Ajith: பது ட்ரென்டிங் உருவாக்கிய அஜித்தின் மங்காத்தா!
சென்னை: ரசிகர்களால் தல என்று செல்லமாக அழைக்கப்படும் அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா படத்தை சன் டிவியில் இன்று காலை ஒளிபரப்பு செய்தார்கள்.
Recommended Video
இன்று அஜித் பிறந்தநாள்.. இதை முன்னிட்டு தொலைக்காட்சிகள் அஜித் நடித்த படங்களை போட்டி போட்டு ஒளிபரப்பு செய்து வருகின்றன.இதில் சன் டிவி ஒளிபரப்பு செய்து உள்ள மங்காத்தா கொஞ்சம் ஸ்பெஷல்.
அஜீத் வயதுக்கு ஏற்ற கெட்டப்பில் நடித்து அசத்தி இருப்பார். சால்ட் இன் பெப்பர் ஹேர்ஸ்டைல் இந்த படத்தில் புது ட்ரெண்டை உருவாக்கியது.

கெட்டப்பை மாற்றி
இயக்குநர் வெங்கட் பிரபுவை ஒரே ராத்திரியில் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தது இந்த படத்தில்தான். அஜீத் கெட்டப் இப்படித்தான் இருக்க வேண்டும் என்றும்...ஹேர் ஸ்டைல் சால்ட் இன் பெப்பர் ஸ்டைலில்தான் இருக்க வேண்டும் என்றும் உடை அலங்கார நிபுணர் வாசுகி பாஸ்கர் சொன்னபோது வெங்கட் பிரபு உடனடியாக ஓகே சொல்லிவிடவில்லையாம்.

வாசுகி பாஸ்கர்
இளையராஜா மற்றும் கங்கை அமரனின் அண்ணன் பாஸ்கரின் மகள் வாசுகி. இவர் உடை அலங்கார நிபுணர். மற்றும் நடிகர் நடிகைகளுக்கு உடைகளுக்கு ஏற்ப மேக்கப், தலை அலங்காரம் என்று டிசைன் செய்பவர். இவர் ஆரம்பத்தில் அஜீத்துக்கு சால்ட் இன் பேப்பர் ஹேர்ஸ்டைல்தான் என்று சொல்லும்போது வெங்கட் பிரபு வெலவெலத்து போய்விட்டாராம்.

ரசிகர்கள் ஏற்பார்களா?
அஜீத்தை ஏற்கனவே வயதுக்கு ஏற்ற கதாபாத்திரத்தில் காண்பிக்கிறோம். இதில் வெள்ளை முடியுடன் அவரை காண்பிக்கும்போது அவரது ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்கிற பயம் வந்து தங்கை வாசுகிக்கு ஓகே சொல்லாமல் இருந்தாராம். வாசுகி பாஸ்கர் அதே பிடிவாதத்தில் இருக்க. தலகிட்டே ஒரு வார்த்தை கேட்டுவிடலாம் என்று கேட்டாராம் வெங்கட் பிரபு.

தல ஓகே
தல உடனடியாக நல்லாருக்கும்..ஓகே அப்படியே பண்ணிடலாம் என்று சொன்னாராம். இப்படி உருவான அந்த சால்ட் இந்த பெப்பர் ஹேர் ஸ்டைலை அஜீத் ரசிகர்கள் மட்டும் இல்லை... நடிகர்கள் பலரும் எல்லாரும் பின்பற்றினார்கள். இப்போதும் வெள்ளை முடியுடன் இருப்பது ஒரு ஸ்டைல் என்று கெத்தாக சுற்றுகிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications