எப்போ பார்த்தாலும் ஃப்ரீ ஹேரா? முகம் தெரியலையே!
சென்னை: தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்கும் பெண்கள் அழகாகத்தான் இருக்கிறார்கள். அதில் குறை ஒன்றும் சொல்வதற்கு இல்லை. புதுப்புது பெண்களை ஹீரோயின்களாக அறிமுகப்படுத்துவதில் சானல்களுக்கு இடையில் போட்டா போட்டித்தான்.
ஆனால், வேற்று மாநிலத்து சீரியல் நடிகைகள் மட்டும் இல்லாது நம்ம தமிழ் பெண்களும் கூட ஃப்ரீஹேர் என்று எப்போதும் முடியை விரித்து போட்டுக்கொண்டு நிற்கிறார்கள். இதனால் சிலரின் முகம் அடையாளம் கூட தெரியாமல் போய்விடுகிறது.
படுத்து எழுந்தாலும் முடியை விரித்து போட்டுக்கிட்டுத்தான்...தூங்கப் போனாலும் முடியை விரிச்சுப் போட்டுக்கிட்டுத்தான். எழும்போதும் உதட்டில் அப்பிய லிப்ஸ்டிக்த்தான்.. அய்யோ பாவம்ன்னு வந்துருது இந்த பொண்ணுங்களை பார்க்கும்போது.

முடியை விரிச்சு போட்டு
ஒரு நேர்காணலில் நடிகை சச்சு கூட சொல்லி இருந்தார். இப்போது நடிக்கும் புது நடிகைகள் எப்போதும் தலையை விரிச்சு போட்டுக்கிட்டு நடித்து வருவதால், நடிகைகளின் முகம் அவ்வளவாக மனதில் பதிய மாட்டேன் என்கிறது. இவர் எந்த நடிகை, எந்த படத்தில், எந்த சீரியலில் நடித்தார் என்பது கூட நினைவுக்கு வர மாட்டேன் என்கிறது என்று.

அழகழகா பின்னல்
அழகழகா பின்னல் போட்டு, பூ வச்சா எவ்வளவு அழகா இருப்பார்கள் தெரியுமா இன்றைய நடிகைகள் என்றும் அவர் சொல்லி இருந்தார். அதேபோலத்தான் இப்போது சீரியலில் நடிக்கும் பெண்கள் அடுப்பு பத்த வச்சால் கூட தலை முடியை விரிச்சு போட்டுக்கிட்டு நிக்கறாங்க. தலை பின்னலிட்டால் அழகு என்ன குறைந்தா போய்விடுகிறது? ஒரு நாள் இப்படி மறுநாள் இப்படி என்று கூட கூந்தல் அலங்காரம் செய்துக்கொள்வதில்லை.

அப்பிய மேக்கப்
வயது வித்தியாசம் இல்லாமல் எல்லார் முகங்களிலும் அப்பிய மேக்கப் என்று பார்க்கவும் சகிக்கலை. பல ஆண்கள் சீரியலைப் பார்த்த உடன், விஜய் சேதுபதி பாணியில் ப்ப்பா எவ்ளோ மேக்கப் என்றுதான் சலித்துக் கொள்கிறார்கள். மேக்கப்பை கொஞ்சமா குறைத்துக்கொண்டால்தான் என்னவாம் என்றும் அங்கலாய்ப்பு வருகிறது.

நாளும் கிழமையும்
நாளும் கிழமையும் தலை முடியை விரித்துப் போட்டுக்கொண்டு நிற்க கூடாது, அடுப்படியில் வேலை பார்க்கும்போது தலை முடியை இறுகப் பின்னி இருக்க வேண்டும். அல்லது தலை முடியை தூக்கி இறுக்க கொண்டை போட்டுக்கொள்ள வேண்டும். சுமங்கலி பெண்கள் தலைக்கு குளித்தால் கூட தலைமுடி நுனியில் முடிந்துக்கொண்டு விளக்கேற்ற வேண்டும் என்று வீட்டுப் பெரியவர்கள் சொல்லுவார்கள்.
ஆனால், இங்கே தலை முடியை விரிச்சு போட்டுக்கிட்டு, அடுப்படியில் நிற்பதும், சாமிக்கு விளக்கு ஏற்றுவதும்.அப்படியே படுக்கைக்கு போவதும் என்று சீரியல்களில் பெண்கள் செய்யும் அட்டகாசம் தாங்க முடியலை.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications