Vijay Sister: நடிகர் விஜய்யின் தங்கை வித்யாவா இது! உயிருடன் இருந்தால் இப்படித்தான் இருப்பாரா? வாவ்!
சென்னை: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யின் தங்கை வித்யா உயிருடன் இருந்திருந்தால் எப்படி இருப்பார் என்பது குறித்து செயற்கை நுண்ணறிவு மூலம் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் கொடுத்து வந்தவர்களில் விஜய்யும் ஒருவர். அண்மையில் அவரது படங்கள் சில தோல்வியுற்றாலும், சில படங்கள் வெற்றியடைந்துள்ளன. இவர் தற்போது அரசியலுக்கு வந்துள்ளார்.
இதனால் ஜனநாயகன் படத்துடன் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு தீவிர அரசியலில் ஈடுபட போகிறார். இந்த படம் பொங்கலுக்கு வெளியாகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்புதான் மதுரையில் இரண்டாவது மாநில மாநாட்டை விஜய் நடத்தியிருந்தார். அதில் அவர் பேசிய பேச்சுக்கள் இன்னமும் விவாத பொருளாகியுள்ளது.
விஜய் திரைத்துறைக்கு வந்ததில் அவருடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனுக்கு எத்தனை பங்கிருக்கிறதோ அது போல் அரசியலுக்கு விஜய் வந்ததிலும் அவருக்கு அதிக பங்கிருக்கிறது. எனவே விஜய் கட்சி நிகழ்வுகளில் தனது மனைவி ஷோபாவுடன் எஸ்.ஏ.சந்திரசேகர் வருகை தருகிறார்.
இந்த நிலையில் நடிகர் விஜய்யின் தங்கை வித்யாவின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. சிறு வயதில் உடல்நலக் குறைவு காரணமாக வித்யா காலமாகிவிட்டார். அவருடைய மறைவு விஜய்க்கு மிகவும் பாதித்ததாக அவரது தாய் பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.
சுக்ரன் படத்தில் விஜய்யின் தங்கை வித்யாவின் புகைப்படத்தை காட்டியிருப்பார்கள். அது போல் வேலாயுதம், திருப்பாச்சி, சிவகாசி உள்ளிட்ட படங்களிலும் தங்கை சென்டிமென்ட்டை காட்டியிருப்பார்கள்.
இந்த நிலையில் நடிகர் விஜய்யின் தங்கை வித்யா தற்போது உயிருடன் இருந்தால் எப்படி இருப்பார் என்பதை ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ரசிகர் ஒருவர் வீடியோவை வெளியிட்டிருந்தார்.
அதில் அடர் பச்சை நிறத்தில் ஒரு புடவை அணிந்து கொண்டு தலை முடியை விரித்தபடி அழகாக சிரிப்படியே இருக்கிறார். அப்படியே பார்ப்பதற்கு விஜய் மாதிரியே இருக்கிறது. இந்த வீடியோவை பார்க்கும் பலர் அதை உருவாக்கிய நபரை பாராட்டி வருகிறார்கள். அப்படியே தங்களது இறந்த உறவினர்களின் வீடியோவை உருவாக்கித் தருமாறும் கேட்கிறார்கள்.
-
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications