ஆஹா! கையில் குழந்தையுடன் ஆர்யன் இன்ஸ்டா போஸ்ட்.. ஷபானாவுக்கு போட்ட ரொமான்டிக் கட்டளை
சென்னை: நடிகர் ஆர்யனின் இன்ஸ்டா பதிவை பார்த்தால் சின்னத்திரை நடிகை ஷபானா கர்ப்பமாக இருக்கிறாரோ என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.
ஜீ தமிழில் கதாநாயகியாக பலராலும் அறியப்பட்டவர் செம்பருத்தி ஷபானா. அது போல் விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலில் கதாநாயகனாக நடித்த ஆரியன். இவர்களை தெரியாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். ஆனால் இதை முதலில் ஆர்யன்தான் தனது இன்ஸ்டாவில் மறைமுகமாக அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து ஷபானாவும் வெட்கத்துடன் உறுதி செய்தார். இந்த நிலையில் சென்னையில் இருவருக்கும் கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.
இந்த புகைப்படங்கள் இவர்கள் இன்ஸ்டாவில் வெளியிட்டிருந்தனர். ரசிகர்கள் வாழ்த்துகளை கூறியிருந்தனர். இந்த நிலையில் மஞ்சள் தாலியுடன் கன்னத்தில் மஞ்சள் சந்தனம் பூசி, ஷபானாவும் ஆர்யனும் ஒருவருக்கு ஒருவர் ரொமாண்டிக்காக பார்த்துக் கொள்ளும் புகைப்படங்களும் வைரலாகின. இது ஷபானாவின் தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்வுக்காக எடுக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த ஆண்டு ஆர்யனின் பிறந்தநாளை ஷபானா கோலாகலமாக கொண்டாடினார். இருவரும் ஒரு தனி தீவிற்கு சென்று கொண்டாடியுள்ளனர். அந்த புகைப்படங்கள் இன்ஸ்டாவில் வெளியாகின. ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க தொடரில் ஆர்யன் நடித்து வருகிறார்.
ஷபானாவும் ஆர்யனும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் இன்ஸ்டாவில் ஆர்யன் போட்டுள்ள பதிவால் ரசிகர்கள் குழப்பத்திலும் சிலர் மகிழ்ச்சியிலும் ஆழ்ந்துள்ளனர். ஆர்யன் ஒரு குழந்தையை தூக்கி வைத்துக் கொண்டிருக்கிறார்.
அவர் பதிவில் "ஷப்பூ இங்க பாரு, சீக்கிரம் குட்டி ஷப்பூவ லாஞ்ச் பண்றோம்" என தெரிவித்துள்ளார். இதனால் ஷபானா கர்ப்பமாக இருக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications