மைக்கோடு ‘சர்வாதிகாரி’யை நீச்சல்குளத்தில் தள்ளி விட்ட சித்தப்பு.. பிக் பாஸிடம் கதறி அழுத ஐஸ்!
பிக் பாஸ் வீட்டில் ராணி மகாராணி டாஸ்க் வன்முறைக் காட்சிகளோடு முடிவுக்கு வந்துள்ளது.
சென்னை: சர்வாதிகாரியான ஐஸ்வர்யாவை தண்ணீரில் தள்ளி, ராணி மகாராணி டாஸ்க்கை முடித்து வைத்துள்ளார் பொன்னம்பலம்.
பிக் பாஸ் வீட்டில் கடந்த சில தினங்களாக ராணி மகாராணி டாஸ்க் நடைபெற்று வந்தது. இதில் வீட்டின் தலைவியான ஐஸ்வர்யா, சர்வாதிகாரியாக மாறி ஆட்சி நடத்தினார். அவருக்கு பாதுகாவலராக டேனியும், ஆலோசகராக ஜனனியும் இருந்தனர். மற்ற போட்டியாளர்கள் பொதுமக்களாக இந்த டாஸ்கில் பங்கேற்றனர்.
இந்த டாஸ்க் படி தன் உத்தரவை மதிக்காத பொதுமக்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கி வந்தார் ஐஸ்வர்யா. இதனால் அவரது சர்வாதிகார ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர மக்கள் தீர்மானித்தனர்.

பொதுமக்கள் விடுவிப்பு:
அதன்படி, ராணியான ஐஸ்வர்யாவை பொன்னம்பலமும், சென்ராயனும் சேர்ந்து நீச்சல் குளத்தில் தள்ளி விட்டனர். கூடவே அவரது சிலையையும் உடைத்தனர். சிறையில் அடைக்கப்பட்ட பொதுமக்களும் விடுவிக்கப்பட்டனர்.

ஐஸ் அதிர்ச்சி:
பொன்னம்பலத்தில் இந்த செய்கையால் ராணி ஐஸ்வர்யா அதிர்ச்சி அடைந்தார். மைக்குடன் அவரை தண்ணீரில் தள்ளி விட்டார் பொன்னம்பலம். இதனால் இன்று அவர் பிக் பாஸ் வீட்டில் தனிமைப் படுத்தப்படுகிறார்.

பாராட்டு:
இது ஒருபுறம் இருக்க, கோபத்துடன் கன்பெக்சன் அறைக்குச் சென்று பிக் பாஸிடம் அழுது பொன்னம்பலம் தன் கழுத்தை நெரித்தத்தை முறையிட்டார் ஐஸ்வர்யா. அதனைக் கேட்டு ஐஸுவை சமாதானப் படுத்திய பிக் பாஸ், அவர் இந்த டாஸ்க்கை சிறப்பாக செய்ததாக பாராட்டினார்.

டாஸ்க் முடிந்தது:
இதன் மூலம் இந்த டாஸ்க் முடிவுக்கு வந்துள்ளது தெரிய வந்துள்ளது. இன்று லக்சரி பட்ஜெட் புள்ளிகள் அறிவிக்கப்பட்டு, அதற்குப் பொருட்கள் வாங்கும் படலம் நடைபெறும். அதோடு, தனிமைச் சிறையில் இருக்கும் வைஷ்ணவி இன்று மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குத் திரும்புகிறார்.

ஆர்யா:
மேலும் கஜினிகாந்த் படக்குழுவினரும் இன்று பிக் பாஸ் வீட்டிற்கு சிறப்பு விருந்தினர்களாக வருகை புரிய இருக்கின்றனர். இதனால், கடந்த சில தினங்களாக களேபரமாக இருந்த பிக் பாஸ் வீடு இன்று கலர்புல்லாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications