பிக்பாஸ் போறதுக்கு முன்னாடி போகலாமா வேண்டாமானு நடிகை ஸ்ருத்திகா கேட்ட நபர் யார் தெரியுமா?
திருவண்ணாமலை: இந்தி பிக்பாஸுக்கு போகணும்னு தோன்றியதுமே போகலாமா வேண்டாமா என தான் யாரிடம் கேட்டேன் என்பது குறித்து நடிகையும் குக் வித் கோமாளி வின்னர் ஸ்ருத்திகா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திருவண்ணாமலையில் நடிகை ஸ்ருதிகா கூறியிருப்பதாவது: பொதுவாக எப்போதும் அண்ணாமலையாரை பார்க்க வருவேன். அவர்தான் எனக்கு எல்லாமே. குக் வித் கோமாளிக்கு முன்னாடியும் இங்கே வந்து வழிபட்டேன்.

குக் வித் கோமாளி ஃபைனல்ஸ் சுற்றின் போதும் வந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்தேன். அதன் பிறகும் இங்கு வழிபட்டேன். பிக்பாஸ் இந்திக்கு போகலாமான்னு ஒரு யோசனை வந்த போதும் அண்ணாமலையாரிடம் உத்தரவு கேட்டேன்.
அவர் எப்போதும் என்னுடன் பேசுவார். அந்த வாய்ப்பு கிடைத்ததற்கு காரணம் அவர்தான். பிக்பாஸ் போறதுக்கு முன்னாடி அவரிடம் ஆசி வாங்கினேன். வந்ததும் அவரிடம் ஆசி பெற்றேன். நான் கேட்டதை விட நிறைய கொடுத்திருக்கிறார்.
நான் கேட்டதை விட நிறைய செய்திருக்கிறார். இவ்வாறு கூறிய ஸ்ருத்திகா, அண்ணாமலையார் என்னுடனேயே இருக்கிறார் என சொல்லி கழுத்தில் இருந்த ருத்ராட்சத்தை காட்டினார்.

பிக்பாஸ் இந்தி சீசன் 18 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் நடிகையும் குக் வித் கோமாளி வின்னருமான ஸ்ருத்திகா கலந்து கொண்டார்.
தமிழை போல் இந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த பிக்பாஸில் ஸ்ருத்திகாவுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. பிக்பாஸ் முடிய 2 வாரங்கள் இருக்கும் நிலையில் கடந்த வாரம் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
அவருடன் சுற்றி இருந்தவர்களே ஸ்ருத்திகாவை டார்கெட் செய்து வெளியே அனுப்பினர். ஸ்ருத்திகா பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆக வேண்டும் என விஜய் டிவி பிரபலங்களான ரக்ஷன், புகழ் உள்ளிட்டோர் வீடியோ வெளியிட்டு கோரிக்கை விட்டனர்.

ஆனால் எதிர்பாராத நேரத்தில் இவரது வெளியேற்றம் நடந்தது நியாயமில்லை என ரசிகர்கள் கூறி வந்தனர். தமிழ் மட்டுமில்லாமல் இந்தி ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்த ஸ்ருத்திகா, வெளியேறியதும் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.
அதில் எனக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி. நம்ம ஊரில் இருந்து மட்டுமல்ல, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் இருந்தும் தனக்கு மெசேஜ் போட்டு பலர் வாழ்த்து வருகிறார்கள். எனக்கு இவ்வளவு சப்போர்ட் கொடுத்து இருக்கீங்க... அது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதற்கு எப்படி நன்றி சொல்வது என்று எனக்கு தெரியவில்லை என தெரிவித்திருந்தார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications