விஜய் அரசியல்.. நடிகை த்ரிஷா சொன்ன மெசேஜ்! உடனே ஆரவாரம் செய்த ரசிகர்கள்.. வைரல் வீடியோ!

Subscribe to Oneindia Tamil

சென்னை: SIIMA விருது வழங்கும் விழா மேடையில் நடிகை திரிஷா, விஜய்யின் அரசியல் பயணம் பற்றிப் பேசி இருக்கிறார். தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி உள்ள விஜய், முதல் முறையாக 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் நிலையில், விஜய்யின் கனவு நிறைவேற வாழ்த்துக் கூறியுள்ளார் நடிகை த்ரிஷா.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் விஜய். அவர் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் 'ஜனநாயகன்' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்தப் படம் அடுத்த வருடம் பொங்கல் ரிலீஸ் ஆக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. அதுதான் தனக்கு கடைசி படம் என ஏற்கனவே அறிவித்துள்ளார் விஜய். அதன் பிறகு முழு நேர அரசியல்வாதியாக தன்னை ஈடுபடுத்த இருக்கிறார் விஜய்.

Actress Trisha Backs Vijay s Political Entry Wishes Success for TVK at SIIMA Stage

விஜய் அரசியல்

சமீபத்தில் மதுரையில் மிகப்பெரிய அளவில் மாநாட்டை நடத்தினார் விஜய். திருச்சியில் தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை விரைவில் தொடங்க இருக்கிறார் விஜய். அடுத்தடுத்து அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இனி சட்டசபை தேர்தல் வரை விஜய்யின் அரசியல் செயல்பாடுகள் அனல் பறக்கும் எனத் தெரிகிறது.

இந்நிலையில், சைமா விருது வழங்கும் விழாவில், நடிகை திரிஷா விஜய்யின் அரசியல் பற்றி பேசி உள்ளார். தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழா (SIIMA) துபாயில் நடந்தது. சைமா விருது வழங்கும் விழாவில் திரிஷாவுக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்துள்ளது. சினிமாவில் 25 ஆண்டுகளாக கோலோச்சி வரும் த்ரிஷாவுக்கு சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

விஜய்யின் அரசியல் பயணத்துக்கு வாழ்த்து சொன்ன த்ரிஷா

அப்போது நடிகை த்ரிஷாவிடம், விஜய்யின் புகைப்படத்தை எல்.இ.டி திரையில் காட்டி இவரிடம் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது. திரையில் விஜய்யின் புகைப்படத்தை திரிஷா பார்த்ததும் புன்முறுவலுடன் சிரிக்க அரங்கம் ஆரவாரத்தால் அதிர்ந்தது.

இதையடுத்து பேசிய த்ரிஷா "விஜய் ஒரு புதிய பயணத்தை ஆரம்பத்து இருக்கிறார். அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள். அவருடைய எல்லா கனவுகளும் நிறைவேற வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. அவர் அதற்கு தகுதியானவர்" எனத் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் குறித்து த்ரிஷா பேசிய விடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

விஜய் - த்ரிஷா

நடிகை த்ரிஷா விஜய்யுடன் கில்லி, ஆதி, திருப்பாச்சி, குருவி, லியோ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான 'கோட்' திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு த்ரிஷா நடனமாடியிருந்தது குறிப்பிடத்தக்கது. விஜய்யுடன் அதிகமுறை ஜோடி சேர்ந்து நடித்த நாயகி த்ரிஷா தான். நீண்டகாலமாக இருவரும் நட்புடன் இருந்து வரும் நிலையில், விஜய்யின் கனவு நிறைவேற த்ரிஷா வாழ்த்து தெரிவித்துள்ளது கவனம் பெற்றுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+