என்கிட்ட BMW கார் இருக்கா? நீங்க வேற! சினிமாவில் நல்லாதான் சம்பாதிச்சேன்.. ஆனாலும்! ஷகிலா உருக்கம்
சென்னை: ஒரு நாளைக்கு மட்டும் ரூ 4 லட்சம் வரை ஊதியம் வாங்கினேன். ஆனால் இன்றும் நான் வாடகை வீட்டில்தான் இருக்கிறேன் என நடிகை ஷகிலா உருக்கமாக தெரிவித்துள்ளார்.
கேரளாவை சேர்ந்தவர் ஷகிலா. இவர் சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவர் செய்த பெரும்பாலான சமையல்களை செஃப்கள் வெங்கடேஷ் பட்டும், தாமுவும் பாராட்டுவார்கள்.
இந்த நிகழ்ச்சியில் பலர் அவரை ஷகிலா அம்மா என அழைத்தார்கள். இதனால் அவருடைய பழைய பிம்பங்கள் மறைந்தன. இவர் தனது வாழ்வில் அதிக கஷ்டங்களை பட்ட நிலையில் அவர் திருநங்கை ஒருவரை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

புற்றுநோய்க்கு உதவி: அவரது பெயர் மிலா. திருநங்கையாக மாறிய மிலாவை அவரது பெற்றோர் விரட்டியடித்த நிலையில் ஷகிலாதான் அடைக்கலம் தந்துள்ளார். மிலா தற்போது மாடலிங் செய்து வருகிறார். ஷகிலாவுக்கு உதவும் மனப்பான்மை மிகவும் அதிகம். புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள அங்காடித் தெரு சிந்துவுக்கு நடிகை ஷகிலா பணஉதவி செய்துள்ளார். அத்துடன் அவருடைய நண்பரிடமும் சொல்லி உதவ வைத்துள்ளார்.
ஸ்டார் மேஜிக: ஷகிலா கடந்த 2021 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்துள்ளார். இவர் கன்னடா பிக்பாஸில் கலந்து கொண்டுள்ளார். தற்போது ஸ்டார் மேஜிக் எனும் மலையாள டிவி ஷோவில் பங்கேற்றுள்ளார். இவர் ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது என்னை பற்றி விக்கிபீடியாவில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் போலியானது.
வாடகை வீடு: எனக்கு ஒரு பிளாட், பிஎம்டபிள்யூ கார் இருப்பதாக சொல்லியுள்ளார்கள். ஆனால் நான் வாடகை வீட்டில் உள்ளேன். ஒரு காலகட்டத்தில் சினிமாவில் ஒரு நாளைக்கு ரூ 4 லட்சம் ஊதியம் வாங்கினேன். என்னிடம் இருந்த பணத்தை எல்லாம் என்னுடைய அக்கா எடுத்துக் கொண்டார் என உருக்கமாக தெரிவித்துள்ளார்.
9 ஆயிரம் கட்டணம்: மேலும் இவர் சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர் பேச்சுலர்ஸ்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார். இங்கு சித்ரா குடியிருப்பு பகுதியில் 20-க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் இருந்து வரும் நிலையில் பராமரிப்பு தொகையாக 2500 ரூபாயும் பேச்சுலர்களிடம் மட்டும் 9 ஆயிரம் ரூபாயும் பராமரிப்பு கட்டணமாக வாங்குவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
பீரியட்ஸ் நேரம்: ஆனால் தண்ணீர் கொடுக்கப்படவில்லை. பீரியட்ஸ் நேரத்தில் கூட தண்ணீர் இல்லாமல் அவதிப்படுகிறார்கள். இதை எளிதாக கடக்க முடியாது. அதனால்தான நானே களத்தில் நேராக இறங்கினேன். படத்தில் நடிப்பதை மட்டும் நான் விரும்பவில்லை. இது போன்ற விஷயங்களுக்கு குரல் கொடுக்க ஆசைப்படுகிறேன் என ஷகிலா தெரிவித்தார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications