நடிகை "சரிதா” ஞாபகம் இருக்கா..? நடிகர் சிவகார்த்திகேயனா இப்படி செய்தார்? 18 வருஷம் ஆச்சாமே
சென்னை: தமிழ் சினிமாவில் 80ஸ்களில் கொடி கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் தான் நடிகை சரிதா. இவர் "தப்புத்தாளங்கள்" என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழில் அறிமுகம் ஆகி இருந்தார்.
கிட்டத்தட்ட தமிழில் 150கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருந்த சரிதா இயக்குனர் பாலச்சந்திரன் அறிமுகம் படுத்திய நடிகை தான்.

இந்த நிலையில் பல வருடங்களாக சினிமாவை விட்டு விலகி வெளிநாட்டில் செட்டில் ஆகி இருந்த சரிதாவை நடிகர் சிவகார்த்திகேயன் மீண்டும் தமிழில் நடிகையாக நடிப்பை தொடக்கி வைத்திருக்கிறார்.
பொதுவாக இயக்குனர் பாலச்சந்திரன் தன்னுடைய திரைப்படங்களுக்கு தகுந்த மாதிரி பல நடிகர் நடிகைகளை அவராகவே அறிமுகப்படுத்தி இருக்கிறார். அந்த வகையில் ஒருவர்தான் நடிகை சரிதா. அதனாலேயே இயக்குனர் பாலச்சந்திரனின் 22 படங்களில் சரிதா நடித்திருக்கிறார்.

அதுபோல இயக்குனர் பாலச்சந்திரன் இயக்கிய பல திரைப்படங்களில் இவருக்கு விருதுகளும் கிடைத்திருக்கிறது. இந்த நிலையில் தான் 1975இல் இவர் சுப்பையா என்பவரை திருமணம் செய்திருக்கிறார். அந்த திருமண வாழ்க்கை ஒரே ஆண்டில் முடிவிற்கு வந்துவிட்டது. இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து இருந்தனர்.
அதற்குப் பிறகு 12 வருஷம் கழிச்சு 1988இல் முகேஷ் என்ற நடிகரை திருமணம் செய்து இரண்டு மகன்களையும் பெற்று எடுத்திருக்கிறார். அவரோடு 23 வருடங்கள் வாழ்ந்த பிறகு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரையும் கடந்த 2011 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து விட்டார். இந்த நிலையில் சினிமாவிலிருந்து விலகி பல ஆண்டுகளாக தன்னுடைய மகன்களோடு வெளிநாட்டில் செட்டில் ஆகி இருக்கிறார்.

அவ்வப்போது 80 நடிகைகளின் ரீயூனியன் பங்க்ஷனில் மட்டும் இவர் கலந்து கொள்கிறார் .அதுபோல இவர் கடைசியாக தமிழில் 2005 ஆம் ஆண்டு வெளியான ஜூலி கணபதி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து நடிப்பை விட்டு விலகி கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்குப் பிறகு இவரை வெளிநாட்டில் சந்தித்த நடிகர் சிவகார்த்திகேயன் மீண்டும் இவரை தன்னுடைய திரைப்படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்.
ஆமாம் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் "மாவீரன்" திரைப்படத்தில் சிவகார்த்திகேயனின் அம்மாவாக சரிதா தான் ரீ என்ட்ரி கொடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. நடிப்புக்கு அழகும் கலரும் தேவையே இல்லை என்று அந்த காலகட்டத்திலே இவர் நிரூபித்திருந்தார். அதனாலயே இவரை அப்போது பலரும் "கருப்பழகி" என்று புகழ்ந்து இருந்தனர். இந்த நிலையில் இவருடைய ரீ என்ட்ரி பலருக்கு மகிழ்ச்சி கொடுக்கும்.

-
காந்தாரா சர்ச்சை! மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மனிடம் மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்! நடந்தது என்ன? -
குடும்பங்களுக்குள் புகுந்து அவதூறு.. ‘குற்றம் நிரூபித்தால் உயிரோட விடக்கூடாது!’ குஷ்பு ஆவேச பேட்டி -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை -
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம்












Click it and Unblock the Notifications