ஓடிடியில் என்ட்ரி கொடுக்கும் அதிதி ராவ்.. ரொம்ப எக்ஸைட்டா இருக்காம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விளம்பரப் படங்கள் மூலம் சினிமா துறையில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை அதிதி ராவ். மணிரத்தின் காற்று வெளியிடை, செக்கச்சிவந்த வானம் மற்றும் சைக்கோ ஆகிய படங்களில் நடித்தவர்.

தற்போது துக்ளக் தர்பார் உள்பட சில படங்களிலும் நடித்து வருகிறார். பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகையாக உள்ளார். மேலும் தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார்.

தமிழில் சைக்கோ படத்தில் வித்தியாச நடிப்பைக் கொடுத்திருந்த அதிதி தற்போது தெலுங்கிலும், தமிழிலும் தவிர மலையாளத்திலும் என்ட்ரி கொடுத்துள்ளார்.


அதிதி ராவ்

அதிதி ராவ்

கர்நாடக இசைப்பாடகி வித்யா ராவ் தான் அதிதியின் தாயார். இவரது குடும்பம் ஹைதராபாத் சமஸ்தானத்தில் முக்கிய அம்சமாகும். இவர் நடிகர் அமீர்கான் மனைவியின் அத்தை மகளும் ஆவார். 2009இல் நடிகர் சத்திய தீபக் மிஸ்ராவுக்கும் இவருக்கும் திருமணம் நடந்தது. ஆனால் வாழ்க்கை கசக்கவே, இருவரும் விவாகரத்து செய்துகொண்டனர்.

இசையும் நடனமும்

இசையும் நடனமும்

பரதநாட்டியம் கர்நாடக இசையும் கற்றுக் கொண்டவர். இவ்வளவு பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் பிறந்து வசதியான பெண்ணாக வளர்ந்தாலும் அவருக்கு நடிப்பின் மீது ஒரு தீராத காதல் இருந்துள்ளது. அதிதியின் சினிமா பயணம் தமிழ் திரையுலகில் தான் தொடங்கியது. 2007 இல் வெளிவந்த ஸ்ரீரங்கம் படத்தில் விபச்சாரப் பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த நடிப்பு பாராட்டுக்களை பெற்றது.

இந்தியில் 11

இந்தியில் 11

2006ல் நடிக்க வந்த இவர் முதல் படமே மலையாளத்தில் பிரஜாபதியில் நடித்தார். பிறகு பாலிவுட் இவரை அழைத்தது. அங்கு 11 படங்களில் நடித்துள்ளார். 2011 இல் திரைக்கு வந்த ஏ சாலி ஜிந்தகி, படம் இவருக்கு சிறந்த துணை நடிகை விருது பெற்றுத்தந்தது. ஆனால் ரொம்பக் கவர்ச்சியா நடிக்கிறீங்களே என்று கேட்டபோது, எனக்கு கவர்ச்சியாக நடிப்பதை விட நடன காட்சிகளில் நடிப்பது தான் ரொம்ப பிடிக்கும் என கூறியுள்ளார்.

 அழகிய மாடல் அழகி

அழகிய மாடல் அழகி

பல விளம்பரங்களில் மாடலாகவும் நடித்து வருகிறார் தற்போது கூட அட்டை படங்களில் மாடல்களுக்காக ரொம்ப கவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கிறார். இயக்குனர் மணிரத்னம் மூலம் பத்து வருடங்களுக்கு பின் தமிழ் திரையுலகத்திற்கு மீண்டும் அறிமுகமாகியிருக்கிறார். மணிரத்னத்தின் படங்களில் நடிக்கும் ஹீரோயின்களுக்கு படம் வெளிவந்த பின் ரசிகர்கள் கூடுவது வழக்கம். அதுபோல 2017 இல் வெளிவந்த காற்றுவெளியிடை படம் டாக்டர் லீலா ஆபிரகாம் கதாபாத்திரத்தில் நடித்த அதிதிக்கு தமிழகத்தில் ரசிகர்களை அள்ளி தந்தது.

அழகிய பாடகி

அழகிய பாடகி


அதிதி ஒரு இசைப் பிரியை.. ஏ ஆர் ரகுமானின் மிகப்பெரிய ரசிகையாம் அவருக்கு ஒருமுறையாவது அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என ரொம்ப ஆசையாம். அதே போல நன்கு பாடக் கூடியவர். வான் வருவான் பாடல் அவர் பாடியதுதான். அது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. அந்த அளவு அவருடைய குரல் வளம் இருந்தது மிக அழகாக பாடியிருப்பார்.

இந்தியில் மறு பிரவேசம்

இந்தியில் மறு பிரவேசம்


காற்று வெளியிடை படத்திற்குப் பின் அதிதி மீண்டும் பாலிவுட்டுகே பறந்துவிட்டார். 2017 செப்டம்பர் வெளிவந்திருக்கும் 'பூமி' ஹிந்தி படத்தில் நடிகர் சஞ்சய் தத்தின் மகளாக நடித்துள்ளார். அதிதியின் நடிப்பு இந்தப் படத்தில் பிரமாதமாக இருக்கும். இனிவரும் காலங்களில் அதிதியை நாயகி ஆகவே படங்களில் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுபியும் சுஜாதாவும்

சுபியும் சுஜாதாவும்


தற்போது அதிதி நடித்துள்ள மலையாளப் படமான சுபியும் சுஜாதாவும் தியேட்டர்கள் இல்லாத காரணத்தால் ஓடிடியில் வரப் போகிறது. அமேசான் பிரைம் சானலில் ஜூலை 3ம் தேதி இப்படம் வெளியாகிறது. இது அதிதியை மிகவும் ஹேப்பியாக்கியுள்ளது. காரணம், அதிதி நடிப்பில் தயாரான ஒரு படம் ஓடிடியில் ரிலீஸாவது இதுவே முதல் முறையாகம். அந்த அளவில் மிகவும் எக்ஸைட்டடாக இருக்கிறாராம் அதிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+