Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அந்த சிரிப்பு.. உதட்டு நெளிப்பு.. சிறகு இல்லாத தேவதையாம் இவங்க.. உருகும் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: றெக்கை மட்டும் இருந்தால் இவங்க தேவதை தானாம்.... அது யாருன்னு தெரியுமா நம்ம சரண்யா துரடி தாங்க. அவங்கள பாத்து தான் ரசிகர்கள் இப்படி கவிதை மழை பொழிகிறார்கள்.

சரண்யா துரடி அச்சு அசல் சென்னை பொண்ணுங்க. பள்ளிப்படிப்பை சென்னையிலே முடிச்சு இருக்காங்க .சென்னையில் உள்ள கல்லூரியில் MA டிகிரி முடித்துள்ளார்.

2005 ஆம் ஆண்டு கலைஞர் டிவில தன்னுடைய பணியை தொடங்கி இருக்காங்க. அதுக்குப் பிறகுதான் ராஜ் டிவில நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் பணியாற்றி இருக்காங்க

 தேடி வந்த சினிமா

தேடி வந்த சினிமா

பிறகு ஜீ தமிழ், அப்புறமா புதிய தலைமுறைலயும் பணியாற்றி இருக்காங்க. இப்படி பல சேனல்களில் பணியாற்றி இருக்காங்க. அப்புறம் நியூஸ்18ல சீனியர் நியூஸ் ரீடர் ஆக பணியாற்றி இருக்காங்க. நியூஸ் ரீடர் ஆக இருந்துகொண்டே தொலைக்காட்சிகளில் வாய்ப்புகளுக்காக காத்துக் கொண்டு இருந்திருக்காங்க. அந்த சமயத்தில்தான் 2015 ல ஒரு சினிமா வாய்ப்பு வந்திருக்கு.

 டிவி நடிகை

டிவி நடிகை

ஆமாங்க 2015-ல் சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற திரைப்படத்தில் பாபி சிம்ஹாவுடன் இவர் நாயகியாக நடித்துள்ளார். ஏற்கனவே நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றிய சீரியல் நடிகர்கள் ஆகவும் வெள்ளித்திரை நடிகர்களாகவும் வந்து இருக்காங்க .அந்த வரிசையில் நம்ம சரண்யாவும் வந்து இருக்காங்க.

 தொடர் சீரியல்கள்

தொடர் சீரியல்கள்

அப்புறமா அவங்களுக்கு தொடர்ந்து பெரிய பட வாய்ப்புகள் வராததால் சின்னத்திரையில் மறுபடியும் கால்லெடுத்து வச்சிருக்காங்க. ஆமாங்க விஜய் டிவில நெஞ்சம் மறப்பதில்லை என்ற தொடரில் அமித் ஜோடியாக நடிச்சாங்க. இந்த சீரியல் சூப்பர் டூப்பர் லெவலுக்கு போயிட்டு அதுலயும் அவங்க க்யூட்டாக ஒரு டாக்டர் படிக்கிற பொண்ணா வந்திருப்பாங்க. துருதுரு பார்வையும், க்யூட்டான அழகான சிரிப்பும் ரசிகர்களை கவர்ந்து இழுத்தாங்க.

 அழகான மருமகள்

அழகான மருமகள்

நெஞ்சம் மறப்பதில்லை வெற்றியை தொடர்ந்து விஜய் டிவில ஆயுத எழுத்து அப்படிங்கிற சீரியலிலும் நடிச்சுட்டு வராங்க. இந்த சீரியல்ல இவங்க ஒரு கலெக்டராக நடிச்சிருக்காங்க. சீரியல் ரொம்ப சூப்பரா போய்கிட்டு இருக்குது. இவங்க அதுல கலெக்டர் ஆக இருந்தாலும் ஒரு வீட்டுக்கு மருமகளாக போனபிறகு மாமியாருக்கு மரியாதை கொடுக்கிற, எதிர்த்து பேசாத ஒரு அமைதியான மருமகளா மாறிட்டாங்க.

 துருதுருன்னு இருக்காங்க

துருதுருன்னு இருக்காங்க

இந்த சீரியல்ல இவங்களுக்கு முன்னாடி வேற ஒரு கதாநாயகி நடிச்சுகிட்டு இருந்தாங்க. அவங்க விலகின பிறகுதான் இவங்க அதுல ஜாயின் பண்ணாங்க. இருந்தாலும் மக்களுக்கு இவங்கள ரொம்பவே பிடிச்சுப் போச்சு. இப்போ சன் டிவில ரன் என்கிற தொடரில் நடிச்சிட்டு இருக்காங்க. இதுல பெரிய பணக்கார வீட்டுப் பெண்ணாக துருதுருன்னு அழகா இருக்காங்க. இந்த தொடரும் இப்போ ரொம்ப விறுவிறுப்பா போய்கிட்டு இருக்கு

 வெள்ளை டிரஸ்ஸில் தேவதை போல

வெள்ளை டிரஸ்ஸில் தேவதை போல

இப்போ லாப் டவுன் என்கிறதால சூட்டிங் இல்லாமல் வீட்டில் இருப்பதற்கு இவங்களுக்கு டைம் போகவில்லையாம். அதனால தினுசு தினுசாக போட்டோ எடுத்து தன்னுடைய டுவிட்டரில் அப்லோட் பண்றாங்க. டிக் டாக் ல யும் அம்மணி ரொம்ப கலக்கிவிட்டு இருக்காங்க. அப்படித்தாங்க இப்போ ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்காங்க .அதுல இவங்க அருவில குளிக்கிற மாதிரி, ஒயிட் கலர் டிரஸ்ஸோட அப்படியே தேவதையாக ஜொலிக்க இதை பார்க்கும் ரசிகர்கள் இவங்கள "றெக்கை மட்டும் இருந்தா நீங்க தேவதையே தாங்க" என்று உருகி வழியுறாங்க.

 எம்ஜிஆர்னா பிடிக்கும்

எம்ஜிஆர்னா பிடிக்கும்

தன்னுடைய டுவிட்டரில் புது புது போட்டோ அப்லோட் பண்ணிட்டு இருக்காங்க. அதுக்கு கமெண்ட் பண்ற ரசிகர்களுக்கு ஸ்மைல் மட்டும் திருப்பிக் கொடுக்கிறாங்க. லாக்டவுன் டைம்ல இவங்க வீட்ல இருந்து கொண்டே பாட்டு கத்துக்கிட்டு இருக்காங்க. இவங்க ஒரு எம்ஜிஆர் ரசிகையாம். எம்ஜிஆர் ன்ணா அவ்வளவு பிடிக்குமாம். அவரோட பாடல்களை அவ்வளவு ரசிச்சு பாடுறாங்க.

 மயக்கத்தில் ரசிகர்கள்

மயக்கத்தில் ரசிகர்கள்

இவங்க டான்ஸ் போட்டிகள்ல கலந்துகொண்டது எல்லாத்துக்கும் தெரியும். ஆனா இவங்க பாடல் பாடுகிறது யாருக்குமே தெரியாது. இன்னும் எத்தனை திறமை தான் இந்த பொண்ணுகிட்ட இருக்கோன்ணு ரசிகர்கள் மயங்கி கிறங்குகிறார்கள். உண்மைதானே.. திறமை இருக்கப் போய்த்தானே சரண்யாவைத் தேடி வாய்ப்புகளும் வருகின்றன.. நீங்க கலக்குங்க சரண்யா.. நாங்க ரசிக்க ரெடியா காத்திருக்கோம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+