Shreya Sidhu: கல்யாணமான 3 மாதத்தில் ஸ்ரேயா சித்து வீட்டில் மீண்டும் விசேஷம்.. ரசிகர்கள் வாழ்த்து!
சென்னை: திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே சின்னத்திரை நடிகை ஸ்ரேயா சித்து ஒரு குட் நியூஸை தெரிவித்துள்ளார். இதனால் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
பொதுவாக வெள்ளித் திரை நடிகர், நடிகைகளின் திருமணங்கள், அவர்களது வீட்டு விசேஷங்கள் ரசிகர்களை ஈர்க்கும். அவர்களது திருமண ஆல்பங்களை டிவி சேனல்கள் ஒளிபரப்பினால் அதை ஆர்வத்துடன் பார்ப்பதுண்டு.
அந்த வகையில் தற்போது சின்னத்திரை நடிகர், நடிகைகளின் திருமணங்களும், வீட்டு விசேஷங்களும் இடம் பெற்றுள்ளன. இதற்கு காரணம் சீரியல்களில் ரீல் ஜோடியாக நடித்து மக்களின் மனதை கொள்ளும் இவர்கள் நிஜத்தில் ரியல் ஜோடியாகும் போது கிடைக்கும் வரவேற்பு அதிகமாக உள்ளது.

ரீல் ஜோடி டூ ரியல் ஜோடி
அந்த வகையில் ரீல் ஜோடியாகி ரியல் ஜோடியானவர்களில் சித்து- ஸ்ரேயா பிரபலம். கலர்ஸ் தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வந்த திருமணம் சீரியலுக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு இருந்தது. அந்த சீரியல்களில் நடக்கும் சின்ன சின்ன ஊடல்களையும் பிரிவுகளையும் ரசிகர்கள் ரசித்ததுண்டு. இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருந்த போதே இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர்.

விஜய் டிவி சீரியல்
இதையடுத்து சித்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வருகிறார். அது போல் ஸ்ரேயாவும் விஜய் டிவியில் அன்புடன் குஷி சீரியலிலும் ஜீ தமிழில் வெளியாகி வரும் ரஜினி சீரியலிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

13 லட்சம் ரூபாயில் கார்
இதையடுத்து திருமணம், நிச்சயம், வரவேற்பு குறித்த புகைப்படங்களை இருவரும் சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு வந்தனர். இந்த நிலையில் திருமணம் முடிந்த நிலையில் அண்மையில் இவர்கள் 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான காரை வாங்கியிருந்தனர். இதன் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் போட்டதால் ரசிகர்கள் வாழ்த்தி வந்தனர்.

ஸ்ரேயா வீட்டில் விசேஷம்
தற்போது திருமணம் முடிந்த 3 மாதங்களில் இவர்களின் வீட்டில் புது விசேஷம் உள்ளதாக ஸ்ரேயா தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அய்யோ நீங்கள் எங்கேயோ போய்டாதீங்க, ஸ்ரேயா வீட்டில் நடந்த விசேஷம் நீங்கள் நினைப்பது போல் புது வரவு எல்லாம் இல்லை. அவரது தங்கை பிரியா அஞ்சனுக்கு கடந்த வாரம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அது குறித்த புகைப்படங்களை ஸ்ரேயா வெளியிட்டுள்ளார். இதற்கும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications