கிரேட் எம்.ஆர். ராதா.. ஆடைகளை குறைத்து, உடலை காட்டும் நடிகைகளே பாலியல் தூண்டலுக்கு காரணம்: பிரபலம்
சென்னை: சினிமாக்களில் ஆடை குறைப்புகளை செய்து, ஆபாசமாக நடனமாடுவதுதான், சமுதாயத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரிக்க காரணம் என்று மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா குற்றஞ்சாட்டியிருக்கிறார்.. நடிகைகள் தங்கள் உடம்பை சினிமாவில் படையல் போடுவதால் மட்டுமே, பாலியல் குற்றங்கள் அதிகளவில் பதிவாகின்றன என்றும் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
BBT என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சேகுவேரா,"சுந்தர் சி.யின் அரண்மனை படத்தில் கடைசியாக எதுக்கு அந்த பாட்டு? அது தேவையேயில்லை.. சம்பந்தமே இல்லாமல் அந்த பாட்டு திணிக்கப்பட்டிருப்பது ஒரு வியாபார யுக்திதான்..

பாலியல் தூண்டல்கள்
இத்தனைக்கும் தமன்னாவுக்கு இன்று பெரியளவில் மார்க்கெட் கிடையாது. அதெல்லாம் ஒருகாலத்தில் இருந்தது.. இன்று அவரை படத்தில் நடிக்க வைத்தால், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் ரீச் கிடைக்கும் என்பதால்தான் வாய்ப்புகள் தரப்படுகின்றன.. 30 நாளில் ஷூட்டிங்கையும் முடித்துவிடலாம்.
இன்றைக்கு இருக்கற நடிகைகளிலேயே அதிக அளவிலான ஆடைக்குறைப்பு செய்பவர் தமன்னாதான்.. இப்படி ஆடை குறைப்பு செய்து, ஆபாசமாக நடிக்க வைக்கும்போதுதான், பாலியல் தூண்டல்கள் நடக்கின்றன..
மூளையை வறுத்து சாப்பிட்டது நினைவில்லையா
இந்த பாலியல் தூண்டல்கள் 70 வயது பெண்மணிக்கும் உண்டு, 15 வயது சிறுவனுக்கும் நடக்கிறது.. பெண்ணின் மூளையை வறுத்து தின்னும் அளவுக்கு புத்தி பேதலித்துள்ளது.. உடம்பை சினிமாவில் படையல் போடுவதால் மட்டுமே, இப்படியான பாலியல் குற்றங்கள் பதிவாகின்றன.
நான் எல்லா நடிகைகளையும் சொல்லவில்லை.. ஆனால், வியாபாரத்துக்காக, பணத்துக்காக, ஆபாசத்தை காட்டும் நடிகைகள்தான் இதற்கெல்லாம் காரணம் என்பதை பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டுகிறேன். ஆண்களை மட்டும் "பொறுக்கிகள்" என்று என்றுசொல்லாதீர்கள்.. அப்படியானால் படவாய்ப்புக்காக எவ்வளவு வேண்டுமானாலும், ஆடைகளை குறைக்க தயாராக உள்ள நடிகைகளை என்னவென்று சொல்வது? இப்படி ஆடை குறைப்பு செய்வதற்கும், நடிப்புக்கும் என்ன சம்பந்தம்?
சிந்தனை மடைமாற்றம் செய்யப்படுகிறது
இங்கு சிந்தனை மடைமாற்றம் செய்யப்படுகிறது.. இன்றைக்கு 24 மணி நேரத்தில், 6 மணிநேரம், வெறும் பொழுதுபோக்குக்காகவே செலவிடப்படுகிறது.. சமூகத்துக்கு தேவையான எத்தனையோ வசனங்களை கலைஞர் எழுதியிருக்கிறார். அதெல்லாம் டிரோல் செய்யப்படுகிறதா? எம்ஆர் ராதா பேசிய எத்தனையோ வசனங்கள் உள்ளன.. அறிவுரைகளை தரக்கூடிய கருத்துக்களை அவர் எவ்வளவோ சொல்லியிருக்கிறார்.. அதெல்லாம் டிரோல் ஆகுதா?
கண்டதையெல்லாம் பாடல் வரிகளாக எழுதுவது, கண்டதையெல்லாம் டான்ஸ் என்று ஆடுவது, பணத்துக்காக ஆடைக்குறைப்பு செய்வது, இது மூன்றும் சேரும்போது, ஆபாசம் வெடித்து கிளம்புகிறது" என்று பேசியிருக்கிறார் சேகுவேரா
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications