேஷ்மா, தற்போது நாகர்கோவிலுக்கு கடை திறப்பு விழாவிற்கு வந்திருக்கிறார். நகைக்கடையை திறந்து வைக்க வந்த ரேஷ்மாவை பார்க்க அங்கே மக்கள் வெள்ளம் அலைகடலென திரண்டு கடையை ரவுண்டு கட்டி இருக்கிறது. அந்த நேரத்தில் எப்போதும் போல குத்து விளக்கு ஏற்றி வைத்த ரேஷ்மாவிற்கு கடைக்காரர்கள் வெள்ளி விளக்கு பரிசாக கொடுத்திருக்கின்றனர்.
நடிப்பில் மட்டும்தான் டெரராக இருக்கும் ரேஷ்மா நிஜத்தில் ஒரு குழந்தை போல கலகலப்பாக பேசுபவர் தான். அதுபோல நகைக்கடையிலும், நானே ஒரு குத்துவிளக்கு எனக்கு எதற்கு இன்னொரு விளக்கு என்று இவர் பஞ்ச் வசனம் பேச, அங்கு வேடிக்கை பார்த்த வந்த மக்கள் எல்லாம் விழுந்து விழுந்து சிரித்து இருக்கின்றனர். கடையில் வேலைக்கு இருப்பவர்களோ, இதற்கு என்ன சொல்ல என்று தெரியாமல் திகைத்து இருக்கின்றனர். தற்போது இந்த கலகலப்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications