பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2வில் களமிறங்கும் நடிகை சரண்யா.. ஆரம்பமே அசத்தல்..அதிரடியாக மாற்றப்பட்ட கதை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலில் நடிகை சரண்யா துரோடி சரவணனுக்கு ஜோடியாக அறிமுகம் ஆகி இருக்கிறார். இவர் ஏற்கனவே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் ஒன்றில் விஜே சித்ரா மறைவுக்குப் பிறகு அவர் நடித்து வந்த முல்லை கேரக்டரில் முதல் முதலாக இவரிடம் தான் அந்த கேரக்டரில் நடிக்க பேசி இருந்தார்கள். ஆனால் விஜே சித்ரா ஆசையாக நடித்த கேரக்டரில் என்னால் நடிக்க முடியாது என்று அந்த நேரத்தில் சரண்யா மறுத்து இருந்தார்.
அதற்குப் பிறகும் சரண்யாவுக்கு பல சீரியல்களில் விஜய் டிவியிலேயே வாய்ப்பு வந்திருந்தது. முத்தழகு சீரியலில் கூட இவரிடம் தான் முதலில் பேச்சு வார்த்தை நடந்ததாம். ஆனாலும் அப்போது தான் சீரியலில் நடிக்கப் போவதில்லை என்று சரண்யா கூறி இருந்தார். ஆனால் இப்போது ஜீ தமிழில் டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் சரண்யா யாரும் எதிர்பார்க்காத வகையில் விஜய் டிவியில் மீண்டும் என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

தொகுப்பாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் பலருக்கும் பரிட்சயமான சரண்யா துரோடி இணையத்திலும் ஆக்டிவாக இருக்கிறார். அதுவும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகமான ரசிகர்களை வைத்திருக்கும் சரண்யா அடிக்கடி போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். அந்த நிலையில் தான் முதன்முதலாக இவருக்கு "நெஞ்சம் மறப்பதில்லை" என்று சீரியலின் மூலம் சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
தனக்கு கிடைத்த முதல் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அதிகமான ரசிகர்களை கவர்ந்த சரண்யா அதற்குப் பிறகு "ஆயுத எழுத்து" சீரியலில் நடித்திருந்தார். ஆனால் அந்த சீரியல் சீக்கிரம் முடிவுக்கு வந்தது அதற்கு பிறகு "வைதேகி காத்திருந்தாள்" என்ற சீரியலில் கதாநாயகியாக சரண்யா நடித்துக் கொண்டிருந்தார. அந்த சீரியலும் எதிர்பார்க்காத விதமாக திடீரென்று முடித்துவிட்டார்கள்

அதுவும் சேனல் தரப்பில் எல்லா நடிகர்களும் பெரிய அளவில் வருத்தத்தில் இருந்தனர். இப்படியான நிலையில் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஜய் டிவியில் சரண்யா நடிக்க தொடங்கி இருக்கிறார். அதுவும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சரவணனுக்கு ஜோடியாக இவர் களமிறங்கி இருக்கும் நிலையில் இவரால் தான் இந்த வீட்டிற்குள் இனி பிரச்சனை வரப்போகிறதா அல்லது இவரும் ஜாலியான ஒரு தியாக சுடராக மாறப் போகிறாரா என்று பொறுத்திருந்து பார்த்தால் தான் தெரியும்.

அதே நேரத்தில் இவர்களுடைய திருமண டிராக் இன்னும் ஒரு சில வாரங்களில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது விஸ்வநாதன் திருமணத்தில் கதிரும் சரண்யாவும் சந்திப்பது போன்று காட்சிகள் இருக்கிறது. அதை தொடர்ந்து இவர்கள் இருவருக்கும் எப்படி திருமணம் நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். அது போல பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிப்பை தொடங்கி இருக்கும் சரண்யாவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications