தக்காளி, பப்பாளி, மண்டை.. எல்லாமே ஏடாகூடம்.. இதுக்குப் பேரு சீரியலா.. என்னாகப் போகுதோ!
சென்னை: ஆம்பளை சட்டை...பேன்ட்...கிராப்பு வெட்டிய தலைன்னு சுத்தறாங்க ஜீ தமிழ் டிவியின் சத்யா சீரியலில் சத்யா ரோல் பண்றவங்க. இது போறலைன்னு இவங்க கூட சுத்தறவங்க அத்தனை பேரும் பெரிசும், சிறுசுமான பசங்க.
வீட்டில் கல்யாணத்துக்கு ஒரு அக்கா இருக்க, இவர் மிக செல்லமான சுட்டிப் பெண் என்பதாலோ என்னவோ, சத்யாவைத் தண்ணி தெளிச்சு விட்டது போல எப்போது பார்த்தாலும் ஊர் சுத்தறதுன்னு கொஞ்சம் கதை வித்தியாசமா தெரியுது.
போகப்போக கதை எப்படிப் போகும், ஏதாவது படத்தைக் காப்பி அடிச்சு சீன் வச்சு சீரியலை ஓட்டுவாங்களா... அப்படி எல்லாம் எதுவும் செய்யாம கதையை கொண்டு போனா பார்க்கற ஜனத்தொகை கூடும்.

தக்காளி, குருவி
இப்பவே சத்யாவோட சுத்தற பசங்க பேரு, தக்காளி, குருவி, பப்பாளி. பனங்கொட்டை மண்டைன்னு கில்லி பட ரேஞ்சுல இருக்கு. இவன் அப்பாவை கேவலமா நான் திட்டுவேன், அவன் என் அப்பாவை ரொம்ப கேவலமா திட்டுவான்னு சந்தானம் சொல்ற மாதிரி சீன்ஸ்லாம் வருது...

வம்பு
எடுத்த எடுப்பிலேயே அக்காவைப் பார்க்க வரும் மாப்பிள்ளை கூட வம்பு. ஆனா, பாவம் பொண்ணோட தங்கச்சி இவதான்னு மாப்பிள்ளைக்கு தெரியாது. குங்ஃபூ, கராத்தேன்னு கலக்கற பொண்ணு.

பணம்
அக்கா பெரிய கல்லூரியில் படிக்க, ஒரு நாள் அம்மா இபி கார்டில் வைத்திருந்த அஞ்சாயிரம் ரூபாய் பணம் காணாம போயிருது. இந்த பணத்தை எடுத்தது அக்காதான். அஞ்சாயிரம் ரூபாய்க்கு செருப்பு வாங்கி போட்டு ஆடம்பர வாழ்க்கை வாழ பணத்தை திருடிவிடுகிறாள்.

பழியை
நீ எடுத்தேன்னு பழியை ஏத்துக்கோன்னு சத்யாகிட்ட கேட்கறா அக்கா. .. அதுக்கு சத்யா உன்னாலதான் நான் அக்யுஸ்ட்டாவே ஆனேன்..அம்மா என்மேல செம கோவத்துல இருக்கு, பின்னிப்புடும் பின்னி...இவ்ளோ செலவுல உனக்கு செருப்பு அவசியமான்னு கேட்கறா.

காலேஜை மாத்தணும்
இல்லைடி நான் படிக்கற காலேஜுல இப்படி போனாத்தான் மதிப்பு... முதலில் நம்ம வாழ்க்கை ஸ்டைலை மாத்தனும்டின்னு அக்கா சொல்றா...இல்லையில்லை.. முதலில் நீ படிக்கற காலேஜை மாத்தணும்னு தங்கை சொல்லிட்டு, இரு கொஞ்ச நேரத்துல பணத்தோட வரேன்னு கிளம்பி போறவ, அக்காவைப் பார்க்க சுவரேறி குதித்து வரும் மாப்பிள்ளையிடமே ஃபைன் போட்டு பணம் வாங்கி வந்து தாயிடம் தருகிறாள் சத்யா
இப்படி போகும் சத்யா சீரியல் ஜீ தமிழில் வெற்றி நடை போடுமா பொறுத்திருந்து பார்ப்போம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications