நடிகர் ரியாஸ் கானின் மருமகள் யார்? ஷாரிக்கின் வருங்கால மனைவியின் போட்டோவை வெளியிட்ட மாமியார் உமா
சென்னை: நடிகர் ரியாஸ் கான்- உமா ரியாஸ் கான் மகன் ஷாரிக் கானுக்கு திருமணம் என்று செய்திகள் வெளிவந்த நிலையில் அவை உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில் உமா ரியாஸ் கான் தனது வருங்கால மருமகளை அறிமுகம் செய்துள்ளார். நேற்று முதல் இந்த தகவல் வெளி வந்த நிலையில் இது உண்மையா இல்லை வதந்தியா என சந்தேகம் எழுந்த நிலையில் தற்போது ஆகஸ்ட் 8ஆம் தேதி திருமணம் என உமா ரியாஸ் கான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து உமா ரியாஸ் கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மருமகள் குறித்து தகவல்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: எனது மகன் இந்த அழகான தேவதையை திருமணம் செய்து கொள்ள போகிறார். இருவருக்கும் என் ஆசிகள். ஆகஸ்ட் 8ஆம் தேதி அவர்களது திருமணம் நடைபெறுகிறது என குறிப்பிட்டு தனது மகனின் ஐடியை டேக் செய்துள்ளார். அது போல் மரியா ஜெனிபர் என்ற ஐடியையும் அவர் டேக் செய்துள்ளதால் மணமகள் பெயர் அதுவாக இருக்கலாம் என தெரிகிறது.

மணமகள் மரியா ஜெனிபர் யார், அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார். அவருடைய பணி என்ன, அவர் ஷாரிக்கிற்கு எப்படி அறிமுகமானார், இது காதல் திருமணமா இல்லை பெற்றோரால் நிச்சயித்த திருமணமா என்பது குறித்து எந்த விவரங்களும் தெரியவில்லை.
ரியாஸ்கான் சில படங்களில் வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். இவர் பிரபல நடிகை கமலா காமேஷின் மகள் உமாவை திருமணம் செய்து கொண்டார். உமா ரியாஸ் குக் வித் கோமாளி சீசன் 1 இல் வந்திருந்தார். அவர்தான் அந்த சீசனின் ரன்னர் அப்! இவர்களது மகன் ஷாரிக் சில படங்களில் நடித்து வருகிறார். இவர் நேற்று இந்த நேரம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அது போல் ரிசார்ட் என்ற படத்திலும் நடித்திருந்தார். பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் 49 நாட்கள் வரையே இருந்தார். அவரால் வீட்டை விட்டு தனியே இருக்க முடியவில்லை. இதனால் அவர் வெளியேற்றப்பட்டார்.

அது போல் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் அவர் 21 நாட்களில் வெளியேற்றப்பட்டார். பிறகு பிபி ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் அனிதா சம்பத்துடன் நடனமாடினார். இந்த நிகழ்ச்சியில் ஷாரிக் அனிதா சம்பத் ஜோடி டைட்டில் வின்னரானது. தற்போது 29 வயதாகும் ஷாரிக்கிற்கு வரும் 8ஆம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெறும் இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் மட்டுமே கலந்து கொள்ள இருப்பதாகவும் சொல்லப்பட்டது. இதன் பிறகு நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியில் திரைத்துறையினருக்கு அழைப்பு விடுக்கப்படுவதாகவும் தெரிகிறது.
உமா ரியாஸ் எப்போதும் சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருப்பார். அவரும் ஷாரிக்கின் திருமணம் குறித்து எதையும் சொல்லவில்லை என்பதால் இந்த தகவல் உண்மையா வதந்தியா என சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் அது உண்மைதான் என்பதை தனது மருமகளின் புகைப்படத்தை வெளியிட்டதன் மூலம் உமா ரியாஸ் கான் நிரூபித்துவிட்டார்.
ரியாஸ் கான் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர். இவர் தினமும் உடற்பயிற்சி, யோகா என தனது உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வதில் அதிக கவனம் செலுத்துவார். இவருடைய மகன் ஷாரிக்கும் உடற்பயிற்சிகளை செய்வார். அது போல் உமா ரியாஸ், சமையல் செய்வதில் ரொம்ப டாப்! இவர் தனியாக ஒரு யூடியூப் சேனலையும் வைத்துள்ளார். அது போல் அழகுக் குறிப்புகளையும் அவர் கூறி வருகிறார்.
இசையமைப்பாளர் காமேஷின் மகள்தான் உமா. இவரும் ரியாஸும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஷாரீக் இல்லாமல் சமர்த்ஹாசன் என்ற மகனும் உள்ளார். உமாவை காதலித்த ரியாஸ், மூன்றே மாதங்களில் திருமணம் செய்து கொண்டார். ரியாஸுக்கு திருமணமான போது அவருக்கு வயது 21, உமாவுக்கு 19. இரு வீட்டாரிடமும் திருமணத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது.
உமாவை திருமணம் செய்து கொண்டதற்காக ரியாஸின் தாய், அவரை ஏற்கவில்லையாம். ஆனால் ரியாஸின் அப்பா ஏற்றுக் கொண்டாராம். ரியாஸின் அப்பா தயாரிப்பாளர் ரஷீத். தாய் ரஷீதா பானு. அக்கா பெயர் ரோஷினி. ரியாஸ் கானின் குடும்பம் சிறு வயதிலேயே சென்னைக்கு குடிபெயர்ந்தது. உமா ரியாஸ் தமிழகத்தைச் சேர்ந்தவர்.
-
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
வேட்பாளர் லிஸ்டில் பெயர் இல்லை.. அண்ணாமலை இன்று மாலையே முக்கிய மூவ்.. வியந்து போன வானதி.. அசத்தல் -
1988ல் "மக்கள் ஆணையிட்டால்" படத்தில்! விஜயகாந்துக்காக ஸ்டாலின் பாடிய பாடல் இதுதான்! -
கொத்தாக காலியாகும் டெபாசிட்.. தவெக விஜய்க்கு பெரிய சிக்கல்.. 3 பெரிய சர்வேவில் இருக்கும் வார்னிங்! -
திசைமாறிய திருமாவளவன்.. திடீரென தேர்தல் ‘ரிவர்ஸ்’ கியர்.. அப்செட்டான திமுக! இதான் ரியல் காரணம்? -
மகளிர் உரிமை தொகை ரூ.2 ஆயிரம், ரூ.8,000 கூப்பன் வாக்குறுதிகள் என்னை கவர்ந்தது.. நடிகை ரோகிணி! -
ராஜ்யசபா எம்பி சீட் தருவதாக கூறி ஏமாற்றியவர் எடப்பாடி பழனிசாமி! ஆதாரத்தை காட்டி பிரேமலதா விமர்சனம் -
திமுக கூட்டணியின் 'பவர் மேக்னட்' ஆன பிரேமலதா.. ஸ்டாலினின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. என்ன நடந்தது? -
“எங்கள் கைதியாக இருப்பதே உங்க பையனுக்கு பாதுகாப்பு!” அமெரிக்க விமானியின் தாய்க்கு ஈரான் மெசேஜ் -
அறிவார்ந்த அரசியல்வாதி.. சுந்தர்.சி-யால் பயத்தில் இருக்காரு.. பிடிஆரை சீண்டும் பாஜக நிர்வாகி குஷ்பு! -
Tata: டாடா அறக்கட்டளையிலிருந்து விலகினார் "டிவிஎஸ்" வேணு சீனிவாசன்! பின்னணி என்ன? -
"ஒரு நிமிடம் 2 டிரோன்கள்.." அமெரிக்க உளவு துறை அலுவலகத்தை காலி செய்த ஈரான்! உச்சக்கட்ட பதற்றம்












Click it and Unblock the Notifications