Alauddin Serial: இமான் அண்ணாச்சி எங்கப்பா.. அவர் இடத்தைக் கைப்பற்றிய அலாவுதீன்!
சென்னை: எப்போதும் அதிருப்தி, எதிலும் அதிருப்தி. இதுதான் சன் டிவியின் வெற்றி ஃபார்முலா போலும். அடிக்கடி நிகழ்ச்சிகளை மாற்றிக் கொண்டே இருப்பது, அதிலும் திருப்தி அடையாமல் இருப்பது, உடனடியாக அதை நிறுத்திவிடுவது, இந்த நடவடிக்கைகளோடு என்றுதான் சன் டிவி ஒடிக் கொண்டு இருக்கிறது.
ஞாயிறு காலை 9 மணி நேரத்தில் கடந்த இரண்டு மாதமாக திரைப்படங்களை ஒளிபரப்பி வந்த சன் டிவி, இப்போது அதில் வேறு மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.
பழையபடி ஞாயிறு காலை 9 மணிக்கு இந்த சீரியலை ஒளிபரப்ப உள்ளது சன் டிவி. அலாவுதீன் என்கிற பெயரில் சீரியல் ப்ரோமோ ஒளிபரப்பாகி வருகிறது. அநேகமாக டப்பிங் சீரியலாக இருக்கும் என்பது போலத்தான் தெரிகிறது.

சொல்லுங்கண்ணே இமான்
ஞாயிறு தோறும் கடந்த சில வருடங்களாகவே இமான் அண்ணாச்சி நடத்தி வந்த சொல்லுங்கண்ணே சொல்லுங்க நிகழ்ச்சி தொடர்ந்து ஒளிபரப்பாகி வந்தது. அத்துடன் குட்டிச் சுட்டீஸ் என்கிற நிகழ்ச்சியையும் அண்ணாச்சி தொகுத்து வழங்கி வந்தார். ஒரு கட்டத்தில் இந்த நிகழ்ச்சியும் நிறுத்தப்பட்டு, சீனியர் சுட்டீஸ் என்று ஒரு நிகழ்ச்சியை சீரியல் இளம் நடிகைகளை வைத்து தொகுத்து வழங்கி வந்தார்.

அண்ணாச்சிக்கு என்னாச்சு?
அண்ணாச்சிக்கு என்னாச்சோ, இல்லை சினிமாவில் பிஸியாகி விட்டதாலோ என்னவோ. சமீப காலமாக இமான் அண்ணாச்சியை சன் டிவியில் காணவில்லை. படங்களில் பிசியாகி இருப்பார் போலும்.அவருக்கு கோட் சூட் போட்டு அழகு பார்த்த சன் டிவி கண்டு கொள்ளாமல் விட்டு விட்டதோ! எதுவும், எப்போதும் நடக்கலாம், எதிர்பாராததை எதிர்ப்பாருங்கள் என்பதற்கு சன் டிவியே ஒரு சிறந்த உதாரணம்.

ஒரு மணிநேரம்
எப்படியதும் அலாவுதீன் சீரியல் ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும். ஒரு படம் ஒளிபரப்பாகும் இரண்டரை மணி நேரத்தில் ஒரு மணி நேரத்தை சீரியலுக்கு ஒதுக்கும் சன் டிவி. மீதி நேரத்தை என்ன செய்து உபயோகப் படுத்திக் கொள்ளும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சீரியல் நடிகைகள்
ரியாலிட்டி ஷோ நடத்துகிறேன் பேர்வழி என்று சன் டிவி எப்போதும், சீரியல் நடிகர் நடிகைகளை வைத்து எதாவது நிகழ்ச்சிகளை நடத்தும். இதை அனைத்து டிவி சேனல்களும் கடைப்பிடிக்கும் நிலையில், சன் டிவியும் இதை செய்தால் நிச்சயம் போரடிக்கும். இதை உணர்ந்து சன் டிவி செயல்பட்டால் தேவலை.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications