Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெண்ணிற ஆடை நிர்மலா யார் தெரியுமா? பணக்கார வீட்டு "ஜூரி'' மகள்.. முதல் சினிமா சான்ஸ் வந்ததுமே.. செம

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்ப்பட உலகில் மிகச்சிறந்த நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா.. அசாத்திய திறமைசாலி.. மிகச்சிறந்த பரதநாட்டிய கலைஞர்.. இவர் திருமணமே செய்து கொள்ளவில்லை. அருணாச்சலம் படம் ஷூட்டிங்கின்போதும், "கல்யாணம் பண்ணாம உங்களை எப்படி விட்டு வெச்சாங்க" என்று ரஜினிகாந்த் ஆச்சரியமாக இவரிடம் கேட்டாராம்.. சினிமா, சீரியல்களில் நடித்து எந்நேரமும் பிசியாகவே இருந்தவர்.. இவருக்கு முதல் பட வாய்ப்பு எப்படி கிடைத்தது தெரியுமா?

தமிழகத்தில் கும்பகோணத்தை பூர்வீகமாகக் கொண்ட நடிகை "வெண்ணிற ஆடை" நிர்மலா.. இவரது பெயர் ஏ பி சாந்தி... ஸ்ரீதர் டைரக்ஷனில் 1965ல் "வெண்ணிற ஆடை" என்ற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.. இதே படத்தில் ஜெயலலிதா, ஸ்ரீகாந்த், வெண்ணிற ஆடை மூர்த்தி என பலரும் அறிமுகமாகியிருந்தனர்..

Vennira Aadai Nirmala dancer

ஜெயலலிதாவை போலவே, இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்தவர் நிர்மலா.. இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, பெயரை மாற்றம் செய்து, படத்துடன் பெயரையும் இணைத்து, :"வெண்ணிற ஆடை" நிர்மலா என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அமங்கல பெயர் - வெண்ணிற ஆடை

வெண்ணிற ஆடை என்ற அமங்கலச்சொல்லை எதுக்காக பெயருக்கு முன்னால் சேர்த்து கொள்ள வேண்டும்? என்று பலரும் நிர்மலாவிடம் கேட்கவும், வெண்ணிற ஆடை பெயரை சேர்க்க வேண்டாம் என்று நிர்மலாவும் சொன்னாராம். ஆனால், எந்த நிர்மலா? என்ற குழப்பம் பலருக்கும் வரும் என்பதால், அதனை தவிர்க்கவே வெண்ணிற ஆடை என்று பெயருக்கு முன்னால் சேர்க்கப்பட்டதாம்.

இந்த படம் நடித்து முடித்ததுமே, மீண்டும் படிப்பை தொடர நினைத்துள்ளார் நிர்மலா.. ஆனால், வெண்ணிற ஆடை படம் தந்த வெற்றி, அடுத்தடுத்த வாய்ப்புகளை அவருக்கு வழங்க ஆரம்பித்துவிட்டது.. காட்டு துளசி என்ற மலையாள படத்தில் நடித்து, அந்த படமும் ஹிட்டடித்துவிட்டதால், மலையாள படங்களும் வரிசை கட்டி நிர்மலா முன்பு நின்றன..

வரிசையாய் ஹிட் படங்கள்

சினிமாவில் அறிமுகமாகி மிகக்குறுகிய காலகட்டத்திலேயே, எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் என முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.. இதில், 1968ல் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் லக்ஷ்மி கல்யாணம் என்ற படத்தில் தன்னுடைய கனமான கேரக்டரை உணர்ந்து, அற்புதமான நடிப்பை வெளிக்காட்டியிருந்தால், தமிழக ரசிகர்கள் நிர்மலாவை கொண்டாட துவங்கினர்.

தொடர்ந்து, ரகசிய போலீஸ் 115, மன்னிப்பு, பூவா தலையா, எங்க மாமா, தங்கச்சுரங்கம், கன்னிப்பெண், சுடரும் சூறாவளியும், இதயக்கனி, இன்று போல் என்றும் வாழ்க, ஊருக்கு உழைப்பவன் என்று பல்வேறு படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் அன்பை சம்பாதித்தார். அதிலும் அவள் என்ற படம், வெண்ணிற ஆடை நிர்மலாவின் சினிமா கேரியரிலேயே மறக்க முடியாத படமாக அமைந்தது என்று சொல்லலாம்.

ஜூரி - கும்பகோணம் செல்வந்தர்

200 படங்களுக்கும் தமிழ் படங்களிலும், 50 படங்களுக்கு மேல் மலையாளத்திலும் நடித்திருக்கிறார் என்றாலும், இவருக்கு முதல்பட வாய்ப்பு கிடைத்தது? நிர்மலாவின் குடும்ப பின்னணி என்ன தெரியுமா?

நிர்மலாவின் அப்பா பாலகிருஷ்ணன், தஞ்சாவூர் கோர்ட்டில் "ஜுரி''யாக பணிபுரிந்தவர்.. அதாவது, வழக்கு விசாரணையை கவனித்து, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கலாமா? அல்லது விடுதலை செய்யலாமா? என்று நீதிபதிக்கு ஆலோசனை தருபவர்களை "ஜூரி'' என்பார்கள்.. மிகவும் வசதி படைத்த, செல்வாக்கு படைத்தவர்கள்தான், இந்த பதவியில் வகிக்க முடியுமாம்.

அந்தவகையில் நிர்மலாவின் முன்னோர்களும் செல்வந்தர்கள்தான்.. "அரண்மனைக்குடும்பம்'' என்றுதான் இவர்களை அழைப்பார்களாம்.

நாட்டிய அரங்கேற்றம்

ஒருநாள் நிர்மலாவின் அப்பா ரெயிலில் சென்று கொண்டிருந்தபோது, வாசுதேவாச்சாரியார் என்பவரை சந்திக்க நேர்ந்துள்ளது.. அவர் பரத நாட்டியம் பற்றி உயர்வாக பேசியதுடன், "ராஜராஜசோழனே தன்னுடைய மகளுக்கு நாட்டியம் கற்றுத் தந்தார்'' என்று சொன்னாராம்..

இதைக்கேட்டு ஆச்சரியப்பட்ட பாலகிருஷ்ணன், தன்னுடைய மகளுக்கும் நடனம் கற்றுத்தர முடிவு செய்துள்ளார்.. உறவினர்கள் இதற்கு எதிர்ப்பு காட்டியபோதும், கும்பகோணம் சண்முகசுந்தரம்பிள்ளை என்ற நாட்டிய கலைஞரிடம், தன்னுடைய 6 வயது மகள் நிர்மலாவை சேர்த்து விட்டுள்ளார்..

கும்பகோணத்தில் மகளுக்கு நாட்டிய அரங்கேற்றம் நடந்து முடிந்ததுமே, சென்னையில் நடன நிகழ்ச்சியையும் பாலகிருஷ்ணன் நடத்தியிருக்கிறார்.. பிறகு பிரபல நடிகை வைஜெயந்திமாலா நடத்தி வந்த "நாட்டியாலயா'' என்ற நடனப்பள்ளியிலும் நிர்மலாவை பாலகிருஷ்ணன் சேர்த்து விட்டார்.

நாட்டிய திலகம் பட்டம்

இந்த நேரத்தில்தான், "வெண்ணிற ஆடை'' படத்துக்காக புதுமுகங்களை டைரக்டர் ஸ்ரீதர் தேடிக் கொண்டிருந்தார்.. அப்போது மூத்த பத்திரிகையாளர் நவீனன், வைஜெயந்திமாலாவின் டான்ஸ் ஸ்கூலில் நிர்மலாவை பார்த்து ஆச்சரிப்பட்டு போனார்.. உடனே பாலகிருஷ்ணனை சந்தித்து பேசி வெண்ணிற ஆடை படத்தில் நடிகைகள் தேர்வு குறித்து சொல்லியிருக்கிறார்.

சினிமா என்றாலே பாலகிருஷ்ணனுக்கு விருப்பமில்லை என்றாலும், மகளின் நடனத் திறமையை வெளிப்படுத்த சினிமா உதவும் என்று எண்ணினார்.. தந்தையின் விருப்பப்படியே, சினிமாவில் மட்டுமல்ல, பல்வேறு கலைநிகழ்ச்சி தொடர்ந்து நடத்தி வந்தார் வெண்ணிற ஆடை நிர்மலா.. அத்துடன், நாட்டிய திலகம் என்ற பட்டத்தையும் பெற்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+