சூட்டிங் பார்க்க போன இடத்தில் பாக்கியராஜ் செய்த செயல்..! ஐயோ அது உண்மை இல்லை.. நடிகை சங்கீதா எமோஷனல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 90ஸ் ரசிகர்களின் ஃபேவரைட் நடிகைகளில் ஒருவரான நடிகை சங்கீதா முதல்முறையாக தான் எப்படி சினிமாவிற்குள் வந்தேன் என்பது பற்றியும் தன்னைப் பற்றிய வதந்திகளுக்கும் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

இந்த வகையில் தான் சூட்டிங் பார்க்க குழந்தையாக இருக்கும் போது தன்னுடைய அம்மாவோடு போன இடத்தில் தான் தனக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது என்பது பற்றி அவர் பேசி இருக்கிறார்.

Actress Sangeetha is emotional Pakiyarajs action at the place where he went to see the shooting

அதுபோல திருமணத்திற்குப் பிறகு தன்னுடைய கணவரோடு சேர்ந்து தானும் திரைப்படத்தை தயாரித்து வருவதாகவும் வெளியான வதந்திகளுக்கு சங்கீதா கொடுத்த விளக்கத்தையும் இந்த செய்தியில் பார்க்கலாம்.

அந்த வகையில் கவர்ச்சி மூலமாகத்தான் தன்னுடைய அழகை காட்டி ரசிகர்களை கவர முடியும் என்ற மாயையை உடைத்த ஒரு சில நடிகைகளில் நடிகை சங்கீதாவும் ஒருவர். இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அதிகமாக கவர்ச்சியாக நடிக்காமல் ஹோமிலியாகவும் பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போன்று இவர் நடித்து ரசிகர்களின் மனதில் பதிந்து போனவர்.

எட்டாம் வகுப்பு படிக்கும் போது நடிகர் ராஜ்கிரணுக்கு ஜோடியாக எல்லாமே என் ராசா என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். ஆனால் அதற்கு முன்பு ஒரு சில திரைப்படங்களிலும் சில சீரியல்களிலும் குழந்தை நட்சத்திரமாக சங்கீதா நடித்திருக்கிறார். அதுவும் இவர் குட்டி குழந்தையாக இருக்கும்போது ஒரு முறை இவருடைய அண்ணனுக்கு பக்கத்து வீட்டு நபரின் மூலமாக ஷூட்டிங்கில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அண்ணனை ஆடிஷனுக்காக அம்மா தான் கூட்டிக்கொண்டு போவதாக இருந்ததாம். உடனே வீட்டில் கடை குட்டியாக இருந்த சங்கீதா நானும் வருவேன் என்று அடம்பிடித்து கூடவே போயிருக்கிறார். அண்ணன் ஆடிஷனில் கலந்து கொண்டிருக்கும்போது இவர் அங்கே ஷூட்டிங் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது நடிகர் பாக்கியராஜ் இவரும் ஆடிஷனுக்கு தான் வந்திருக்கிறார் என்று நினைத்து இவரையும் செலக்ட் செய்து விட்டாராம்.

முதல் முதலாக மிஸ்டர் இந்தியா படத்தை ரீமேக் செய்வதற்காக சில குழந்தைகளை ஆடிஷனில் எடுத்திருக்கிறார்கள். அதில் தான் இவர்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள். பிறகு அந்த திரைப்படத்தில் இவர்கள் நடிக்கவும் செய்திருந்தார்கள். அதை தொடர்ந்து தான் சங்கீதாவிற்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் வந்திருக்கிறது. அதைத்தொடர்ந்து மீண்டும் லலிதா என்ற சீரியலில் இவர் கண்களில் ப்ளூ லென்ஸ் போட்டுக் கொண்டு நடித்திருக்கிறார்.

அந்த நேரத்தில் அது தான் திகில் சீரியலாக இருந்திருக்கிறது. இவர் நடித்த காட்சிகள் அடுத்த வாரம் எபிசொடில் வரும் போது இவரை அதை பார்த்து பயந்து இருக்கிறாராம். இப்படித்தான் தன்னுடைய நடிப்பு வாழ்க்கை தொடர்ந்து கொண்டிருந்தது என்று சங்கீதா பேசி இருக்கிறார். அதுபோல இவர் தான் நடித்து பிரபலமடைந்த பூவே உனக்காக திரைப்படத்தில் கேமராமேன் சரவணனைத் தான் காதலித்து திருமணம் செய்திருந்தார்.

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய கணவருக்காக நடிகர் சங்கீதா நடிகர் சிம்பு நடித்த சிலம்பாட்டம் திரைப்படத்தில் உதவி வேலைகளை செய்து கொண்டிருந்தார் என்று சில செய்திகள் பரவி வந்தது. அது குறித்து அந்த பேட்டியில் சங்கீதா விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில் சத்தியமா அப்படியெல்லாம் கிடையாது. அது எல்லாமே வதந்தி தான்.

நான் என்னுடைய கடவுளுக்கு செய்யும் ஒரே உதவி அவர்களுக்கு எந்த பிரச்சினையும் கொடுக்காமல் இருப்பது தான். நான் குடும்ப விஷயத்திலும் சரி அவருடைய வேலை விஷயத்திலும் சரி அதிகமாக அவருக்கு எந்த அழுத்தத்தையும் கொடுத்தது கிடையாது. எதுவும் தொந்தரவு கொடுப்பது கிடையாது.

அதனால் அவர் அவர் வேலையை செய்து கொண்டிருக்கிறார். அவரும் என்னையும் அவர் அப்படித்தான் பார்த்துக் கொண்டிருக்கிறார். அதனால் தான் எங்களுடைய திருமண வாழ்க்கை அப்படியே மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருக்கிறது என்று நடிகை சங்கீதா விளக்கம் கொடுத்திருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+