Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எல்லாரும் மாறிக்கிட்டே இருப்பாங்க.. இந்த தப்பை மட்டும் பண்ணவே கூடாது! நடிகர் ஸ்ரீ மனைவி ஷமிதா எமோஷனல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியலில் கதாநாயகனாக சின்ராசு கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் ஸ்ரீகுமாரின் மனைவியான நடிகை ஷமிதா பேட்டி ஒன்றில் பர்சனல் வாழ்க்கை குறித்து பேசி இருக்கையில் அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை ஷமிதா ஸ்ரீகுமார் வெள்ளி திரையில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து பெயர் வாங்கி இருந்தாலும் சின்ன திரையில் அதிகமான கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய கணவர் ஸ்ரீகுமார் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் மனைவியான ஷமிதா மாமியார் மற்றும் அம்மா கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் ஷமிதா பேசிய வீடியோ இணையத்தில் பலருடைய கருத்தைப் பெற்று வருகிறது அது பற்றி பார்க்கலாம்.

Actress Shamitha, the wife of actor Sreekumar about personal life

ஒரு சில நடிகர் நடிகைகளுக்கு தான் வெள்ளி திரையில் ஆரம்பமே அமோகமாக மாறிவிடுகிறது. ஆனால் ஒரு சிலருக்கு முதல் படம் பெரிய அளவில் ஹிட் கொடுத்து இருந்தாலும் அதை தொடர்ந்து பெரிய அளவில் தங்களுடைய திறமைக்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விடுகிறது. அந்த வரிசையில் ஒருவர் தான் நடிகை ஷமிதா. இவர் ஆரம்பமான பாண்டவர் பூமி என்ற திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

இந்த திரைப்படத்தில் இவருடைய கேரக்டர் மற்றும் நடிப்பிற்கு பலருடைய பாராட்டும் கிடைத்திருந்தது. ஆனால் அதற்கு பிறகு ஷமிதாவிற்கு பெரிய அளவில் வெள்ளி திரையில் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் திறமை இருந்தால் வெள்ளிதிரையும் சின்னத்திரையும் ஒன்றுதான் என்று ஷமிதா சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தார். ஆரம்பமே சிவசக்தி என்ற சீரியல் மூலமாக தன்னுடைய சீரியல் வாழ்க்கையை தொடங்கிய ஷமிதா அந்த சீரியலில் சிவசக்தி என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.

அதற்கு பிறகு வசந்தம் சீரியலில் நந்தினியாகவும், பிள்ளை நிலா சீரியலில் கோகிலாவாகவும் நடித்துக் கொண்டிருந்த ஷமிதா அதைத் தொடர்ந்து ஜீ தமிழில் புகுந்த வீடு என்ற சீரியலில் நடிக்க தொடங்கினார். அடுத்ததாக விஜய் டிவி, சன் டிவி, கலைஞர் டிவி என்று பல சேனல்களில் இவருக்கு வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தது. அந்த வகையில் தான் பொன்னூஞ்சல், மௌனராகம், பூவே செம்பூவே, திருமகள், பேரன்பு, பொன்னி என்ற பல சீரியல்களில் ஷமிதா வரிசையாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

அதிலும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் பேரன்பு சீரியலில் ராஜேஸ்வரி கேரக்டரில் இவரை அதிகமாக இளம் மருமகள்களின் மனதையும் கவர்ந்திருக்கிறார். இத்தனை சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் இவருடைய கணவர் சீரியல் நடிகர் ஸ்ரீகுமார் என்பது சின்னத்திரை ரசிகர்களுக்கு தெரிந்து செய்திதான். இவர்கள் இருவரும் தான் ஆரம்பத்தில் சிவசக்தி என்ற சீரியலில் ஒன்றாக நடித்திருந்தனர்.

இப்படியான நிலையில் சில வருடங்களுக்கு முன்பு ஷமிதா பேசிய ஒரு வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் நம்மளுடைய பர்சனல் வாழ்க்கையை பற்றி பேசி மத்தவங்களுக்கு ஜஸ்டிஃபிகேஷன் கொடுக்கிறது ரொம்ப தப்பு என்று கூறியிருக்கிறார். அதாவது மீடியா துறையில் இருக்கும் பலர் தங்கள் குடும்ப வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனையை தங்கள் மீது தப்பு இல்லை என்பதற்காக குடும்ப விஷயத்தை இணையத்தில் பலரிடமும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இது ரொம்பவே தப்பான செய்தி எல்லோரும் எல்லா நேரத்திலும் ஒரே போல இருக்க மாட்டார்கள். எல்லாருடைய வாழ்க்கையும் ஒன்று போல தான் இருக்கிறது, சில நேரங்களில் உச்சத்துக்கு போகும் சில நேரங்களில் கஷ்டத்தில் வாழ்வோம். அப்படி அப் அன்ட் டவுன் இருக்கும் வாழ்க்கையில் பிரபலங்கள் தங்களுடைய வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகளை இணையத்தில் எல்லோருக்கும் சொல்வதால் மேலும் பிரச்சினைகள் தான் வரும்.

அதுவும் திருமண பந்தத்தில் இருக்கும் விஷயத்தை பொதுவெளியில் பேசுவது ரொம்ப தப்பு என்று எனக்குத் தோன்றுகிறது என்று அந்த பேட்டியில் ஷமிதா கூறி இருக்கிறார். அதோடு ஷமிதா தன்னுடைய முதல் சீரியலில் நடித்த ஸ்ரீகுமரை காதலித்து திருமணம் செய்திருக்கின்றார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் அடிக்கடி தங்களுடைய குடும்ப புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+