பாண்டியன் ஸ்டோர்ஸ் தங்கமயில் மருத்துவமனையில் அனுமதி.. காலில் விழுந்த அடி.. திடீரென வெளியான புகைப்படங்கள்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தங்கமயில் கேரக்டரில் நடித்து வரும் நடிகை சரண்யா துரோடி தன்னுடைய காலில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக தான் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார். இதற்கு பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.
தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தங்கமயில் கேரக்டரில் நடிக்கும் சரண்யா துரோடியை தான் ரசிகர்கள் அதிகமானோர் திட்டி தீர்த்து வருகிறார்கள். அவரை திட்டாத சீரியல் ரசிகர்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு இந்த சீரியலின் மூலமாக அதிகமான நெகட்டிவ்வர்ஸ்களை சம்பாதித்து கொண்டிருக்கும் சரண்யாவிற்க்கு யார் கண் பட்டதோ தெரியவில்லை காலில் பெரிய அடிபட்டுவிட்டது

காலில் ஏற்பட்ட காயத்திற்கு பெரிய கட்டு போட்டு சரண்யா மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருக்கிறார். சரண்யா துரோடி ஏற்கனவே தொகுப்பாளராக விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். அந்த நேரத்தில் தான் அவருக்கு நெஞ்சம் மறப்பதில்லை என்ற சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தது. முதல் சீரியலிலே டாக்டர் கேரக்டரில் நடித்து அதிகமான ரசிகர்களை கவர்ந்திருந்தார்.
தைரியமான மற்றும் ஜாலியான கேரக்டராக இவர் நடித்திருந்ததை தொடர்ந்து அடுத்தடுத்து இவருக்கு பெரிய அளவில் சீரியல் வாய்ப்புகள் வரும் என்று ரசிகர்கள் நினைத்திருந்தனர். அந்த நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் விரைவில் முடிவடைந்துவிட்டது. அது சரண்யாவை மிகவும் பாதித்திருக்கிறது.
அதற்குப் பிறகு விஜய் டிவியில் பல வாய்ப்புகள் வந்தது ஆனாலும் அதில் எல்லாம் நான் நடிக்கவில்லை என்று சரண்யா கூறியிருந்தார். முத்தழகு சீரியலில் கூட முதலில் சரண்யாவிடம் தான் பேச்சுவார்த்தை நடந்ததாம். அப்போது அவர் அதில் நடிக்க போவதில்லை என்று சொல்லிவிட்டாராம். அதற்குப் பிறகு ஜீ தமிழில் டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியல் தங்கமயிலாக அறிமுகம் ஆகி இருக்கிறார்.
இந்த சீரியலில் இவர் வந்த பிறகு கதை வேகம் எடுத்து இருக்கிறது அதே நேரத்தில் இவருக்கு அளவுக்கு அதிகமான நெகட்டிவர்ஸ்களும் வருகின்றனர். இவர் துருதுருவென மாமியார் மாமனார் மற்றும் குடும்பத்தினரை தன் பக்கமாக திருப்ப வேண்டும் என்று செய்யும் செயல்கள் அதிகபிரசங்கித்தனமாக இருப்பதாக திட்டி வருகிறார்கள். இந்த நிலையில் இன்று (ஜூலை 1) தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சரண்யா நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் "சமீபத்தில் என்னுடைய காலில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக மருத்துவமனைக்கு வரவேண்டிய நிலை ஏற்பட்டது. வலிகளில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறேன். என் உற்சாகத்தை தக்க வைத்து முன்பை விட வலுவாக மீண்டும் வருவேன் என்று நம்புகிறேன். எனவே என்னுடைய அன்பான கண்மணிகளே சில நாட்களாக நான் சமூக வலைத்தளங்களில் முன்பு போல ஆக்டிவாக இல்லாததற்கு காரணம் இதுதான் என்பதை புரிந்து கொண்டதற்கு நன்றி.
உங்களுக்கு என்னுடைய அன்பை கொடுக்கிறேன் நீங்களும் உடல்நலத்தை கவனித்துக் கொள்ளுங்கள்" என்று மருத்துவமனையில் இருந்த புகைப்படங்கள் மற்றும் தன்னுடைய காலில் கட்டுப்பட்டு இருக்கும் புகைப்படங்களை சரண்யா பகிர்ந்து இருக்கும் நிலையில் அதற்கு பலரும் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதிலும் சீரியல் நடிகை பவித்ரா நீங்கள் விரைவில் குணமடைவீர்கள் என்று நம்புகிறேன். உங்கள் உடம்பை கவனித்து கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார். அதுபோல பாக்கியலட்சுமி சீரியலில் மாலினி கேரக்டரில் நடித்துவரும் ரேமா, உங்கள் உடம்பை கவனித்துக் கொள்ளுங்கள் அக்கா உங்களுக்காக நிறைய பிரார்த்தனை செய்கிறேன் என்று கூறியிருக்கிறார். அதுபோல சீரியல் நடிகர் திரவியம், ஐயோ சீக்கிரம் குணமாகுங்கள் என்று கூறியிருக்கிறார். அதோடு பல ரசிகர்களும் அவருக்கு வேண்டி கொள்வதாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications