ரோஜா வீடியோ அதுகூடவா? புது பணக்காரன் இர்பான்.. அரசுக்கு தர்மசங்கடம்.. சாப்பிட்ட பில் எங்கே: பிரபலம்
சென்னை: இர்பானுக்கெல்லாம் எதற்கு பிரபலங்கள் பேட்டி கொடுக்கிறார்கள்? அவருடைய பிராண்டை புரமோட் செய்து கொள்ள எந்தவித பிரிபரேஷனும் இல்லாமல் இறங்குகிறார். சரியில்லாத ஒருவருக்கு எதற்கு பிரபலங்கள் இன்டர்வியூ கொடுக்க வேண்டும் என்று தொகுப்பாளினி விஜே பார்வதி தன்னுடைய கருத்தை கூறியிருந்தார். பார்வதியின் இந்த கருத்தை மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா வரவேற்றுள்ளார். அத்துடன், இர்பானை கடுமையாக விமர்சித்து பேட்டி ஒன்றை தந்துள்ளார். இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Realone Media என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சேகுவேரா, "விளம்பர வெறியராக இருக்கிறார் இர்பான்.. எவ்வளவு வேண்டுமானாலும் வருமானம் வரட்டும், ஆனால் குறைந்தபட்சம் எதிக்ஸ் வேணும்.. ஒரு விபத்து நடந்தபோது, அதில் வயதான பெண்மணி இறந்துவிட்டதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், இவரை பாதுகாப்பு செய்தார்கள்..

மா.சுப்பிரமணியம் சொன்னாரே?
ஏதோ ஒருவகையில் இர்பானுக்கு திமுக அரசு உதவியாக இருப்பதாக பரவலாக சொல்லப்பட்டு வருகிறது. கருவில் உள்ள குழந்தை ஆணா? பெண்ணா? என்று துபாயில் போய் டெஸ்ட் எடுத்து தெரிவித்தார்.. அதுவும் சர்ச்சையானது.. பிறகு குழந்தையின் தொப்புள் கொடியை கட் பண்ணியதாக மற்றொரு சர்ச்சை வெடித்தது. மா.சுப்பிரமணியம் நிச்சயம் இர்பான் மீது நடவடிக்கை எடுப்பதாக சொன்னார்.. ஆனால், கடைசிவரை எடுக்கவில்லை..
திமுகவுக்கு செல்லப்பிள்ளை
இப்படி எந்த விவகாரத்தின்மீதும் இர்பான் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.. இது பரவலான குற்றச்சாட்டாக அன்றிலிருந்தே உள்ளது. திமுக அரசுக்கு செல்லப்பிள்ளையாகவே இருந்தார். சிலநாட்களுக்கு முன்பு, கனிமொழியிடம் இதுகுறித்து கேள்வி கேட்டபோது, அந்த கேள்வியை கடந்துதான் சென்றார்.. ஆனால், இப்போது திமுகவில் எல்லாருக்குமே இர்பானால் நெருடலாக உள்ளது..
ஏற்கனவே பல பிரச்சனைகள் இங்கே இருக்கும்போது, இர்பானை எதுக்கு திமுக தூக்கி சுமக்கணும்? அரசுக்கு தேவையில்லாத தலைவலியைதான் தந்து கொண்டிருக்கிறார்? என்று தோன்றுகிறது.
நடிகை ரோஜா வீடியோ
ரம்ஜான் அன்று காரில் போகும்போதே உதவி செய்துள்ளார் இர்பான்.. தான தர்மம் செய்வதைகூட, பணிவுடன் செய்ய வேண்டும். குனிந்துதான் பிச்சைக்காரர்கள் தட்டில் காசு வேண்டும்.. வீசியெறியவது தர்மமாகாது.. பரம்பரை பணக்காரர்கள் இப்படி செய்ய மாட்டார்கள்.. இர்பானை பொறுத்தவரை புது பணக்காரன்.. திடீர் பணக்காரன்..
விஜே பார்வதி இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சில கேள்விகளை கேட்டுள்ளது நியாயமானதே.. என்னென்ன வீடியோ போடுவது என்று விவஸ்தை இல்லையா? என்னதான் செலிபிரிட்டியாக இருந்தாலும், எல்லாத்தையுமா வீடியோ போடுவது? சமீபத்தில் நடிகை ரோஜா வீடியோ ஒன்று பார்த்தேன்.. அந்தம்மா பெட்ஷீட்டிலிருந்து தூங்கி எழுவது, பல் துலக்குவது இப்படியெல்லாமா வீடியோ போடுறது?
பில் காட்டியிருக்கிறாரா இர்பான்
ஓட்டல் போய் சாப்பிடுவதையே ஒரு பிழைப்பாக வைத்து கொண்டிருக்கும் இர்பான், என்னைக்காவது சாப்பிட்டதுக்கு பில் காட்டியிருக்கிறாரா? புரமோஷனுக்காகவே ஓட்டலில் சாப்பிட்டாலும், புரமோஷனுக்கு வாங்கிய காசில், பில் கட்டலாமே? சாப்பிடற விஷயத்தை புரமோஷன் செய்வதே முதலில் தப்பு.. இப்படி ரிவ்யூ செய்யும் சாப்பாட்டில் பூச்சி, புழு வந்தால் அதற்கு இர்பான் பொறுப்பேற்பாரா? உணவு விஷயத்தில் விளையாடக்கூடாது..
டாக்டர் சிவராமன், உணவு விஷயங்களை பற்றி நிறைய பேசுகிறார், ஆனால், காய்கறிகளை இந்த கடையில் வாங்குங்க, தானியங்களை அங்கே போய் வாங்குங்க என்று ஒருபோதும் சொன்னதில்லை.. அவர் பேச்சில் டாக்டர் என்ற முறையில் எப்போதுமே ஒரு பொதுநோக்கம் இருக்கும்.. நாம எந்த வீடியோ போட்டாலும் இந்த உலகம் உற்று பார்க்கும் என்ற இர்பானின் தப்பான நம்பிக்கைதான் இதற்கெல்லாம் காரணம்.
அரசுக்கு யாரும் சங்கடத்தை தரக்கூடாது
ஓசியில சோறு சாப்பிட்டுட்டு, இது நல்லா இருக்கு, அது நல்லா இருக்குன்னு சொல்ல உங்களுக்கெல்லாம் வெட்கமா இல்லையா? திடீர் பணக்காரன் இர்பானால், இந்த ஆட்சிக்கு கெட்ட பெயர்.. அரசுக்கு யாருமே சங்கடத்தை தரக்கூடாது.
நீ யார் முதல்ல? சாதாரண ஒரு யூடிபர், அவ்வளவுதானே? பிரபலம் என்பதற்காக அரசுக்கு தொல்லை தந்து கொண்டிருக்க கூடாது. திமுக ஆதரிக்கிறது என்பதற்காக மக்களுக்கும் தொல்லை தருவதா? ஜமீன் பரம்பரை போல நடந்து கொள்ளும் இர்பானை நறுக்னு கேட்ட விஜே பார்வதியை பாராட்டணும்" என்று சொல்லி உள்ளார.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications