Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாக சைதன்யா தம்பி அகிலுக்கு திருமண நிச்சயதார்த்தம்.. ஹேப்பி தகவலை பகிர்ந்த நாகார்ஜுனா

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் நாகர்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனிக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாகர்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, தனது காதலி ஜைனப் ராவ்ஜி என்பவரை திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் செய்து கொண்டார் என்ற மகிழ்ச்சியான செய்தியை தந்தையான நடிகர் நாகர்ஜுனா சமூக வலைதளங்களில் இன்று மாலை பகிர்ந்துள்ளார்.

நாகர்ஜுனா தனது ட்விட்டர் பக்கத்தில் நிச்சயதார்த்த புகைப்படத்தை பகிர்ந்து, "எங்கள் மகன் Akhil Akkineni அவர்களுக்கும், எங்கள் மருமகள் ஆக இருக்கும் Zainab Ravdjee அவர்களுக்கும் இடையேயான நிச்சயதார்த்தத்தை அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்! ஜைனப்பை எங்கள் குடும்பத்தில் வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இந்த இளம் ஜோடிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து, அன்பு, மகிழ்ச்சி மற்றும் வாழ்க்கை முழுவதும் எண்ணற்ற ஆசீர்வாதங்களைத் தந்து வாழ்த்துங்கள்!" என்று குறிப்பிட்டுள்ளார்.

nagarjuna naga chaitanya wedding

அகில் அக்கினேனி 2015 ஆம் ஆண்டு "அகில்: தி பவர் ஆஃப் ஜுவா" என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அவர் "Hello" மற்றும் "மிஸ்டர். மஜ்னு" போன்ற படங்களிலும் நடித்துள்ளார். ஆனால், அவரது படங்கள் தமிழ்நாட்டில் பெரிதாக வெற்றி பெறவில்லை. இருப்பினும், இந்த நிச்சயதார்த்தம் தெலுங்கு திரையுலகில் பேசு பொருளாகியுள்ளது. இனி வரும் நாட்களில், திருமணம் பற்றிய அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம்!

nagarjuna naga chaitanya wedding

நாகர்ஜுனாவின் மூத்த மகன் நடிகர் நாக சைதன்யா (Naga Chaitanya) அண்மையில் தனது மனைவி சமந்தா (Samantha) வை விவாகரத்து செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. தற்போது அகில் அக்கினேனியின் நிச்சயதார்த்தம், நாகர்ஜுனா குடும்பத்தினர் மத்தியில் மகிழ்ச்சியையும் கொண்டாட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

nagarjuna naga chaitanya wedding
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+