மிளகாய் அரைக்க மாவு மிஷினுக்கு வந்த சில்க் ஸ்மிதா.. மலைத்த வினு சக்ரவர்த்தி.. பாராட்டிய சிவக்குமார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "பொண்ணு, இவ்வளவு குண்டா இருக்காங்களே? கேரக்டருக்கு பொருந்தற மாதிரி இல்லையே" என்று வண்டிச்சக்கரம் படக்குழுவினர் வினுசக்ரவர்த்தியிடம் கருத்து சொல்லியிருக்கிறார்கள். ஆனாலும், அவர்களுக்கு நம்பிக்கை தந்த வினுசக்ரவர்த்தி, மைசூருக்கு 15 நாள் முன்பே சில்க்கை அழைத்து சென்று, அனைத்து பயிற்சிகளையும் தந்தார். பிறகு சில்க்கின் நடிப்பை கண்டு, மொதத படக்குழுவினரும் ஆச்சரியப்பட்டார்கள்" என்று மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் தெரிவித்துள்ளார்.

Reflect Lifestyle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சபிதா ஜோசப், "நடிப்புக்கு வாய்ப்பு கேட்டு சென்ற சில்க்கிடம், "அபர்ணா என்ற நடிகைக்கு, வீட்டு வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகிறது. அங்கே வேலைக்கு சென்றுவிடு, அந்தம்மாவை வைத்து, எப்படியாவது பிழைத்துக் கொள்" என்று சிலர் சொல்லி உள்ளனர்..

Television Silk smitha Sivakumar

உடனே சில்க் ஸ்மிதாவும், நடிகையின் வீட்டு வேலைக்காக செல்கிறார்.. பிறகு டச்சப் செய்வதற்கு ஆள் தேவைப்படுகிறது என்பதற்காக, சில்க்கை தன்னுடன் அழைத்து செல்ல ஆரம்பத்தார் அபர்ணா..

பிரம்மித்து பார்த்த சில்க்

சினிமாவையே அப்போதுதான் பிரம்மித்து பார்த்தார் சில்க்.. ஷூட்டிங்கில் அபர்ணா காலை நீட்டினால், காலுக்கு டச்சப் செய்வார் சில்க்.. சிலசமயம் டென்ஷனில் காலிலேயே அந்த நடிகை எட்டி உதைப்பாங்க.. இதையெல்லாம் பொறுத்துக் கொண்டுதான் வேலை பார்த்தார் சில்க்.

அப்போது மிகவும் குண்டாக இருந்தார். சில்க்கை சினிமாவில் நடிக்க வைப்பதற்காக அழைத்து வந்த பெண்ணோ, சில்க்கின் போட்டோவை கையில் வைத்துக் கொண்டு, நடிக்க வாய்ப்பு கேட்டு வந்துள்ளார்.. அந்த போட்டோவை பார்த்த பலரும், இப்படி கருப்பா, குண்டாக இருந்தால் யார் வாய்ப்பு தருவாங்க? என்று கூறியிருக்கிறார்கள்.

பிறகு சலீம் மாஸ்டரிடம் சென்ற அந்தம்மா, இந்த பொண்ணுக்கு டான்ஸ் ஏதாவது கற்றுத்தந்தால், அந்த பொண்ணு பிழைச்சுக்கும் என்று கெஞ்சியிருக்கிறார். உடனே சலீம் மாஸ்டரும் சிலக்கை வரவழைத்து, நடனம் கற்றுத்தந்துள்ளார்..

கருப்பா, குண்டா இருந்தால் எப்படி

அந்த நேரத்தில்தான், வினுசக்ரவர்த்தி வண்டிச்சக்கரம் என்ற படத்துக்கு கதையை எழுதி வைத்துவிட்டு, சில்க் என்ற கதாபாத்திரத்துக்கு பொருத்தமான ஆளை தேடிக் கொண்டிருந்தார். சாராயக்கடைக்கு பக்கத்தில் கறி, மீன் விற்கும் கேரக்டருக்கு நடிகையை தேடிக் கொண்டிருந்தார்.. அந்த பெண்ணை பார்த்தாலே, பேசினாலே மயக்கம் வருவது போல இருக்க வேண்டும் என்பதால், அதற்கேற்ற நடிகையாக தேடிக் கொண்டிருந்தார்.

ஒருநாள், யதேச்சையாக சில்க் ஸ்மிதாவை பார்த்துள்ளார் வினுச்சக்ரவர்த்தி.. மிளகாய் அரைக்க மாவு மிஷின் கடைக்கு வந்துள்ளார் சில்க்.. அப்போது சில்க்கை பற்றி விசாரிக்கும்போதுதான், நடிகை அபர்ணாவிடம் டச்சப் பெண்ணாக வேலை பார்ப்பது தெரிந்துள்ளது. உடனே சில்க்கை அழைத்து பெயர் கேட்டதற்கு விஜயலட்சுமி என்று கூறியிருக்கிறார் சில்க்.

நம்பிக்கை தந்த வினுசக்ரவர்த்தி

உடனே வினுசக்ரவர்த்தி, சிவக்குமார் உள்ளிட்டோரிடம் சில்க்கை அழைத்து சென்று காண்பிக்கவும், "பொண்ணு, இவ்வளவு குண்டா இருக்காங்களே? கேரக்டருக்கு பொருந்தற மாதிரி இல்லையே" என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனாலும், அவர்களுக்கு நம்பிக்கை தந்த வினுசக்ரவர்த்தி, மைசூருக்கு 15 நாள் முன்பே சில்க்கை அழைத்து சென்று, அனைத்து பயிற்சிகளையும் தந்துள்ளார்.

வினுச்சக்ரவர்த்திக்கு இந்தியில் பிரபலமான நடிகையான ஸ்மிதா பாட்டீல் மிகவும் பிடிக்கும்.. எனவே, விஜயலட்சுமிக்கு பதிலாக ஸ்மிதா என்று பெயர் வைத்தார்.. வண்டிச்சக்கரம் கேரக்டர் பெயர் சில்க் என்பதுடன் சேர்ந்து சில்க் ஸ்மிதா என்றே ஆகிவிட்டது.

நன்றியுள்ள சில்க்

"வா மச்சான் வா" என்ற பாட்டு எடுத்து கொண்டிருந்தபோதே, சிவக்குமார் சில்க்கின் எக்ஸ்பிரஷனை பார்த்து அசந்துட்டாராம்.. எப்படி இந்த பெண்ணை இப்படியொரு கேரக்டருக்கு மாற்றினாய்? என்று வினுசக்ரவர்த்தியை பாராட்டியிருக்கிறார். அப்போதிருந்தே வினுசக்ரவர்த்தி மீது சில்க்குக்கு தனி மரியாதை உண்டு.. தன்னுடைய ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் வினுசக்ரவர்தி காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவார் சில்க் ஸ்மிதா" என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+