நீயா நானாவில் வீட்டு வேலை செய்பவர்கள் Vs குடும்பத் தலைவிகள்.. போலி கிரீட மகாராணிகள்.. நடிகை காட்டம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான நீயா நானாவில் வீட்டு பணியாளர்களுக்கு உரிமையாளர்கள் வார ஓய்வு தர மறுத்த விவாதத்தை பார்த்த நடிகை விஜயலட்சுமி, வீட்டில் வேலை பார்ப்போர் ஒன்றும் அடிமை இல்லை என காட்டமாக தெரிவித்துள்ளார்.
விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வரும் நிலையில் நீயா நானா எனும் விவாத நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. பல ஆண்டுகளாக நடைபெற்றும் இந்த நிகழ்ச்சியில் நல்ல நல்ல கருப்பொருள் குறித்து விவாதங்கள் நடைபெறும்.
இந்த நிகழ்ச்சியில் அலசப்படும் டாப்பிக் யாருக்கும் போரடிக்காமலும் சிரிப்பை வரவழைப்பதாகவும் இருக்கும். வீட்டுக்குள் நடக்கும் குடும்ப சண்டைகளை ஜோவியலாக இந்த நிகழ்ச்சியில் அலசுவதும் இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு காரணமாகும்.

வீட்டு வேலை
அந்த வகையில் இந்த வாரம் வீட்டு பணியாளர்களுக்கு வார விடுமுறை குறித்து வீட்டு வேலை செய்யும் பணியாளர்களுக்கும் அவர்களை பணிக்கு அமர்த்திய குடும்பத் தலைவிகளுக்கும் இடையே விவாதம் நடைபெற்றது. அப்போது வீட்டு பணியாளர்களின் கோரிக்கை என்பது வாரத்தில் ஒரு நாள் விடுமுறை. அதாவது ஞாயிற்றுக்கிழமைகளில் வார விடுமுறை வேண்டும் என்பதாக இருந்தது.

உரிமையாளர்கள்
ஆனால் இதற்கு உரிமையாளர்கள் மறுத்தனர். அதாவது ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டில் இருக்கும் உறுப்பினர்களுக்கு விடுமுறை, அன்றைய தினம் வீட்டிற்கு உறவினர்களும் நண்பர்களும் வருவார்கள். இதனால் வீட்டில் வேலை அதிகமாக இருக்கும். எனவே வார ஓய்வு கொடுக்க இயலாது என்றார் ஒரு பெண்.

வீட்டு பணியாளர்
அதற்கு வீட்டு பணியாளர், அதே போல்தான் எங்கள் வீட்டிலும் ஞாயிற்றுக்கிழமை குழந்தைகள், கணவர் என விடுமுறையில் இருப்பார்கள். நாங்களும் அவர்களுடன் நேரத்தை செலவிட வேண்டாமா என்றார். அப்போது வீட்டு உரிமையாளர் ஒருவர் வேலை செய்வோர சாவு வீட்டிற்கு செல்ல நாங்கள் லீவு கொடுக்க மாட்டோம் என சொல்லவில்லை. இவர்கள் ஒரு நாள் லீவு போட்டால் எங்களுக்கு அந்த நாள் மிகவும் கஷ்டமாகிவிடும் என்றார்.

ரெஸ்ட் வேண்டாமா
அதற்கு வீட்டு பணியாளர், உங்கள் வீட்டு வேலையை ஒரு நாள் உங்களால் செய்ய முடியவில்லை. மாதம் முழுவதும் நாங்கள் செய்கிறோம். எங்களுக்கு ஒரு நாள் கொடுததால் என்னவாகிவிடும். நீங்கள் வெளியே வேலைக்கு போவதை போல் நாங்களும் தானே போகிறோம். எங்களுக்கு ரெஸ்ட் வேண்டாமா? என கேட்டார்.

குடும்பத் தலைவி
அதற்கு வேலைக்கு அமர்த்திய குடும்பத் தலைவி, லீவு வேண்டுமென்றால் உடம்பு சரியில்லை என சொல்லிவிட்டு லீவு எடுத்துக்கட்டும் என்றார். அதற்கு வீட்டு பணியாளர், எதுக்கு நாங்கள் பொய் சொல்லிவிட்டு லீவு எடுக்கணும் என கேட்டார். சிங்கிள் மதர் ஒருவர் கூறுகையில் என் மகனுக்கு நான் மட்டும்தான இருக்கிறேன்.

விடுமுறை
ஞாயிற்றுக்கிழமை அவனுக்கு விடுமுறை என்பதால் என்னால் அவனுடன் நேரம் செலவிட முடியவில்லை என்றார். அதற்கு வேலை கொடுத்த குடும்பத் தலைவியோ , அந்த மகன் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தானே வேலைக்கு வந்தீர்கள். அதான் இரவு முழுவதும் உங்கள் மகனை பார்த்துக் கொள்கிறீர்களே அது போதாதா என்கிறார்கள். அதற்கு அந்த வீட்டு பணியாளரோ என் மகனுக்கு பிடித்ததை கூட செய்யமுடியாமல் உங்கள் பிள்ளைகளுக்காகவே நான் வேலை செய்கிறேன் என்றார்.

விஜயலட்சுமி
இப்படியாக மனசாட்சியே இல்லாமல் வேலை கொடுப்பவர்கள் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நடிகையும் அகத்தியனின் மகளுமான சர்வைவர் டைட்டில் வின்னர் விஜயலட்சுமி கூறுகையில் இது முற்றிலும் ஒரு ஆணவம். நீங்கள் அவர்களை வேலைக்கு எடுத்ததற்கு காரணமே அவர்களுடைய சேவை உங்களுக்கு வேண்டும் என்பதால்தான்.

அடக்கி ஆளாதீங்கள்
நீங்கள் எப்படி ஒருத்தரின கீழ் பணிபுரிகிறீர்களோ அது போல்தான் அவர்களும் பணிபுரிகிறார்கள். நீங்கள் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளுங்கள், அவர்கள் ஒன்றும் உங்களுக்கு அடிமை இல்லை. உங்களுக்கு அவர்களது வேலையில் ஏதாவது பிரச்சினை இரு்நதால் அதை சொல்லுங்கள் அதை விட்டுவிட்டு அந்த பணியாளரை அடக்கி ஆள முயற்சிக்காதீர்கள்.

போலி கிரீடம்
இத்தனை கடின வேலை செய்யும் நீங்கள் ஒரு நாள்தானே லீவு கேட்கிறார்கள். லீவு எடுக்க அவர்களுக்கு முழு தகுதி உள்ளது. நீங்கலாம் இந்த சமூகத்தில் போலியான கிரீடத்தை வைத்துக் கொண்டு மகாராணியாக இருக்கிறீர்களே. எரிச்சலாக இருக்கிறது என விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications