மேடையிலே அழுத நடிகை சினேகா..சொந்த பாட்டியே இப்படியா..? அதுவும் அந்த அண்ணன் வேற..!
சென்னை: புன்னகை அரசி என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகை சினேகா மேடையில் கண்கலங்கியபடி பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
வீட்டில் நான்காவது குழந்தையாக அதுவும் பெண் குழந்தையாக பிறந்து தான் பட்ட கஷ்டங்கள் குறித்து அதில் பேசியிருக்கிறார்.
சொந்த பாட்டியும், அண்ணனும் தன்னிடம் நடந்து கொண்ட விதத்தைப் பற்றி நடிகை சினேகா கூறிய தகவல்கள் கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.

நடிகை சினேகா என்று சொன்னால் பலருக்கும் பரீட்சையமானவர்தான். அவருக்கு அறிமுகமே தேவை இல்லை என்று சொல்லும் அளவிற்கு 90's கிட்ஸ்கள் முதல் 2k கிட்ஸ்கள் வரைக்கும் ஃபேவரைட் கதாநாயகிகளில் ஒருவராக நடிகை சினேகா வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இப்போதும் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் சாங்குகளில் ஒன்றாக புல்லாங்குழலின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம் எனும் பாடலும் அதற்கு க்யூட்டான நடிகை சினேகாவின் எக்ஸ்பிரஷனும் பலராலும் ரசிக்க கூடியது தான். அது மட்டுமா பலருடைய கவலைகளை தாண்டி வாழ்க்கையை வாழத் தூண்டும் தத்துவ பாடலான ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே என்னும் பாடலையும் அதில் நடிகை சினேகாவின் எக்ஸ்பிரஷனையும் இப்பவும் மறக்க முடியாது.
வெள்ளி திரையில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த சினேகா இப்போது சின்னத்திரையிலும் பல ரியாலிட்டி ஷோகளில் நடுவராக கலக்கிக் கொண்டிருக்கிறார். அது மட்டும் அல்லாமல் திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவான பிறகும் தன்னுடைய நடிப்பிற்கு விடுமுறை அளிக்காமல் நடிப்பு குடும்பம் என இரண்டையும் ஒன்றாகவே கவனித்தும் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் தான் சமீபத்தில் சினேகா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருக்கும்போது தான் பெண்ணாக பிறந்ததால் தன்னுடைய வீட்டிலேயே பட்ட கஷ்டங்கள் பற்றி மனம் திறந்து பேசி கண் கலங்கி அழுது இருக்கிறார். அதில் நான் வீட்டில் நான்காவதாக பிறந்தேன். நான் பெண் குழந்தை என்பதால் என்னுடைய பாட்டி என்னை மூன்று நாட்கள் தூக்கவே இல்லை.

வீட்டில் எப்போதும் அண்ணன்களுக்கு மட்டும்தான் அதிகமான முக்கியத்துவம் இருக்கும். நானாக இருந்தாலும் சரி என்னுடைய அக்காள்களாக இருந்தாலும் சரி அவர்கள் அண்ணன்களுக்கு அடங்கி தான் போக வேண்டும். வீட்டில் வேலைகளை செய்ய வேண்டும் என்று எப்போதும் கூறிக் கொண்டே இருப்பார்கள். அண்ணன் ஹாயாக டிவி பார்த்துக் கொண்டிருக்கும்போது பக்கத்தில் தான் தண்ணீர் இருக்கும் ஆனால் நாம் பக்கத்து அறையில் ஏதாவது வேலை செய்து கொண்டிருந்தாலும் வந்து எடுத்துக் கொடுக்க வேண்டும்.
உங்க பக்கத்துல தானே தண்ணி இருக்கு எடுத்து குடித்தால் என்ன அண்ணா என்று கேட்டால் நீ பொம்பள புள்ள தானே நீ வந்து எடுத்து கொடுக்கணும் நான் ஒரு ஆம்பள பையன் தண்ணி எடுத்துக் குடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று திமிராக பேசுவார். அதுவும் என்னுடைய இரண்டாவது அண்ணனை சொல்லவே வேண்டாம். எங்க வீட்டில் என்னை ரொம்பவும் தொந்தரவு செய்து என்னை பாடாய்படுத்துவது என்றால் என்னுடைய இரண்டாவது அண்ணன் தான் என்று அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.
இப்போதும் பல வீட்டில் இதே போல தான் ஆண் பெண் குழந்தைகளின் பாகுபாடுகள் இருக்கும் நிலையில் நடிகை சினேகாவின் வீட்டில் அவருக்கே இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறதா? என்று அவருடைய ரசிகர்கள் பலர் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர். தொடர்ச்சியாக இந்த மாதிரி இனி யாரும் செய்யக்கூடாது என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
-
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications