நல்லா பழிவாங்கிட்டாரு..விஷ்ணுகாந்த், ரவியை தொடர்ந்து ஹரீஷ் மீது சம்யுக்தா பகீர் புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: என்னை பழிவாங்கிவிட்டார் என ரவி, விஷ்ணுகாந்தை தொடர்ந்து ஹரீஷ் மீதும் நடிகை சம்யுக்தா குற்றம்சாட்டியுள்ளார்

வீட்டுக்கு வீடு வாசற்படி என்றாலும் ஒரு பிரபலம் வீட்டில் ஏதாவது பிராப்ளம் என்றால் அது பெரிய விஷயமாக தெரியும். அப்படித்தான் கடந்த சில தினங்களாக யூடியூபில் பெரிய பஞ்சாயத்தாக இருந்து வருகிறது விஷ்ணுகாந்த்- சம்யுக்தா விவகாரம்.

சின்னத்திரை நடிகர்களான விஷ்ணுகாந்தும் சம்யுக்தாவும் கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இப்படிப்பட்ட நிலையில் இருவரிடமும் 15 நாட்களாக பிரச்சினை ஓடிக் கொண்டிருக்கிறது.

Actress Samyuktha accuses Harish the director of web series

திருமணத்திற்கு பின்னரும் சம்யுக்தா தனது ஆண் நண்பர்களுடன் பேசி வருவதால் பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து விஷ்ணுகாந்த் பேட்டி அளித்திருந்தார். அப்போது அவர் சம்யுக்தா குறித்து நிறைய குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். ஆனால் இதற்கு சம்யுக்தா பதிலடி கொடுத்திருந்தார். அதில் விஷ்ணுகாந்த் கூறியது எல்லாமே பொய் என்றார்.

நான் மாதவிடாய் காலத்தில் இருந்தாலும் விஷ்ணுகாந்த் உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்பார். அவருக்கு 24 மணி நேரமும் அதுதான் முக்கியம். என்னுடைய உடல் எப்படி ஒத்துழைக்கிறது என்பதை பார்க்க மாட்டார். செக்ஸ் படங்களை பார்த்து அதில் அந்த பெண்கள் எப்படி செய்கிறார்களோ அதை போல் செய் என்பார் என சரமாரியாக குற்றச்சாட்டுகளை சம்யுக்தா முன் வைத்தார்.

அந்த வகையில் விஷ்ணுகாந்தை காதலிப்பதற்கு முன்பாகவே நடிகை சம்யுக்தா, ரவி என்பவரை காதலித்து இருக்கிறார். ரவி ஏற்கெனவே சம்யுக்தாவுடன் நிறைமாத நிலவே என்ற சீரியலில் நடித்திருந்தவர். உண்மையாகவே இருவரும் காதலித்திருக்கிறார்கள். சம்யுக்தாவிடம் ரவி எல்லை மீறியிருக்கிறார். இதுகுறித்து பொதுவான நபரிடம் சம்யுக்தா கூறியிருக்கிறார்.

Actress Samyuktha accuses Harish the director of web series

ஆனால் சம்யுக்தா தனது பெயரை கெடுக்கவே இப்படியெல்லாம் செய்கிறார் என ரவி தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சம்யுக்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டுள்ளார். அதில் அக்கா ஏன் ரவி அண்ணா மேல இப்படி தப்பு தப்பா பழி சுமத்துறீங்க. அவங்க அப்படி என்ன துரோகம் உங்களுக்கு பண்ணாங்க, ரொம்ப கஷ்டமாக இருக்கு. ரவி அண்ணா மேல இப்படி பழி சொல்லாதீங்க.

அவர் ரொம்ப நியாயவாதி. நானும் உங்களோட ரசிகர்தான். ரெண்டு கண்ணுல எந்த கண்ணு வேணும்னு கேட்டா நான் எப்படி சொல்வேன். நீங்கள் 2 பேரும் எனக்கு முக்கியம்தான். நீங்கள் ரவி அண்ணாவை காதலித்துள்ளீர்கள். ஆனால் அவர் உங்களை ஏற்கவில்லை என்பதற்காக இப்படியெல்லாம் தப்பு தப்பா சொல்லக் கூடாது.

அக்கா ஐ யாம் வெரி சேட் என பதவிட்டிருந்தார். இதற்கு சம்யுக்தா பதில் அளித்துள்ளார். ஒரு ரசிகராக உங்களுடைய உணர்வுகளுக்கு நான் மரியாதை கொடுக்கிறேன்.ஆனால் நான் அவர் கூட ஒரு வருஷம் பயணித்திருக்கிறேன். நாங்கள் ஆன் ஸ்கிரீனில் என்ன நடித்தோம் என்பது மட்டும்தான் தெரியும். நாங்கள் என்ன நடிச்சமோ அது மட்டும்தான் தெரியும்.

நான் என் அண்ணன்னு நெனச்சு ஒருத்தர்கிட்ட சொன்னேன். அவர்தான் கேவலமா ரெக்கார்ட் செய்து விஷ்ணுகாந்திற்கு அனுப்பி அதை அவர் மீடியால கொடுத்து இப்ப பெரிய நியூஸா போய்கிட்டு இருக்கு. ஒரு பொண்ணு வெட்கத்தை விட்டு ஓபனாக இதை சொல்ற நிலைக்கு வந்திருக்கானா, அவ எந்த கஷ்டத்துல இருக்கானு உங்களால புரிஞ்சிக்க முடியல.

ஆனாலும் ஓகே நான் எந்த பொய்யும் சொல்லல. பொய் சொல்றதுக்கான அவசியமும் எனக்கு கிடையாது என பதில் அளித்திருக்கிறார். இந்த ஆடியோவை வெளியிட்டது வேறு யாரும் இல்லை, இயக்குநர் ஹரீஷ். அவர் நிறைமாத நிலவே படத்தை இயக்கியவர். இதுகுறித்து சம்யுக்தா கூறுகையில் நிறைமாத நிலவே வெப்சீரியஸுக்காக எனக்கு இரு விருதுகள் கிடைத்தது.

ஆனால் இயக்குநருக்கு ஒரு விருதுகூட கிடைக்கவில்லை. அந்த பொறாமையால் என் மீதும் ரவி மீதும் கோபத்திலிருந்தார். எனவே தான் அந்த ஆடியோவை விஷ்ணுகாந்துக்கு அனுப்பி என்னையும் ரவியையும் கேவலப்படுத்தி பழிவாங்கி விட்டார் என சம்யுக்தா கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+