மர்ம தேசம் நாகாவின் "ஐந்தாம் வேதம்" வெப் சீரிஸ் எப்படி இருக்கிறது?- விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் தொலைக்காட்சித் துறையில் மர்மம், புராணம் என சொல்லும் போது நம் நினைவுக்கு வருவது "மர்ம தேசம்" நாகாவின் பெயர்தான். இப்படிப்பட்ட நாகா தற்போது ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள 'ஐந்தாம் வேதம்' (Aintham Vedham) என்ற வெப் சீரிஸ் மூலம் மீண்டும் தனது பழைய முத்திரையை பதித்துள்ளார்.

பிரம்மனின் ஐந்தாவது தலையை சிவபெருமான் கொய்ததாக ஒரு புராணக் கதை உண்டு. அப்படி ஒரு ஐந்தாவது வேதம் உருவாகி இருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதுதான் இந்த தொடரின் அடிப்படை கருத்து. இந்த கருத்தை மையமாக வைத்து மூன்று ஆண்டுகள் கடினமாக உழைத்து திரைக்கதை எழுதியிருக்கிறார் நாகா.

ott television zee5

1990களில் சன் டிவி தொலைக்காட்சியில் "மர்ம தேசம்" என்ற தலைப்பில், "எதுவும் நடக்கும்," "விடாது கருப்பு," "ரகசியம்" போன்ற துணை தலைப்புகளை வைத்து சீரியல் இயக்கியிருந்தார். இதில், "விடாது கருப்பு" மற்றும் "ரகசியம்" மிகப்பெரிய ஹிட் ஆன தொடர்கள். "விடாது கருப்பு" என்பது கருப்பசாமி தெய்வம், எப்படி தவறு செய்தவர்களை தண்டிக்கும் என்பதை மிக மிக திரில்லாக கூறிய தொடர். "ரகசியம்" தொடரில் நவபாசாண லிங்கங்கள் மற்றும் கோவில் உள்ளே நடக்கும் மர்மங்களை காட்டியிருப்பார். அதுவும் வாராவாரம் எப்போது வரும் என திரில்லாக காத்திருந்து பார்த்த தொடராகும்.

திறமையான இயக்குநர்: நாகாவால் இப்படியும் இயக்க முடியுமா என்று வியக்கும் அளவுக்கு, நகைச்சுவை ஜானரில் வெளியான தொலைக்காட்சி தொடர் ரமணி vs ரமணி ஆகும். வெடி சிரிப்புகளுடன் காமெடி காட்சிகளை வைத்து வெளியான தொடர் அது. ரகசியம் தொடரின் ஹீரோவான நடிகர் ராம்ஜிதான், ரமணி vs ரமணி தொடரிலும் ஹீரோ. விடாது கருப்பு ஹீரோயின் தேவதர்ஷினிதான் இதில் ஹீரோயின்.

வாய்ப்பு தரும் நாகா: தனது தொடர்களில் நடித்தவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்கிறார் நாகா. "ஐந்தாம் வேதம்" தொடரிலும் அப்படித்தான் தந்துள்ளார். காசியிலிருந்து, தமிழகத்திலுள்ள ஒரு கோவிலுக்கு ஒரு பொருளை கொண்டு சேர்க்கும் பொறுப்பை சாமியார் ஒருவர் சாய் தன்ஷிகாவிடம் கொடுக்கிறார். மார்டன் மங்கையான அவருக்கு அதில் விருப்பமில்லை. ஆனாலும் எப்படியாவது அந்த பை அவரிடமே வந்து சேர்ந்துவிடுகிறது.

வேறு வழியில்லாமல் பையுடன் அவர் பயணிக்க அதற்குள் இருக்கும் சக்கரத்தின் பவர் காரணமாக, சாய் தன்ஷிகா யாரையாவது திட்டினால் கூட எதிர் தரப்புக்கு உடனே அதே மாதிரி பாதிப்பு ஏற்படுகிறது. இப்படியாக பல அமானுஷ்யங்களுடன் அருமையான திரில் தொடராக ஐந்தாம் வேதம் வெப் சீரிஸ் உள்ளது.

ott television zee5

ஏஐ தொழில்நுட்பம்: திரில் விரும்பிகளுக்கு தீனி போடும் வெப் சீரிஸ் இது. ஏஐ தொழில்நுட்பத்தின் பயன்பாட்டையும் முதல் எபிசோடிலேயே சூப்பராக காட்டியுள்ளார் இயக்குநர் நாகா. அடுத்த சில வருடங்களுக்குள் ஏஐ தொழில்நுட்பம் எப்படி நமது வாழ்க்கை முறையோடு ஒன்றிப்போய்விடும், அன்றாட வேலைகளுக்கு எப்படி யூஸ் ஆகும் என்பதை அருமையாக சித்தரித்துள்ளார்.

பழைய நாகா: சாமியாருடன், சிவன் அசரிரி பேசும் காட்சி கூஸ்பம்ப். விதிப்படி, சாமியார் தலை எதேர்ச்சையாக வெட்டப்படும் காட்சி, மர்ம தேசம் காலத்து நாகா இன்னும் கையில் அதே வித்தையை வைத்துள்ளார் என்று நிரூபிக்கிறது. திரில் விரும்பிகளுக்கு தீனி போடும் வெப் சீரிஸ் இது. மர்ம தேசம் நாகாவின் மீள் வருகை என்று தான் சொல்ல வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+