சட்டியும் கையுமா ஷகீலாவா.. கேக்கவே கிறக்கமா இருக்கே.. புரோகிராமைப் பார்த்தா என்னாகுமோ!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் சீசன் 2-வில் கவர்ச்சி நடிகை ஷகிலா கலந்து கொள்வதாக விஜய் டிவி அறிவித்துள்ளது.
விஜய் டிவியில் கலக்க போவது யாரு, பிக்பாஸ், குக் வித் கோமாளி, ஸ்டார்ட் மியூசிக் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.
அதில் குக் வித் கோமாளி எனும் நிகழ்ச்சியில் சமைக்கத் தெரிந்த பிரபலங்கள் சமைக்கத் தெரியாத கோமாளிகளுடன் இணைந்து சமையல் செய்து வெற்றி பெறுவதே இந்த நிகழ்ச்சியாகும்.

வனிதா விஜயகுமார்
முதல் சீசன் நிகழ்ச்சியில் வனிதா விஜயகுமார், ரம்யா பாண்டியன், உமா ரியாஸ்கான், ரேகா, ரோபா சங்கரின் மனைவி பிரியங்கா, தாடி பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த சீசனில் வனிதா விஜயகுமார் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். தற்போது கொரோனா காலம் என்பதால் இதன் 2ஆவது சீசன் தொடங்கப்படாமல் இருந்தது.

மதுரை முத்து
இந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் நவம்பர் 14-ஆம் தேதி தீபாவளி பண்டிகை முதல் தொடங்குகிறது. இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்து விஜய் டிவி அறிவித்துள்ளது. நடிகை ஷகிலா, கடைகுட்டி சிங்கம் தீபா, கன்னி, மதுரை முத்து, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா லட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

பாலா
கோமாளியாக புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, வீஜே பார்வதி டிக்டாக் சக்தி உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை ரக்ஷன் தொகுத்து வழங்குகிறார். இதில் செஃப் வெங்கடேஷ் பட் நடுவராக கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிப்பர்.

தீபாவளி
இதில் ஷகிலா கலந்து கொள்வதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பெரிய திரையில் பார்த்த ஷகிலாவை தற்போது சின்னத்திரையில் பார்க்க ஆவலாக இருக்கிறார்கள். மதுரை முத்து உள்ளிட்டோர் இருப்பதால் முதல் சீசனை போல் இந்த சீசனும் களைக்கட்டும். வரும் 14-ஆம் தேதி இந்த நிகழ்ச்சி களைக்கட்டும் என்றே தெரிகிறது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications