நிக்ஸன் எவிக்டட்! குத்தாட்டம் போடாத குறையாக ஐஷுவின் தந்தை செய்த செயல்.. டிரென்டாகும் இன்ஸ்டா
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7ஆவது சீசனில் இருந்து நிக்ஸன் எலிமினேட் ஆனதும் ஐஷுவின் தந்தை போட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7ஆவது சீசனில் பரபரப்புகளுக்கும் காதலுக்கும் பஞ்சமில்லாமல் இருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி முழுக்க முழுக்க கன்டென்ட் கொடுக்கப்பட்டு நடத்தப்படுகிறது. அப்போதுதான் பரபரப்பு ஏற்பட்டு டிஆர்பி ரேட்டிங் முன்னிலை பெறும் என்கிறார்கள்.

இந்த நிலையில் இந்த சீசனில் ஆரம்பத்திலிருந்தே மணிசந்திராவும் ரவீனாவும் காதல் ஜோடிகளாகவே வலம் வந்தனர். அது போல் பிக்பாஸ் வீட்டில் அவ்வப்போது பழகியதன் விளைவாக நிக்ஸனும் ஐஷுவும் காதலில் விழுந்தனர்.
இருவரும் முத்தம் கொடுத்து கொண்டது, ஓவராக பேசுவது உள்ளிட்டவைகளால் இவர்கள்தான் கன்டென்ட் கிரியேட்டர்கள் என பலர் நினைத்தனர். அது போல் நிகழ்ச்சியை உலகமே பார்க்கிறது என்கிற புரிதல் கூட இல்லாமல் பிக்பாஸில் ரொமாண்டிக் ஜோடிகளாக இருவரும் வலம் வந்தனர். இவர்களது விளையாட்டும் தனித்துவமும் நாளடைவில் குறைந்தது.
ஐஷு பிக்பாஸ் வீட்டுக்கு வந்த ஐந்தே வாரங்களில் எலிமினேட் ஆனதற்கு காரணமே நிக்ஸன்தான். அவருடன் ரொமான்ஸ் செய்வதையே தொழிலாக வைத்திருந்ததால் ரசிகர்கள் ஐஷுவை எலிமினேட் செய்ய வாக்களித்தனர். பிக்பாஸ் வீட்டை விட்டு வந்ததும் அவர் எப்படியெல்லாம் திரையில் காட்டப்பட்டிருக்கிறார் என்பதை நினைத்து ஐஷு அதிருப்தி அடைந்தார்.
இடையே ஐஷுவின் பெற்றோரும் தனது மகளின் பெயர் கெட்டு போவதை நினைத்து கவலைப்பட்டு பிக்பாஸிடம் தங்கள் மகளை வெளியே அனுப்புமாறு கேட்டுக் கொண்டிருந்தனர். அத்துடன் ஐஷு வெளியே வந்தது இனி பிக்பாஸ் சங்காத்தமே வேண்டாம் என கூறிய பெற்றோர் ஒரு பேட்டி கூட கொடுக்க வேண்டாம் என சொல்லிவிட்டனர்.
அது மட்டுமின்றி சோஷியல் மீடியாவில் கூட எந்த பதிவையும் போடாமலேயே இருந்தார். பிக்பாஸுக்கு பிறகு அவர் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் நான் மன அழுத்தத்தால் தற்கொலைக்கு முயன்றேன் என குறிப்பிட்டிருந்தார். இது ரசிகர்களை அதிர வைத்தது. இந்த நிலையில் நிக்ஸன் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து எலிமினேட் ஆனதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து ஐஷுவின் தந்தையின் இன்ஸ்டாகிராம் பதிவு வைரலாகி வருகிறது. அந்த பதிவில் ஸ்பைடர் படத்தில் நிறைய பேர் இறந்து அங்கு அழுகை சப்தத்தை கேட்டவுடன் காதுகளுக்கு இனிமையாக இருப்பதை போன்று ரியாக்ஷன் கொடுத்த எஸ்.ஜே.சூர்யாவின் புகைப்படத்தை போட்டுள்ளார். இதன் மூலம் நிக்ஸன் எலிமினேட் ஆவதில் தான் மகிழ்ச்சியாக இருப்பதாக மறைமுகமாக ஐஷுவின் தந்தை பதிவிட்டுள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications