மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் எனக்குத்தானே.. சரணம் சரணம்தானே..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமேசான் பிரைம் வீடியோவில் அலெக்ஸ் அசத்தும் ஸ்டேண்டப் காமெடி வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வீடியோ பலரையும் பல முறை பார்க்க வைத்து வருகிறது.

யூகி சேது பாணியில் வாத்தியம் ஒன்றை வைத்துக் கொண்டு ஒரு இசை அமைப்பாளர் அல்லது பாடகர் இவர்களை ரசிக்கும்படி நக்கல் நையாண்டி செய்கிறார். அலெக்ஸ் அலப்பறையைப் பார்க்காதவர்களே கிடையாது. குறுகிய காலத்தில் படு வேகமாக முன்னேறி விட்டார் அலெக்ஸ். அத்தனை திறமை இவரிடம்.

ஸ்டேண்டப் காமெடி என்றாலே கொஞ்சம் ஆங்கிலம் கொஞ்சம் உண்மை அதில் நக்கல் நையாண்டி என்பதோடு திறமையும் கொட்டிக் கிடப்பதுதானே... அது இவரிடமும் இருப்பதால் நம்மால் நிறையவே சிரிக்கவும் ரசிக்கவும் முடிகிறது.

மாசிமாசம் ஆளான பொண்ணு

மாசிமாசம் ஆளான பொண்ணு

பத்மஸ்ரீ கே.ஜெ. ஜேசுதாஸ் அவர்கள் குரலில் பாடிய பாடலான மாசி மாசம் ஆளான பொண்ணு பாடலையும் அவர் பாடிய ஹரிவராசனம் பாடலையும் ஒரே மெட்டில் பாடி காண்பித்து காமெடி செய்தார் அலெக்ஸ்.

ரெண்டு நாள் தூங்கமுடியாது.

ரெண்டு நாள் தூங்கமுடியாது.

லிரிக்ஸ் படிச்சாலே ரெண்டு நாள் தூங்க மாட்டீங்க.. ஆனால், ஜேசுதாஸ் சாமி பக்தி சாமி. சரணம்லாம் காஞ்சி காமாட்சி ஸ்லோகம் மாதிரி போகும்... காம லீலா வினோதம்..மோக கவிதா விலாசம்.. படிக்க படிக்க எடுக்க எடுக்க ஓஹோஹோ...இப்படிப் போகும்.. தெலுகுவில் பாலகிருஷ்ணா இஷ்டத்துக்கு ஸ்டெப் பை ஸ்டெப் போவார். அவர் பால கிருஷ்ணா இல்லை பலான கிருஷ்ணா என்று கூறுவார்.

சுவாமி சரணம் ஐயப்பா

சுவாமி சரணம் ஐயப்பா

சபரி மலையில் ஹரிவராசனம் பாடினால்தான் ஐயப்பன் கண் விழிப்பார். கிராமத்தில் ஒரு கான்செப்ட் கார்த்திகை மாதத்தில் உண்டு. ஜேசுதாஸ் ஐயப்பன் கான்செப்ட் என்று விடிய விடிய ஜேசுதாஸ் பாடிய ஐயப்பன் பாடிய பாடல்களை பாட வேண்டும் என்று. ஆனால், இப்போது அதையே இப்படி மாற்றி பாடினாலும் ஆச்சரியம் இல்லை என்று மாசிமாசம் ஆளான பொண்ணு என்று மெட்டில் சுவாமி சரணம் பாடலை பாடினார்.

மனம் களிக்க களிக்க

மனம் களிக்க களிக்க

படிதான் பதினெட்டு பதினெட்டு..சபரி மலையை நாடி குளிக்க குளிக்க மனம் களிக்க களிக்க ஓஹோஹோ... படிதான் பதினெட்டு பதினெட்டு உன் அடித்தான் தினம் தொட்டு தினம் தொட்டு சுவாமியே சரணம் ஐயப்பா.. சரணம் ஐயப்பா சாமி..என்று பாடினால் .. மறுநாள் அந்த பாடகருக்கு சம்பளம் கட் என்று சொன்னார். நிகழ்ச்சி சுவாரஸ்யமாகத்தான் இருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+