பத்மபூஷன் விருதை பெற்றார் நடிகர் அஜித் குமார்.. எழுந்து நின்று கைதட்டி கொண்டாடிய குடும்பத்தினர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் அஜித்குமாருக்கு இன்று மாலை 6 மணிக்கு டெல்லியில் உள்ள ராஷ்ட்ரபதி பவனில் நடைபெற்ற விழாவில் பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது.. இதற்காக அஜித்குமார் தன்னுடைய குடும்பத்தோடு டெல்லிக்கு சென்றிருந்தார்.. ஏர்போர்ட்டில் அவர் குடும்பத்தோடு செல்லும் போது எடுத்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி இருந்தது.

அஜித்துக்கு பத்மபூஷன் விருது

மத்திய அரசின் உயரிய விருதுகளான பத்ம விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு பிரிவுகளில் திறமை வாய்ந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான பத்மபூஷன் விருதுகள் 23 பெண்கள் உட்பட 139 பேருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. பத்மபூஷன் விருதை பொருத்தவரை கலை துறையில் நடிகர் அஜித்குமாருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த விருது வழங்கப்பட இருப்பதற்காக அறிவித்ததும் அஜித்தின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் அவரை வாழ்த்தி வருகிறார்கள்.

Ajith Kumar Padmabhushan

அஜித் வெளியிட்ட அறிக்கை

தனக்கு பத்மபூஷன் விருதுகள் வழங்கப்படுவதை அடுத்து அஜித் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த அறிக்கையில், இந்திய குடியரசுத் தலைவரிடம் இருந்து இந்த மதிப்புக்குரிய பத்மபூஷன் விருதை பெறுவதில் நான் மிகவும் பெருமை அடைகிறேன். இந்திய மதிப்பிற்குரிய மரியாதையை வழங்கிய பிரதமர் மோடிக்கும் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கும் மனதார நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் கூறி இருந்தார்.

மனைவிக்கு நன்றி

அதோடு இந்த தருணத்தில் தன்னுடைய தந்தையும் இருந்திருக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவதாகவும் கூறியிருந்தார். சிறுவயதிலிருந்தே தன் மீது அளவு கடந்த அன்பை பொழிந்து பல தியாகங்களை செய்த எனது தாய்க்கு நன்றி, அதோடு 25 ஆண்டுகளாக எனக்கு துணையாக இருக்கும் என் மனைவி ஷாலினிக்கு நன்றி என்று அஜித் குறிப்பிட்டு இருந்தார்.

ஏர்போர்ட்டில் அஜித்

இந்த நிலையில் இன்று மாலை டெல்லியில் நடைபெற உள்ள விழாவில் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட இருக்கிறது. இந்த பெருமைமிகு விருது பெற்றுக் கொள்வதற்காக அஜித் தன்னுடைய மனைவி ஷாலினி மற்றும் மகள் அனோஷ்கா மகன் ஆத்விக் உடன் விமானம் மூலம் நேற்று இரவு டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.

இன்று மாலை விருது

அப்போது விமான நிலையத்தில் அஜித்தை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தனர். இன்று மாலை 6 மணிக்கு டெல்லியில் உள்ள ராஷ்ட்ரபதி பவனில் நடைபெற்ற விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அஜித்துக்கு பத்மபூஷன் விருதை வழங்கினார்.

யாருக்கெல்லாம் பத்ம விருதுகள்

ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கமாக இருக்கும் நிலையில் கடந்த ஜனவரி 25ஆம் தேதி 2025 ஆம் ஆண்டுக்கான பத்மபூஷன் விருதுகளை மத்திய அரசு அறிவித்தது. அதன்படி நடிகர் அஜித்குமார், நடிகையும் பரதநாட்டிய கலைஞருமான ஷோபனா சந்திரகுமார், தொழிலதிபர் நல்லி குப்புசாமி போன்றோருக்கு இந்த விருதுகள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல கிரிக்கெட் வீரர் அஸ்வின் தமிழ்நாட்டை சேர்ந்த பறை இசை கலைஞர் வேலு ஆசான் உள்ளிட்டோருக்கும் பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+