விசித்ரா எமோஷனல்.. சிங்கிளாவே இருந்துடலாம்னு நினைச்சேன்.. கணவர், குழந்தைகளே உலகம்.. இதுதான் அன்பு
சென்னை: குழந்தைகள், கணவரின் மகிழ்ச்சியை யாரும் இப்போது நினைப்பது கிடையாது. எவ்வளவு தான் காசு, பணம், புகழ் இருந்தாலும், அவைகளை குடும்பத்துடன் தான் நீங்கள் பகிர்ந்துகொள்ள வேண்டும். அந்தவகையில், இந்த மேடையில் என் கணவர் என் குழந்தைகள் இருப்பது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது" என்று நடிகை விசித்ரா உணர்வுப்பூர்வமாக பேசியிருப்பது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
பிரபல நடிகை விசித்ரா, 90களில் பல படங்களில் நடித்து வந்தவர்.. ஹீரோயினாக வரவேண்டும் என்று ஆசைப்பட்டு சினிமாவுக்கு வந்து, கிளாமர் ரோல்களே விசித்ராவுக்கு அமைந்தன.. அந்தவகையில், தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளிலும் கிளாமர் ரோல்களிலேயே நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார்..

குக் வித் கோமாளி
ஒருகட்டத்தில் சினிமாவிலிருந்து ஒதுங்கிய விசித்ரா, திருமணம் செய்துகொண்டு செட்டிலானார்... பிறகு நீண்ட கால இடைவெளிக்கு பிறகு, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று, விதவிதமான சமையலை சமைத்து, ரசிகர்களின் பாராட்டை பெற்றார்.. விசித்ரா யார் என்பதே இந்த நிகழ்ச்சியின்போதுதான், ஓரளவு மக்களுக்கு தெரிய வந்தது..
இதற்கு பிறகுதான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, அந்த 7வது சீசனையே திரும்பி பார்க்க வைத்தார் விசித்ரா.. விளையாடுவதற்கு வயது ஒரு தடையில்லை என்பதை தன்னுடைய யுக்தியால் முறியடித்தார்..
பாலியல் வக்கிரமம்
துணிச்சலான பேச்சு, நடிகர் ஒருவரின் பாலியல் வக்கிரமம், தன்னுடைய குடும்பத்தார் மீதான பாசம் அனைத்தையும் இந்த விளையாட்டில் வெளிப்படுத்தியிருந்தார் விசித்ரா. இதனால், நடிகையாகபோது இருந்த ரசிர்களைவிட, பிக் பாஸ்நிகழ்ச்சிக்கு பிறகு விசித்ராவுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவானது.
அதிலும் பிரபல நடிகரின் தன்னை தவறான கண்ணோட்டத்தில் அணுகினார் என்று சொன்னதுமே, அந்த ஹீரோ யார்? என்று இணையத்தில் ரசிகர்கள் மிகப்பெரிய ஆராய்ச்சியிலும் அப்போது ஈடுபட்டிருந்ததை மறுக்க முடியாது.
இந்நிலையில் விஜய்யுடன் நடித்த அனுபவத்தை நினைவுகூர்ந்தபோது, "ரசிகன் படத்தின்போது, விஜயிடம் நார்மலா பேச சொன்னாலே நான் நன்றாக பேசிவி நடித்துவிடுவேன். ஆனால், குழந்தை மாதிரி கொஞ்சி கொஞ்சி பேசணும் என்று சொன்னதுமே, எனக்கு சிரிப்பு வந்துவிட்டது.. அதேபோல, பல படங்களில் பிடிக்காமல் நடிக்காமல் இருந்தேன் என்றெல்லாம் பழைய விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
விசித்ரா எமோஷனல்
சமீபத்தில் விசித்ராவை கௌரவிக்கும் நிகழ்ச்சியில் பேசியபோது, "எனக்கெல்லாம் கல்யாணம் நடக்குமா? என்றெல்லாம் யோசித்திருக்கிறேன். ஒரு கட்டத்தில் கல்யாணமே வேண்டாம், இப்படியே சிங்கிளாகவே இருந்துவிடலாம் என்று கூட முடிவெடுத்தேன்.
அப்போதுதான் ஷாஜி என்னை திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்தார். நான் ரொம்ப யோசித்தேன். திருமணம் குறித்து என்னுடைய கணவர் கேட்டபோதுகூட, திருமண வாழ்க்கையை சரியாக என்னால் பார்த்துக்கொள்ள முடியுமா? என்ற சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது..
சவாலான வாழ்க்கை
திருமணத்திற்கு பிறகும்கூட என் வாழ்க்கை சவாலாக மாறியது. இப்போது 3 பிள்ளைகள் இருக்கிறார்கள்.. எந்த பெண்ணும் எப்பேர்ப்பட்ட உயரத்தில் இருந்தாலும், உங்களுக்கென்று அன்பு காட்டுவதற்கு கணவரும், உங்களது உலகமுமான குழந்தைகளும் இருப்பதுதான் மகிழ்ச்சி,..
குழந்தைகள், கணவரின் மகிழ்ச்சியை யாரும் இப்போது நினைப்பது கிடையாது. எவ்வளவு தான் காசு, பணம், புகழ் இருந்தாலும், அவைகளை குடும்பத்துடன் தான் நீங்கள் பகிர்ந்துகொள்ள வேண்டும். அந்தவகையில், இந்த மேடையில் என் கணவர் என் குழந்தைகள் இருப்பது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது.. அதிலும்,பல வருடங்கள் கழித்து என்னுடைய திருமணத்தை பற்றி யோசிக்கும்போது ரொம்ப எமோஷனலாக இருக்கிறது" என்றார்..
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications