சம்பளமெல்லாம் சர்வ சாதாரணம்.. யாருங்க இந்த நிழல் மனிதன்? ஐஸ்வர்யா ராய் பின்னாடியே வர்றாரே? அடேங்கப்பா
டெல்லி: பிரபல நடிகைகளுடன் சேர்ந்து, அவர்களுடன் தொடர்ந்து பயணிக்கும் நபர்களும் பிரபலமடைந்துவிடுவார்கள்.. இதில் ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பவர்கள், இந்த நடிகைகளின் மெய்க்காப்பாளர்கள்தான். அந்தவகையில், ஐஸ்வர்யா ராயின் பாதுகாவலர் இணையத்தில் பேசுபொருளாகி வருகிறார். என்ன காரணம்?
அரசியல்வாதிகளை போலவே, நடிகர், நடிகைகளும் தங்களுக்கான மெய்க்காப்பாளர்களை, தங்களது பாதுகாப்பாக நியமித்து கொள்வது வழக்கமாகும்.. கோலிவுட்டை பொறுத்தவரை, பிரபலங்களுக்கு வடமாநிலங்களில் ரசிகர்கள் அதிகம். எனவே, செல்லுமிடமெல்லாம் ரசிகர் கூட்டத்தை கட்டுப்படுத்த பாடிகார்டுகளை நியமிப்பது வழக்கமாகும்..

பாடிகார்டுகள்: இந்த பாடிகார்டுகளுக்கு அபரிமிதமான சம்பளத்தையும் வழங்குவார்கள்.. குறிப்பாக, அக்ஷய் குமாரிடம் பாதுகாவலராக இருக்கும் ஷ்ரசே தேலே ஆண்டுக்கு 1.2 கோடி சம்பளம் பெறுகிறாராம்.
தீபிகா படுகோனிடம் பல ஆண்டுகளாக உதவியாளர் & பாதுகாவலராக இருக்கும் ஜலால் வருடத்திற்கு ரூ. 80 லட்சம் முதல் 1 கோடி வரை பெறுகிறாராம்.. அமிதாப்பச்சனின் பாதுகாவலர் ஜிதேந்திர ஷிண்டேயின் வருடத்திற்கான சம்பளம் ரூ. 1.5 கோடியாகும்..
ஆண்டு வருமானம்: அதேபோல ,ஷாருக்கான் மெய்க்காப்பாளர் ரவிசிங்கின் ஆண்டு சம்பளம் ரூ. 2.5 கோடியாகும்.. சல்மான்கானிடம் பாடிகார்டு ஷேராவிற்கு ஆண்டுக்கு ரூ 2 கோடி சம்பளமாகும்.. சல்மான் கானின் முதல் படத்திலிருந்தே இவர் பாதுகாவலராக இருக்கிறார்.. எனவே, சல்மான்கானின் குடும்பத்தில் ஒருவராகவே கருதப்படுகிறார். நடிகர் அஜய் தேவ்கனின் பாடிகார்ட் மாதம்தோறும் ரூ 13 லட்சமும், நடிகை அனுஷ்கா சர்மாவின் பாதுகாவலர் ஜெய்சிங் மாதம் தோறும் ரூ 9 ட்சமும் சம்பளமாக பெற்று வருகிறார்கள்..

அந்தவகையில், நடிகை ஐஸ்வர்யா ராயின் மெய்க்காப்பாளர் சிவராஜின் சம்பளம் தற்போது வெளியாகியிருக்கிறது.. கடந்த 2015-ம் ஆண்டு சிவராஜின் திருமணத்திற்கு நடிகை ஐஸ்வர்யா ராய் நேரில் சென்று ஒவ்வொருவரின் மனதிலும் இடம் பிடித்து விட்டார்.
ரசிகர் கூட்டம்: உலக அழகி ஐஸ்வர்யா ராயை பொறுத்தவரை, இப்போதும் படங்களில் நடித்து வருகிறார்.. இதுபோக பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றபடி உள்ளார்.. விமான நிலையம், திறப்பு விழா, விருந்து நிகழ்ச்சி மற்றும் திருமணம் போன்ற முக்கிய விசேஷங்களுக்காக பல்வேறு இடங்களுக்கு செல்லும்போபோதெல்லாம், இவரை காண்பதற்காக ஏராளமான ரசிகர்கள் திரண்டு வந்துவிடுவார்கள்..
இதுபோன்ற நேரங்களில் அவருடைய மெய்க்காப்பாளர் சிவராஜ் என்பவர்தான், ஐஸ்வர்யா ராய்க்கு அரணாக நிற்கிறார்... கட்டுக்கடங்காமல் ரசிகர் கூட்டத்திலிருந்து ஐஸ்வர்யா ராயை பாதுகாக்கும் முக்கிய பொறுப்பை சிவராஜ் மேற்கொண்டும் வருகிறார்..

அடேங்கப்பா சம்பளம்: நீண்ட காலமாகவே சிவராஜ் ஐஸ்வர்யா ராயிடம் பணிபுரிந்து வருகிறார்.. கடந்த 2015-ம் ஆண்டு சிவராஜின் திருமணத்திற்கு, ஐஸ்வர்யா ராய் நேரிலேயே சென்று வாழ்த்தியிருந்தது பலரது கவனத்தையும் பெற்றிருந்தது. இப்போது சிவராஜும் பல லட்சங்களில் சம்பளம் பெறுபவர்களில் ஒருவராக அறியப்படுகிறாராம். அதாவது, பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் மேலதிகாரிகளை விட சிவராஜ் போன்ற பாடிகார்டுகள் கூடுதலாக சம்பளம் பெறுகிறார்களாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications