நடிகை ஸ்ரீரெட்டி நிலைமை.. பாலியல் புகார் தந்தால் காலி.. டான்ஸ் மாஸ்டர் தினேஷ் சமூக விரோதி: பிரபலம்
சென்னை: விஜய் நடித்த 'லியோ படத்தில் ஒரு பாட்டுக்கு 1000 பேரை ஆட வைப்பதாக கூறி ரூ.35 லட்சத்தை வாங்கி அதை முறையீடு செய்ததாக நடன இயக்குனர் சங்கத்தின் தலைவர் தினேஷ் மீது புகார் கிளம்பியிருக்கிறது. உடனடியாக இயக்குனர் சங்கத்தின் தலைவர் பொறுப்பை ராஜிமானா செய்ய வேண்டும் என்றும் நடன இயக்குனர்கள் சார்பில் போராட்டம் நடந்து வருகிறது. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் பாண்டியன் தன்னுடைய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
BBTCinema என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள தமிழா தமிழா பாண்டியன்,
தினேஷ் மாஸ்டர் லியோ படத்தில் 1000 நடன கலைஞர்களை டான்ஸ் ஆட வைத்தார்.. 35 லட்சம் சம்பளம் தராமல் மோசடி செய்கிறார் என்று நடன இயக்குனர் சங்க தலைவர் மீதே குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார்கள்..

டான்ஸ் மாஸ்டர்
20 வருடமாகத்தான் அவர் டான்ஸ் மாஸ்டர்.. இதற்கு முன்பு நடன குழுவில் சாதாரண நபர்.. தினேஷ் மாஸ்டருக்கு இப்போது அடியாள் குழு இருக்கிறது.. ஹீரோக்கள், ஹீரோயின்கள் அருகில் டான்ஸ் ஆட வேண்டுமானால், அந்த பெண்கள் தினேஷ் மாஸ்டரின் குழு நட்பு வட்டாரத்திற்குள் வரவேண்டுமானால், அவர்களை அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்ளணுமாம்.. இதை தினேஷ் மாஸ்டரே சொல்றார்..
அப்படியானால், உடனே நடவடிக்கை எடுங்கள் என்றால், "அவர் வீட்ல கை நனைச்சு சாப்பிட்டிருக்கேன்னு" சொல்றாரு தினேஷ்.. தூக்கி எறியப்பட வேண்டிய ஒரு சமூக விரோதிதான் தினேஷ் மாஸ்டர்.. தினேஷை எதிர்த்து குரல் கொடுத்தவரை, சிசிடிவி இல்லாத இடமாக அழைத்து சென்று தாக்குகிறார் தினேஷ்.. இவர் ஒரு மோசடி நபர்... நடன இயக்குனர்கள் சங்கத்தில் தினேஷ் மீது கடுமையான அதிருப்தி இருக்கு..
துபாய் பெண்கள்
துபாய்க்கு நடனமான பெண்கள் சென்றால், உடனே அவர்களுடைய உறுப்பினர் கார்டை ரத்துசெய்ய வேண்டும் என்று விதி உள்ளது. ஆனால், நிறைய பேர் துபாய்க்கு போயிட்டு வந்து டான்ஸ் ஆடறாங்க.. அவர்கள் மீது நடவடிக்கையை தினேஷ் எடுப்பதில்லை.. காரணம், அந்த பெண்கள், துபாய்க்கு சென்றுவிட்டு வந்ததுமே தினேஷூக்கு கையூட்டு தந்து விடுகிறார்கள் என்பது குற்றச்சாட்டாக உள்ளது..
துபாயில் நடன குழுவாக போகாமல் பாலியல் ரீதியாக சென்று வருகிறார்கள் என்ற
புகார்கள் எழுந்ததால்தான், துபாய்க்கு குழுவில் உள்ள பெண்கள் செல்லக்கூடாது என்று தீர்மானமே நிறைவேற்றியிருக்கிறார்கள்.. இந்த தீர்மானத்தை தலைவர் தினேஷ் மீறியிருக்கிறார்.
சரத்குமார், ராதாரவி
நடிகர் சங்கத்திலேகூட சரத்குமார், ராதாரவி இவர்கள் இருவரையும் எதிர்க்கக்கூட இங்கே ஒருவரும் அன்று இல்லை.. ஆந்திராவிலிருந்து விஷால் ரெட்டி என்பவரை இறக்குமதி செய்யும் நிலைமை உள்ளது.. முதுகெலும்பு இல்லாத நடிகர் சங்கம்.. அதுபோலதான் இந்த நடன இயக்குனர் சங்கமும்.. தினேஷ் மீது தவறு இருக்கும்போது, அவரை தூக்கி எறியக்கூடிய வலுவான ஆட்கள் அங்கு இல்லை..
நடன உறுப்பினர் சங்கத்தில் கேள்வி கேட்டது ஒரு தப்பா? கேள்வி கேட்டதற்காக முட்டுச்சந்துல கூட்டிட்டு போய் அடித்தால், இது அடிமை சங்கமாகத்தானே இருக்கிறது?
கலைஞர் 100 விழா
கலைஞர் 100 என்று விழா நடத்தினார்கள்.. இதற்கு ஒரு வாரம் முன்பு, அத்தனை நடன கலைஞர்களும் ஷூட்டிங்கை ஒரு வாரம் ரத்து செய்துவிட்டு, பிராக்டீஸ் செய்தார்கள்.. ஒருநாள் கூலி 1000 என்றால், வாரத்துக்கு 7000 ரூபாய் ஆகிறது.. இத்தனை வருடமும் அதற்கு இன்றுவரை சம்பளம் தரப்படவில்லை.. அப்படின்னா நடன இயக்குனர்களும், பெப்பி அமைப்புகளும் எதுக்கு போண்டா சாப்பிடறதுக்காக இருக்காங்களா?
நடிகை ஸ்ரீரெட்டி
பாலியல் ரீதியாக எங்களை பயன்படுத்தி கொள்கிறார்கள், அப்படி பயன்படுத்தி கொண்டால் மட்டுமே முன்னணி நடிகர், நடிகைகளுடன் ஆடுவதற்கு வாய்ப்புகள்
வழங்கப்படுகின்றன என்று டிவியிலேயே அந்த பொண்ணு பேட்டி தர்றாங்க.. உலகம் முழுவதும் இந்த செய்தி போயாச்சு.. தினேஷ் தூக்கி எறியப்பட வேண்டிய நபர்..
பாலியல் புகார்கள் பல வெளியே வருவதில்லை.. புகார் சொல்லக்கூடியவர்கள் திருப்பி திரைப்பட துறைக்கே வர முடியாது.. ஸ்ரீரெட்டி என்ற நடிகை இப்படித்தான் புகார் சொன்னார்.. சினிமா துறையை விட்டே காணாமல் போய்விட்டார்.. பெண்களுக்கு பாதுகாப்பு தரக்கூடிய அமைப்புகளே சினிமாவில் இல்லை என்று வேதனை தெரிவித்துள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications